திங்கள், மார்ச் 01, 2010

முதல் வேலை..............

என்ன வேலை இது
எனக்கு பிடித்தவாறு உடையனிய மறுக்கும்
வேலை!!!

என் தாய்மொழி
என் நாவில் எட்டிபார்க்க கூட தடைபோடும்
வேலை!!!

போலியான புன்னகையை என்
முகத்தில் எப்போதும் ஒட்டிவிட்ட
வேலை!!!

சரித்திரம் படைக்கவேண்டும்!
புரட்சியாய் புறப்படவேண்டும்!
தேசத்தை நிமிர்த்த வேண்டும் என்ற
என் கனவைஎல்லாம் கம்ப்யூட்டர் லில்
கட்டி போட்ட வேலை!!!

தாய்நாட்டில் கற்றதையும் பெற்றதையும்
டாலருக்கு அடகு வைத்த
வேலை!!!

குவியலாக இருகிப்போன
இந்த கனவையெல்லாம்
சுக்குனுறாய் சிதறடித்து விட்டது
இரு துளி கண்ணீர்!!

ரொம்ப சந்தோசமாக இருக்குடா"
முதல் மாத சம்பளத்தை நீட்ட
என் தாயின் கண்ணில் தோன்றிய
ஒரு துளி கண்ணீர்!!!!

ரொம்ப கஷ்டமாக இருக்குடா
வெகு நாளாக வேலை தேடும்
நண்பனின் கண்ணில் தோன்றிய
மற்றொரு துளி கண்ணீர்!!!!

5 கருத்துகள்:

மதுரை சரவணன் சொன்னது…

வேலை வலிக்கிறது. அருமை. கவித்துவமாய் வந்துள்ளது. வாழ்த்துக்கள்.

திவ்யாஹரி சொன்னது…

//தாயின் கண்ணீர்..
வெகு நாளாக வேலை தேடும் நண்பனின் கண்ணீர்..//

பல சமயம் கண்ணீர் தான் நம் வாழ்வையே மாற்றி விடுகிறது நண்பா.. அருமை..

S Maharajan சொன்னது…

திவ்யாஹரி சொன்னது…
//தாயின் கண்ணீர்..
வெகு நாளாக வேலை தேடும் நண்பனின் கண்ணீர்..//

பல சமயம் கண்ணீர் தான் நம் வாழ்வையே மாற்றி விடுகிறது நண்பா.. அருமை..
.....................................
உண்மைதான் தோழி

S Maharajan சொன்னது…

"Madurai Saravanan சொன்னது…
வேலை வலிக்கிறது. அருமை. கவித்துவமாய் வந்துள்ளது. வாழ்த்துக்கள்."
.........
முதல் வருகைக்கு நன்றி! நன்றி!

தமிழ் சொன்னது…

வலியின் வேதனை வாய் விட்டு சொல்லி வீட்டீர்கள்

கருத்துரையிடுக