புதன், செப்டம்பர் 22, 2010

நான் எந்திரன் பார்பேன்

எந்திரன்

இது நாள் வரை பதிவுலக நண்பர்கள் பலர் "தலைவர் ரஜினியை"விமர்சித்தி எழுதிய எந்த பதிவுக்கும் நான் கோவமாக பின்னுட்டம் கூட இட்டது கிடையாது. நேற்று நண்பர் ஒருவர் பதிவை பார்த்த போது அதில் எந்திரன் படத்துக்கு கேவலமாக வாழ்த்து தெரிவித்து இருந்த ஒருவருக்கு காட்டமாக பதில் சொல்லி இருந்தார்.வாழ்த்து சொன்ன அந்த நபர் தன் "பக்கங்களில்" எவ்வாறு குறிப்பிட்டு இருந்தார் என்றால் "சீக்கிரம் அந்த ’சனியன்’ வந்து தொலையட்டும் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்ளலாம்." அதன் பின் அவர் பக்கங்களில் (பதிவுகளில்௦௦௦) சென்று நான் படித்த போது தான் தெரிந்தது அவரருடைய கேவலமான பேச்சு (பதிவு) எப்படி இருந்தது என்று.

150 கோடியில் சன் நிறுவனம் படம் தயாரிப்பது குற்றமாம்?

அதில் ரஜினி நடிப்பது மாபெரும் குற்றமாம்?

வளரும் படைபாளிகளை எந்திரன் நசுக்கி விடுமாம்.எந்திரன் என்ன ரஜினி நடிக்க இயலாத படமா? என்னவோ தமிழ்நாட்டை சன்டிவியும்,ரஜினியும் சேர்ந்து கொள்ளை அடிப்பதாக இவர்களின் புலம்பல்கள். இவர்களுக்கு ரஜினி என்றால் ஏன் பிடிக்கவில்லை என்று தெரியவில்லை எவ்வளவு தரம் தாழ்த்தி முடியுமோ அவ்வளவு பேசவும் ஏசவும் செய்து விட்டு,ஹைலைட்டாக காமெடி வேறே செய்வர்கள் முன்பு இவர்கள் எல்லாருமே ரஜினி ரசிகர்களாம்.ஆனால் இப்போது தான் இவர்களுக்கு ரஜினியை பிடிக்காதாம்.அவர் முன்பு இருப்பது போல இருந்தால் இன்று அவரை பற்றி இவ்வளவு பேசவும்,எழுதவும் முடியுமா? பல வருடங்களுக்கு முன்பு ஒரு முறை கமல் ஏதோ சொல்லி விட்டார் என்று அவரை அடிக்க பாய்ந்தவர் ரஜினி என்று இங்கே எத்தனை பேருக்கு தெரியும்?  அதன் பின் தன் தவறை உணர்ந்து இன்று வரை கமலிடம் நட்பு பாராட்டி வருகிறார்,பிறகு பிரபலம் கொடுத்த அதிகாரத்தை அவர் தனது எதி‌‌ரிகளின் மீது ஒருபோதும் பிரயோகித்தது இல்லை. இருபத்தைந்து வருடங்களா தன்னை நம்பி பணம் போட்ட தயாரிபாளர்களை அவர் என்றுமே ஏமாற்றவில்லை.தமிழ் சினிமாவை உலக வர்த்தகத்துக்கு கொண்டு சென்ற ஒரே நடிகர் ரஜினி மட்டுமே!  சிவாஜி,எம்ஜிஆரை விடக்கூட ரஜினி ஒரு படி மேலேதான் நிற்கிறார்.அவரை விமர்சிபவர்களை கேலவமாக என்னாலும் எழுதமுடியும் ஆனால் நான் அதை செய்ய விரும்பவில்லை

நான் ரஜினி வெறியன்

ஆரம்பத்தில் இருந்தே உண்மை ரஜினி ரசிகர்கள் இன்று வரை அவரது உண்மை ரசிகர்களே. அடிக்கடி நிறம் மாற நாங்கள் பச்சோந்திகள் அல்ல.! இவர்களுக்கெல்லாம் ஒன்று சொல்லுகிறோம்

ரஜினி தனி மனிதன் அல்ல....

நான் எந்திரன் னை 100 முறை பார்பேன்

இந்தத் பதிவு எழுதகாரணமாகஇருந்த "பாகீரதி" கார்த்திக்க்கு என் நன்றிகள்என்றும் அன்புடன்
 

ஞாயிறு, செப்டம்பர் 19, 2010

சிந்தனைகள்_3உயர்ந்த இலக்கு ஒன்றே


செய்வனை திருந்த செய்!

இரு கண்கள்

1.வந்தால் போகாதது , இரண்டு : புகழ், பழி

2.போனால் வராதது இரண்டு : மதிப்பு( மானம்) உயிர்

நான்கு உணவருந்தும் திசை பலன்கள்

கிழக்கு : ஆயுள் பெருகும்

மேற்கு : செல்வம் பெருகும்

தெற்கு : புகழ் பெருகும்

வடக்கு : உணவு அருந்துவதை தவிர்க்கலாம்

ஐவகை முன்னோடிகள்

1.வளர்த்த பெற்றோர்கள்

2.கல்வி கற்பித்தோர்

3.மனமுடித்த உறவினர்

4.பொருள் தேட தொழில்கற்பித்தோர்

5.இடுக்கண் களையும் நட்பு

ஆறு வகை முட்டாள்கள்

1.நேற்று செய்த தவறை திருத்தி கொள்ளாதவன்

2.வாய்பு வரட்டும் என்று காத்து இருபவர்கள்

3.அவசியம் என்று உணர்ந்த பின்பும் தன்னை மாற்றிகொள்ளதவர்கள்

4.தேவை இல்லாத இடத்தில் பொருளை வாரி இறைபவர்கள்

5.வெற்றியாளருக்கு பின்னால் யாரோ இருக்கிறார்கள் என்று  தவறாக  நினைபவர்கள்

6.இனி என்னால் முடியாது என்று நுனிபுல் மேய்ந்து விட்டு பிரச்னையை   தீர்க்காமல் ஒதுங்குபவர்கள்

ஏழு நன்மைகள்

1.ஏழ்மை யிலும் நேர்மை

2.கோபத்திலும் பொறுமை

3.தோல்வியிலும் விடா முயற்சி

4.வறுமையிலும் பரோபகாரம்

5.துன்பத்திலும் தைரியம்

6.செல்வதிலும் எளிமை

7.பதவியிலும் பணிவு


அனுதின‌மும் ஆனந்தமாய் வாழ்ந்திட‌ வாழ்த்துக்க‌ளோடு!

செவ்வாய், செப்டம்பர் 14, 2010

சிந்தனைகள்-2


நவ ரத்தினங்கள்

1.புத்தகத்தை வாங்கலாம் ஆனால் அறிவை வாங்க முடியாது!

2.உணவை வாங்கலாம் ஆனால் பசியை வாங்க முடியாது!

3.பகட்டை வாங்கலாம் ஆனால் பண்பாட்டை வாங்க முடியாது!

4.கட்டிலை வாங்கலாம் ஆனால் உறக்கத்தை வாங்க முடியாது!

5.கேளிக்கைகளில் கலந்து கொள்ளலாம் ஆனால் மகிழ்ச்சியை வாங்க  முடியாது!

6.ஆயுதங்களை வாங்கலாம் ஆனால் வீரத்தை வாங்க முடியாது!

7.ஊழியர்களை அமர்த்தலாம் ஆனால் சேவை மனப்பான்மையை வாங்க முடியாது!

8.அமைதியான இடம் வாங்கலாம் ஆனால் மன நிம்மதியை வாங்க முடியாது!

9.சிலையை வாங்கலாம் ஆனால் ரசிக்கும் திறனை வாங்க முடியாது!

உயரிய பத்து வெகுமதிகள்

1.மிக மிக நல்ல நாள்     : இன்று

2.மிக பெரிய வெகுமதி : மன்னிப்பு

3.உயர்வுக்கு வழி             : உழைப்பு

4.நழுவவிட கூடாதது   : வாய்ப்பு

5.விலக்கவேண்டியது   : விவாதம்

6.கொடிய நோய்              : பொறமை

7.மிக பெரிய தேவை    : சமயோசித புத்தி

8.செய்யவேண்டியது     : உதவி

9.தவிர்க்க வேண்டியது   : வெறுப்பு

10.நம்பகூடாதது                 : வதந்தி

வாழ்க்கை

வாழ்க்கை ஒரு விளையாட்டு  அதனை விளையாடுங்கள்

வாழ்க்கை ஒரு வினோதம்  அதனை கண்டறியுங்கள்

வாழ்க்கை ஒரு பாடல் அதனை பாடுங்கள்

வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம்  அதனை பயன்படுத்திகொள்ளுங்கள்

வாழ்க்கை ஒரு உறுதிமொழி  அதனை நிறைவேற்றுங்கள்

வாழ்க்கை ஒரு அன்பு  அதனை நேசியுங்கள்

வாழ்க்கை ஒரு அழகு   அதனை ஆராதியுங்கள்

வாழ்க்கை ஒரு இலக்கு   அதனை எட்டிபிடியுங்கள்

வாழ்க்கை ஒரு துயரம்   அதனை தாங்கிகொள்ளுங்கள்

வாழ்க்கை ஒரு உணர்வு    அதனை உணர்ந்துகொள்ளுங்கள்

வாழ்க்கை ஒரு போராட்டம் அதனை எதிர் கொள்ளுங்கள்

வாழ்க்கை ஒரு குழப்பம் அதற்கு விடை காணுங்கள்

வாழ்க்கை ஒரு ஞானம்  அதனை அறிந்து கொள்ளுங்கள்


அனுதின‌மும் ஆனந்தமாய் வாழ்ந்திட‌ வாழ்த்துக்க‌ளோடு!

திங்கள், செப்டம்பர் 06, 2010

சிந்தனைகள்!· ஒரு மனிதன் எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று          தீர்மானித்துக் கொள்கிறானோ, அந்த அளவுக்குத்தான் அவன் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.


· எதையும் சிறப்பாகவும், முழுமையாகவும் நாம் செய்ய வேண்டுமானால் அதற்கு ஒரு வழி இருக்கிறது. கற்பனையில் அதைப் பயிற்சி செய்வதுதான் அந்த வழி.

· நமக்கு என்ன கிடைத்திருக்கிறதோ அதைப்பற்றி நாம் அதிகம் எண்ணிப் பார்ப்பதில்லை. எது நம்மிடம் இல்லையோ அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு இருக்கிறோம்.

· நீங்கள் விரும்பாதவர்களைப் பற்றி சிந்தித்து ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்காதீர்கள்.

· மனச் சுமையை இறக்கிவைக்கக் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் மனதைக் குடைவது எதுவானாலும், அதனை உடனுக்குடன் பேசி வெளியேற்றி விடுங்கள்.

· காரியத்தைச் செய்யுங்கள்; சக்தி தானாகவே வரும்.

· மனிதன் எதை நினைத்தாலும், எதை நம்பினாலும், அதை சாதிக்க முடியும். தயக்கமோ அச்சமோ இன்றி வேலையைத் தொடங்குங்கள். செய்யத் தொடங்கிவிட்டால், செய்வதற்குத் தேவையான சக்தி உங்களுக்குத் தானாகவே கிடைத்துவிடும்.

.நான் நீ என்னும் போக்கை தவிர், நாம் என்னும் உணர்வை பெறு

.குடும்பம் என்பது இரு சக்கர வாகனம் போன்றது, கணவன்
மனைவி என்ற இரு சக்கரமும் ஒத்து இருந்தால் தான்
வண்டி ஓடும்.வாழ்கை ரகசியங்கள் எட்டு

1. அன்பு காட்டு ஆனால் அடிமை ஆகாதே!

2. இரக்கம் காட்டு ஆனால் ஏமாந்து விடாதே

3. பணிவாய் இரு ஆனால் கோழையாய் இராதே!

4. கண்டிப்பா இரு ஆனால் கோவ படாதே!

5. சிக்கனமாய் இரு ஆனால் கஞ்சனாய் இராதே!

6. வீரனாய் இரு ஆனால் போக்கிரியாய் இராதே!

7. சுறுசுறுபாய் இரு ஆனால் பதட்ட படாதே!

8. உழைப்பை நம்பு ஆனால் கடவுளை மறந்து விடாதே !


என்றும் அன்புடன்