கதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், மார்ச் 24, 2010

மனம் விட்டு பேசுங்கள்

உறவுகளானாலும் சரி, நட்புகளானாலும் சரி மனம் விட்டுப் பேச முடிந்த அளவு மட்டுமே ஆழப்படுகின்றன. பலம் பெறுகின்றன.

மனம் விட்டுப் பேசுவது நின்று போகுமானால் அனுமானங்களும், சந்தேகங்களும் நிஜங்களின் இடத்தைப் பெற்றுக் கொண்டு எல்லாவற்றையும் நிர்ணயம் செய்ய ஆரம்பித்து விடுகின்றன. பின் அந்த உறவுகளில் விரிசல் விழுகின்றன; நட்புகள் துண்டிக்கப்படுகின்றன. என்றோ படித்த ஒரு வியட்நாமியக் கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு இராணுவ வீரனும், ஒரு இளம் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். மூன்றே மாதத்தில் போர் ஏற்பட இராணுவ வீரன் போருக்குப் போக வேண்டியதாகி விடுகின்றது. அவன் போகும் போது மனைவி கர்ப்பிணி. இருவருமே மிகுந்த மன வருத்தத்தில் பிரிகிறார்கள். போர் முடிந்து உயிரோடு திரும்புவது நிச்சயமில்லையல்லவா?

ஆனால் அதிர்ஷ்டவசமாக போருக்குப் போன வீரன் மூன்றாண்டுகள் கழிந்து வெற்றிகரமாக திரும்புகிறான்.. விமானதளத்தில் அவன் மனைவியும், மகனும் அவனுக்காகக் காத்திருக்கிறார்கள். மனைவியையும் மகனையும் ஆனந்தமாகக் கட்டியணைத்துக் கொள்கிறான் அந்த வீரன். அவன் கண்ணிலும், மனைவி கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர்.

வீடு திரும்புகிறார்கள். கணவனுக்குப் பிடித்த சமையல் செய்ய சாமான்கள் வாங்கி வர மனைவி மார்க்கெட்டுக்குச் செல்ல வீட்டில் மகனும், தந்தையும் மட்டுமே இருக்கிறார்கள்.

கூச்சத்துடன் ஒதுங்கி நின்ற மகனைப் பார்த்து வீரன் கேட்கிறான். "அப்பாவுடன் ஏன் பேச மாட்டேன்கிறாய்?"

அந்தச் சிறுவன் குழப்பத்துடன் தந்தையைப் பார்த்து விட்டு சொல்கிறான். "நீங்கள் ஒன்றும் என் அப்பா இல்லை"

வீரன் மகனைக் கேட்கிறான். "பின் யார் அப்பா?"

"தினமும் என் அம்மா நிற்கும் போது நிற்பார். அம்மா உட்காரும் போது அவரும் உட்கார்வார். படுக்கும் போது அவரும் கூடப் படுத்துக் கொள்வார். அவர் தான் என் அப்பா என்று அம்மா சொல்லியிருக்கிறாள்"

வீரனுக்குக் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது.

மனைவி சாமான்கள் வாங்கிக் கொண்டு வந்த பின் கணவனிடம் திடீர் மாற்றத்தைக் கண்டாள். அவன் அவள் சமைத்ததை உண்ணவில்லை. அவளை அவன் தொடவில்லை. அவள் அவன் அருகில் வருவதைக் கூட அவன் மறுத்தான். இரண்டு நாட்கள் இப்படியே நிகழ மனைவி மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.

மனைவி இறந்த அன்று இரவு தந்தையும் மகனும் படுத்துக் கொள்ளச் செல்லும் போது தந்தையின் நிழலைக் காண்பித்து மகன் சொல்கிறான். "இதோ என் அப்பா"

திகைத்த வீரன் மகனை விசாரிக்கும் போது உண்மை வெளிவந்தது. தாயின் நிழலைப் பார்த்த மகன் ஒரு நாள் இது யார் என்று வெகுளித் தனமாய் கேட்ட போது, மகன் தந்தை அருகில் இல்லாத குறையை உணரக் கூடாது என்று அவள் இது தான் உன் தந்தை என்று சொல்ல சிறுவன் அன்றிலிருந்து அந்த நிழலையே தந்தையாக நினைத்து வந்திருக்கிறான்.


என்றும் அன்புடன்

செவ்வாய், பிப்ரவரி 16, 2010

துப்பாக்கி தேவை (சிறுகதை )



நீ சொன்னாய் என்பதற்காக உன் அப்பாவிடம் பேசலாம் என்று முடிவு எடுத்தேன்.அலுவலகத்தில் இருக்கிறேன் சாயங்காலம் 'சரவணபவனில்' சந்திக்கலாம் என்று கூறியபோது கடமை தவராதவரின் மகளை தான் காதலித்து இருக்கிறேன் என்று பெருமை கொண்டேன். சொன்னபடி வந்த அவரை பார்த்து "எருமை மாட்டிற்கு மான் குட்டி எப்படி பிறந்தது" என்ற பழமொழி தான் நினைவில் வந்தது."மான் குட்டி" என்பது உனக்கு அதிகம் என்றாலும் எருமை மாடு உன் அப்பனுக்கு குறைவே.

அந்த கடையில் பில் போடுவதற்கான கம்ப்யூட்டர் தவிர மற்ற அனைத்தையும் தின்று தீர்த்து விடும் வெறி அவர் கண்ணில் இருப்பதை பார்க்க தவறிவிட்டேன் நான்.சரி ஏதாவது சாப்பிட்டு விட்டு பேச்சை துவங்கலாம் என்று சர்வரை அழைத்தேன்,அதன் பின் உன் அப்பன் கைங்கரியத்தால் சமையல் கட்டிருக்கும் டேபிளுக்கும் சுமார் அம்பது ஓட்டங்கள் எடுத்தான் சர்வர்.

அரசனிலும்,அன்னபூர்ணாவிலும் நீ புல் கட்டு கட்டுவது ஒரு "ஜெனடிக் பிரச்சனை" என்று கண்டுகொண்டேன்.வேழ முகம் தான் இல்லையே தவிர பேழை வயறு இருக்கிறது உன் பரம்பரைக்கே...

அவரது வேட்டையை ஒரு வழிக்கு கொண்டு வர இயலாதவனாய் இருந்தேன்'தம்பி இபோதெல்லாம் முன்ன மாதிரி சாப்பிட முடியவில்லை என்று திருவாய் வேறு மலர்ந்தார். திடபொருளிலிருந்து "ரோஸ் மில்க்" போன்ற திரவ பொருளுக்கு மாறினார்.அப்பாட முடித்துவிட்டார் என்ற என் என்னத்தை ஒரு "கஸாட" என்ற வார்த்தையில் உடைத்தார்.ஜர்தார் பீடா சாப்பிடவில்லை என்றாலும் நெல்லையப்பர் கோவிலில் உண்ட கட்டிக்கு காத்திருக்கும் கோவில் யானைக்கும் உன் அப்பனுக்கும் ஆறு வித்தியாசங்கள் கூட இல்லை. தம்பி எப்ப சாப்பிட்டாலும் கடைசியா ஒரு ஐஸ்கிரீம் சாப்டருது வழக்கம் என்ற அவரது கூற்றிலிருந்து "கடைசியா" என்ற வார்த்தை தான் எனக்கு வாழ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது.

"சார் உங்க மகளை லவ் பண்ணுகிறேன்"

அவளையே கல்யாணம் செய்து கொள்ள ஆசை படுகிறேன்" என்று சொன்ன போது அப்போ இது விஷயமா போனவாரம் "ஆர்யாஸ் ஹோட்டலில்" பேசினது நீங்கள் இல்லையா?! என்று அவர் ஆச்சரியமாக கேட்ட போது தான் தெரிந்தது,மொத்த குடும்பமும் இரை எடுபதற்கென்றே
எவனயாவது இரையாக்குவதை "ப்ரோபோச்னல் "டச்சோடு செய்வதை உணர்ந்தேன்.

"தம்பி இது பெரிய விஷயம் ஒரு நாளில் பேசி தீர்த்து விடமுடியாது" நீங்க ஒன்னு பண்ணுங்க நாளைக்கு சாயங்காலம் "அன்னபூர்ணா" வந்துடுங்க அப்ப பேசிகொள்ளலாம் என்ற உன் அப்பனை கொல்ல அந்த நேரம் என்னிடம் துப்பாக்கி இல்லாமல் போனது என் துர்பாக்கியமே!







(கடந்த வருடம் நண்பர்(2009) மின்னஞ்சலில் அனுப்பிய கதையை சற்று மாற்றி எழுதி இருக்கிறேன்)

வியாழன், ஜனவரி 28, 2010

ஸ்ரீனிவாச மஹாலும்,எதிர் சந்தும் (ஒரு பக்க கதை)


பாலிடெக்னிக் படிப்பை முடித்து விட்டு ராமனும்,
கண்ணனும் வேலை தேடி கொண்டு இருந்தனர்
அப்பொழுது அவர்களுக்கு ஆபீஸ் இடமாக இடமாக
இருந்தது இந்த கல்யாண மண்டபமே.
இருவரும் காலையில் ஒன்பது மணிக்கெல்லாம் அங்கே ஆஜர் ஆகிவிடுவார்கள்.

ஒரு நாள் இருவரும் பேசிக்கொண்டு போது
மண்டபத்தின் எதிர் சந்து வழியாக ஒரு பெண் வந்தாள்.
ராமன்,கண்ணனிடம் கேட்டான் "யார்லே மாப்புள அது " என்று
பிறகு  கண்ணனிடம் விசாரித்த போது,
அவள் பேட்டை கல்லூரி ஒன்றில் படித்து வருகிறாள் என்றும்
தெரிந்துகொண்டான்.

 தினசரி அவள் வரும் நேரத்தில் ராமன் அங்கே நிற்பான்.
அவளது பார்வை மெதுவாக அவன் மேல் விழுந்தது. வாரங்கள் ஓடியது. ஒரு நாள் இன்று எப்படியும் அவளிடம் தன் என்னத்தை சொல்லிவிடவேன்றும் என்று அவள் பின்னால் சென்று
மெதுவாக அவள் பெயர் சொல்லி அழைத்தான்


அவள் திரும்பி அவனிடன் கேட்டாள்
அண்ணா அவர் வரவில்லையா
அவள் அழைத்த அந்த அவர் "கண்ணன்"