Monday, December 12, 2011

தலைவர் பிறந்த நாள் , என் முதலாண்டு திருமண நாள்


தன்னடக்கத்தின் தலைமகனே உன்னை வாழ்த்த வயது இல்லை என்பதால் உன்னை வணங்குகிறேன் . பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவா,,,,,,,,,,,,,

1st Anniversary

சென்ற வருடம் (12-12-2010) இதே நாளில் என்னை கரம் பிடித்து,என் சுக, துக்கங்களில் பங்கு கொண்டு என்னை அன்போடும்,அனுசரணையோடும் பார்த்து கொண்டு இருக்கின்ற என் அன்பு மனைவிக்கு

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் .





Sunday, October 30, 2011

ஊருக்கு வருகின்றேன்

வலை உலக நண்பர்களுக்கு வணக்கம்....






கடந்த இரு மாதம் வேலை பளு ஜாஸ்தி.அதனால் தான் வலை பக்கமே வர இயலவில்லை (அப்படியே வந்தா மட்டும் எழுதி கிழிச்சுருவே அப்படின்னு நீங்க சொல்லுறது கேட்குது) இன்று நான் தாயகம் வருகின்றேன், தம்பி கல்யாணம், மனைவி சீமந்தம் அப்படின்னு வீட்டு விசேசம் நெறய இருக்கு.எல்லாம் முடிச்சு திரும்ப டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி உங்க எல்லோரையும் மறுபடியும் வலைபக்கம்
முலமாக சந்திகின்றேன்

நன்றி

என்றும் அன்புடன்

Sunday, August 14, 2011

பாவி பயலுக



ஒரு ஊர்ல ஒருத்தன் சாயந்தரம் வேலை முடிச்சு வீட்டுக்கு போய்ட்டு இருந்தான் . அப்ப திடீர்னு ஒரு காட்டுக்குள்ள வச்சு அவன் வந்த பைக் பஞ்சர் ஆய்ருச்சு. உடனே பக்கத்துல பார்த்தான் தூரத்துல ஒரு மடம் தெரிஞ்சது உடனே அங்க போய் எதாவது உதவி கிடைக்குமான்னு கேட்கலாம்னு போனான்


அங்க இருந்த துறவி சொன்னாரு . தம்பி நேரம் வேறு போயிருச்சு இந்த இருட்டுக்குள்ள நீங்க ஊருக்கு வண்டிய சரி பண்ணி போகனுமா ? பேசாம இங்க தங்கிட்டு காலைல போங்கன்னு . உடனே இவனும் சரின்னு ஒத்துக்கிட்டான் . அங்கேயே சாப்பிட்டு தூங்கி கொண்டிருக்கும்போது மடத்துக்கு பின்னாடி டமால்னு ஒரு பெரிய சத்தம் . ஆனா ஒருத்தரும் எழும்பி என்னனு பார்க்கல . உடனே இவனும் அப்படியே படுத்து தூங்கிட்டான் . மறுநாள் காலைல வண்டிய சரிபண்ணிட்டு போகும் போது. அந்த சத்ததுக்கான காரணத்தை தலைமை துறவிகிட்ட கேட்டான்

உடனே அவரு அத உன்கிட்ட சொல்ல கூடாது. நீ போகலாம் அப்படின்னு சொல்லிட்டார் . இவனும் வந்துட்டான்

அப்புறம் ஒரு வருடம் கழிச்சு அதே வழிய வரும் போது அதே மாதிரி வண்டி பஞ்சர் ஆகி அதே மடத்துல தங்க வேண்டி வந்தது . அன்னைக்கு ராத்திரியும் அந்த சத்தம் கேட்டது . இவனும் மறு நாள் காரணம் கேட்டான் . ஆனா தலைமை துறவி அப்பவும் சொல்ல கூடாதுன்னு சொல்லிட்டார்

மறுபடியும் மூன்றாவது தடவையும் இப்படி நடந்தப்ப அவர்கிட்ட காரணம் கேட்டான் . அவர் அப்பவும் மறுத்தார் . உடனே இவனுக்கு கோபம் வந்துருச்சு . ஒரு தரவ கூட காரணத்த சொல்ல மாட்டங்குறீங்க . ஏன்னு கொஞ்சம் கோபத்தோட கேட்டான். அதுக்கு அவரு நீயும் என்ன மாதிரி துறவி ஆனா சொல்றேன் அப்படின்னார் .

உடனே இவனும் வீட்டுக்கு போய் எல்லார்கிட்டயும் சொல்லிட்டு துறவியாக வந்துட்டான் . வந்ததும் அவரு இவன தவம் பண்ண சொன்னார் . இவனும் பண்ணினான்

ஆறு மாதம் கடுமையா தவம் இருந்த பிறகு அந்த தலைமை துறவி இந்தாப்பா இந்த சாவிய வச்சு அந்த கதவ தொற அங்க தான் நீ கேட்ட கேள்விக்கு பதில் இருக்குன்னு சொல்லி ஒரு கதவ காண்பிச்சார் .

உடனே இவனும் தொறந்தான். அங்க இன்னொரு கதவு, பக்கத்தில ஒரு சீட்டு அதில ஒரு கேள்வி . அதுக்கு பதில் கண்டு புடிச்ச பிறகு அடுத்த சாவி தருவேன்னு துறவி சொன்னார் . இவனும் கண்டுபிடிச்சான் அடுத்த சாவியும் தந்தார் . இவன் தொறந்தான் . அப்புறம் இன்னொரு கதவு அதுக்கு ஒரு கேள்வி . ஒரு வழியா அதுக்கும் பதில் கண்டுபிடிச்சி அந்த கடைசி கதவ தொறந்தான்
அங்க தான் இவன் அந்த சத்ததுக்கான காரணத்தை கண்டு புடிச்சான் .

.

.

அது என்னனு உங்களுக்கு சொல்லனும்னா நீங்க துறவியாகனும்.
( பாவி பயலுக எனக்கும் இப்படிதாங்க அனுப்புனாங்க )



என்றும் அன்புடன்

Thursday, August 11, 2011

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் ரகசியங்கள்


இது என் நண்பர் எனக்கு மினஞ்சலில் அனுப்பியது..........


திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச் சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன..அவைகளில் சில...





1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை.

2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள் பெடிப்பதில்லை. ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும்வெடிப்பு ஏற்படுவதில்லை.

3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும்.. உலோகச்சிலையானாலும் உலோ கத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாகஇருக்கின்றன.

4. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக்கொதிக்கின்றன திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாகஇருக்கின்றன

1. திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிககூம் பெரியதாகும். பொங்கல், தயிர்சாதம்,புளிச்சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதி ரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன

2. ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப் படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.

3. ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும்.வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

4. உள் சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

5. பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர் வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது.

6. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

7. அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்

8. ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலைசுமார்80ரூபாய்.

9. சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.

10. ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி, இவருயை நகைகளை வைத்துக்கொள்ள இடம் இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித்தாட்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.

11. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ.100கோடி.

12. மாமன்னர்களான இராசேந்திர சோழர், கிருஷ்ண தேவராயர், அச்சதராயர் போன்றோர் ..ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும், அறக்கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசியும் இங்கு வந்து காணிக்கை சமர்பித்து இருக்கிறார்.

13. ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப்போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் கி.பி.966 ஜுன் 8ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ குறுநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன் பெருந்தேவி நகைகளைத்தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தார். முதலாம் குலோத்துங்க சோழன் திருமலை தேடிவந்து காணிக்கைசெலுத்திஉள்ளார்.

14. திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.

15. வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மார்கழிமாத அர்சனைக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.

16. சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப்பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்படடை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெருகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதிவைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதிக்கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ்திரம் தெரிந்தவர், நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமயைான் மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார்.

17. அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.

18. ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம்

19. எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்

20. 1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைச்சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார். அவர் குணமடைய ஏழுமலையானை பிராத்தித்திருகிறார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக்கடன்செலுத்தியிருக்கிறார்

21. ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்

22. திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும் எனக் கவலைப்பட்டார்கள்

23. திருப்பதி அலமேல்மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச்சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். உள் பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள். அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள். வெள்ளிக்கிழமை அபிஷேகத்திந்கு பரிமள அறையில் வியாழன் இரவு அறைத்து தயார் செய்யப்படுகிறது. குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திக்கு சேர்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வாசனை திரவியங்கள் பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வாரத்திற்கு ரூ,50000 மதிப்புள்ள வாசனை திரவியங்கள் வருகின்றன.

24. ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்னுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது.

25. ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விடவேண்டும். இது விசேஷ வழிபாடாகும்

26. வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும்.வடகலை சம்பிரதாயத்தில் '' வேங்கடமெனப்பெற்ற" என்ற பாசுரமும், தனியன்களும் இடம் பெறும். சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை எடுக்கப்படும். பிறகு தென் கலை சாத்து முறை சேவிக்கப்படும். பிறகு நைவேத்தியம் செய்யப்படும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார்.

27. கி.பி.1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதிதாயாருக்கு திருக்கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி.1764ல் நிஜாம் தெளலா என்பவனின் தலைமையில் வந்த முஸ்லீம் படைகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன.

28. திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் திருபதி கொண்டு வரப்பட்டு ஏழுமலை ஆண்டவனுக்கு சாத்தப்படுகிறது. ஸ்ரீ ஆண்டாள் ஏழுமலையானை கடவுளாக வழிபட்டு வாழ்த்தி வணங்கிணார்28. திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுக்கள் சாளுவ வம்ச மன்னர்கள் காலத்தவை. 229 கிருஷ்ண தேவராயர் காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147 சதாசிவராயர் காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர் காலத்தவை. நந்திவர்மன் (பல்லவர்) ஆண்ட கி.பி.830 தொடங்கி 1909 வரை உள்ளன. கல்வெட்டுகளில் 50 கல்வெட்டுக்கள் தான் தெலுங்கு, கன்னட மொழிகளில் உள்ளன. மீதம் 1130 கல்வெட்டுக்கள் தமிழில் தான் உள்ளன.



என்றும் அன்புடன்

Thursday, August 04, 2011

எனக்கு பிடித்த கமல்

கமல்ஹாசனின் திரை பயணத்தில்
எனக்கு பிடித்த எட்டு படங்கள்-2





மைக்கேல் மதன காமராஜன்

முழுக்க முழுக்க நகைசுவையை மையமாக கொண்டு
எடுக்கப்பட்ட படம்.இதில் கமல்ஹாசன் நான்கு வேடங்களில்
(திருடன்,தொழிலதிபர்,சமையல்காரன் மற்றும் தீயணைப்புவீரர்)நடித்திருப்பார்.இந்த நான்கு வேடத்திலும் நான்கு விதமான
பாடி லாங்குவேஜு உடன் கமல் செய்து இருப்பது தான்
படத்தின் சிறப்பே.கிரேசி மோகன் வசனம் படத்துக்கு கூடுதல் பலம்

இந்தியன்


இன்னொரு சுதந்திரத்துக்குப் போராடும் வீரனாக…
லஞ்சத்துக்குக் கொள்ளிபோடத் துணிந்த வயோதிக தியாகியாக.. , தடுமாறாத உறுதியும் கொண்ட தாத்தாவாக நடித்துஇந்திய ரசிகர்களின் ஒட்டுமொத்த பாராட்டுக்களை கமல் கட்டிக்கொண்ட படமிது.படத்துக்கு வசனம் அமரர் சுஜாதா, படத்தில் இந்த ஒரு வசனம் இவரின் பெருமையை சொல்லும் "'பக்கத்துல இருக்கிற குட்டி குட்டி நாடெல்லாம் எங்கேயோ போயிடுச்சி.ஆனா இந்தியா இன்னும் அப்படியே இருக்கு..ஏன்?ஏன்னா அங்கெல்லாம் கடமையை மீறுவதற்குதான் லஞ்சம். இங்க மட்டும்தான் கடமையைச் செய்வதற்கே லஞ்சம்…” ன்று எழுதியிருப்பார். தமிழ் திரையுலம் இழந்த மாபெரும் சொத்து சுஜாதா அவர்கள்,1996 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதின் பரிந்துரைப்பிற்காக இந்தியா சார்பில் இத்திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது

தேவர் மகன்


இரு குடும்பத்து பங்காளி சண்டை கதை.சிவாஜி கமலின் நடிப்பைவிட இன்னொருவர் நடிப்பு மிக பிரமாதமாய் இருக்கும் அவர் நாசர்.நிறைய பேருக்கு போபம் வரலாம், ஆனால் அதுதான் உண்மை"வாடா என் தேவன் மகனே" என சொல்வதாகட்டும், மூக்கோடு மூக்கு ஒட்டி நிற்கும் அந்த 'தூங்கிக்கிட்ட இருக்கிற மிருகத்தை தட்டி எழுப்புற" சீனாகட்டும்" நாசர் கலக்கி இருப்பார். மாயன் நாசர் இல்லாமல் இந்த படத்தை ரசிக்கவே மனம் இருக்காது.படத்துக்கு படம் ஏதவாது புதுமையை புகுத்தும் கமல்,
இந்த படத்தில் பெரிய மீசையுடன் வேஷ்டி சட்டையில் ஒரு அக்மார்க் கிராமத்தான் ஆகவே வாழ்ந்து இருப்பர்,பரதன் இயகத்தில் இசைஞானி இசை அமைத்த மெகா ஹிட் திரைப்படம்.

புன்னகை மன்னன்

கமல் இரு வேடம் ஏற்ற படம் என்றால் ஒரு வேடம் மிகவும் பிரமாதமாய் பேசப்படும், (ஒரு வேடத்தை அவரே கெடுத்து கொள்வர் அது வேறு கதை ) ஆனால் இந்த படம் அதருக்கு விதி விலக்கு..காதலில் தோல்வியுற்ற நடன கலைஞர் ஆகவும், சார்லி சாப்ளின் ஆகவும் ஏற்ற இரு வேடமும் கனமான் வேடம், அதன் தன்மை உணர்ந்து கமல் தன் நடிப்பை வெளிபடுத்திய அருமையான படம்.இசைஞானி இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை ரகம்.

Tuesday, July 26, 2011

எனக்கு பிடித்த கமல் படங்கள்

கமல்ஹாசனின் திரை பயணத்தில்
எனக்கு பிடித்த எட்டு படங்கள்-1

மூன்று தேசிய விருதுகளைப் (மூன்றாம் பிறை (1982),நாயகன் (1987) மற்றும் இந்தியன்(1996) பெற்ற நடிகர்.சிவாஜிக்கு பிறகு என்று இல்லாமல் இருக்கும் போதே அவரை விட அற்புதமான நடிப்பை வெளிபடுத்திய நடிகன்.ஒரு ரஜினி ரசிகனாய் நான் ரசித்த என்றும் ரசித்து கொண்டு இருக்கின்ற நடிகர் கமல்ஹாசனின் திரைப்படங்களை பற்றி தான் இந்த பதிவு,அவர் இது வரை 200 படங்களுக்கு மேல் நடித்து இருந்தாலும் எனக்கு என்னோவோ அவரின் திரைபயணத்தில் இந்த எட்டு படங்கள் மட்டுமே பிடிகின்றது.இந்த எட்டு படத்திலும்,எட்டுவித்தியாசமான நடிப்பால் மிரட்டுவார் ஆனால்
ஏதோ இவர் மட்டுமே தமிழ்சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறார் என்ற பல அறிவு ஜீவிகளின் கருத்து காமடியே.கமல்ஹாசனை பொறுத்த வரையில் பல ஹாலிவுட் படங்களை அப்படியே காபி
செய்துதான் தன் படத்தில்பயன்படுத்துகிறார் என்ற குற்றசாட்டு உண்டு பல படங்களில் அது உண்மையும் கூட,ஆனால் அவர் அந்த படங்களை அப்படியே காப்பி செய்யாமல் நம் மக்களுக்கும் ஏற்றவாறு சற்று மாற்றுவது உண்டு.வேப்பம் பூ கசந்தாலும் அதனில் உள்ள தேன் இனிப்பது போல இவரின் திறமை நம்மை மெய் மறக்க செய்வது யாராலும் மறுக்க முடியாத உண்மை தான். இனி எனக்கு பிடித்த அந்த அதியிசங்கள்....

நாயகன்


இந்த படத்தை இது வரை நான் எத்தனை முறை பார்த்து இருப்பேன் என்றே தெரியாது, அந்த அளவுக்கு எனக்கு பிடித்த படம். கமல்ஹாசனின் திரை பயணத்தை இரு வகையாக பிரிக்கலாம் என்றே சொல்லுவேன்.நாயகனுக்கு முன்பு, பின்பு என்று .நாயகனுக்கு பின்புதான் இவர் தன் கலை பயணத்தையே மாற்றி அமைத்தார்.இந்த படத்தில் இவர் ஏற்ற வேலு நாயகர் என்ற பாத்திரமாகவே வாழ்ந்து இருப்பர்,இதில் சிறுவன் முதல் அறுபது வயது கிழவன் வரை ஒவ்வரு கால கட்டத்தில்லும் கமல் நடிப்பு இன்று வரை எந்த நடிகரும் செய்ய இயலாத ஒன்று .பாலகுமாரனின் வசனத்தில், மணிரத்னம் திரைக்கதை அமைத்து எடுத்த ஒரு வெள்ளி விழா காவியம்.இந்த படத்தைப் பார்த்த தலைவர் ரஜினிகாந்த் உடனடியாக கமல்ஹாசனுக்கு ஒரு கடிதம் எழுதினார்.அதில் அவர் குறிப்பிட்டுள்ள சிறப்பம்சம், "நீ நடிகனின் நடிகன்".

அன்பே சிவம்.

தொழிலாளர்களுக்காகப் போராடும் நல்லசிவம் என்ற கதாபாத்திரத்தில் கமல் நடித்து இருப்பர்.கம்ப்யூனிசத்தின் உண்மையான கருத்துக்களை சராசரி மனிதருக்கும் சரியாக புரிய வைத்த படம் இது. பொதுவாக கமல் படத்தில் உள்ள குறை என்னவென்றால் அவர் மட்டுமே நடித்து,அவருக்கே புரிந்த சில பகுத்தறிவான விசயங்களை பேசி நம்மை கொள்வார்.ஆனால் இந்த படம் சற்று மாறுபட்டது இதில் ஏற்ற எல்லா கதை பாத்திரமும் நன்றாக நடித்து இருப்பார்கள்.

மகாநதி

மகன்,மகளுடன் சந்தோஷ வாழ்க்கை  வாழும் கிருஷ்ணாவாக
கமல்.அதித ஆசையால் சென்னை வந்து அவர் வாழ்க்கை
சீரழியும் கதைதான் மகாநதி.
இந்த படத்தில் எந்தகாட்சியை குறைசொல்லுவது?சொல்லவே இயலாத ஒன்று. விபசாரம் செய்பவர்கள் எல்லாம் அந்த தொழிலைவிரும்பி செய்யவில்லை என்றும் யாரோ ஒருவரால் தான் அங்கே தள்ளப்பட்டு விடுகின்றனர் என்ற உண்மையையும் உணர்த்திய படம்.ஒரு நல்லவனுக்கு கிடைக்க வேண்டிய மரியாதை எல்லாம் ஒரு கெட்டவனுக்கு கிடைச்சிடுதே ஏன்?என்றவசனம்தான்படத்தின் மைய கரு என்றே சொல்லுவேன் நான்.தான் பெரிய மனுஷியான செய்தி சொல்லி சிறையிலிருக்கும் கமலிடம்"மகள் (ஷோபனா) காலில் விழும் காட்சிலும் , அதே மகளை விபசார விடுதியில் இருந்து மீட்டு வந்த பிறகு, இரவில் அந்த பெண் உளறும் வசனத்தை கேட்டு அழும் கமலுடன் சேர்ந்து நானும்
அழுத படம்.

ஆபூர்வ சகோதர்கள்
தன் தந்தையை கொன்றவர்களை மகன் பழிவாங்கும் சாதாரண கதை தான்.கதைகாக இவர் மேற்கொண்ட சிரத்தை என்வென்று சொல்லுவது தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத முயற்சி ஒன்றை இந்த படத்தில் செய்து இருப்பார்,அது குள்ள வேடம்,திரைகதையின் வேகமும் இசைஞாநியின் பின்னணி இசையும் படத்துக்கு கூடுதல் பலம்

என்றும் அன்புடன






















Wednesday, July 20, 2011

பிறந்தநாள் வாழ்த்துக்கள்


நீ மட்டும் எனக்கு கிடைத்து இருக்காவிட்டால்
வாழ்கை என்னவென்று அறியாமலேயே
என் ஆயுள் முடிந்து இருக்கும்....

பல முறை எரிந்து விழுந்து இருக்கின்றேன் உன் மேல்
ஒரு முறை கூட கோப பார்வை பார்த்தது இல்லை நீ.....

ஆழம் விழுதுகள் போல ஆயிரம் உறவுகள் இருந்தும்
என் வேரென நீ இருப்பதால் தான் நான் இன்னும்
வீழ்ந்து விடாமல் இருக்கின்றேன்....

இப்பிறப்பில் ஈர்ப்பில்லை
அடுத்த பிறவியில் ஆர்வமில்லை
அப்படியும் பிறந்திட்டால்
அமுதாவென இனிக்கும் தமிழ் மொழியில்
எனக்கென நீ இயற்றும் கவிதைகளுக்கு
அரசனாகி உன் ஆளுமைக்கு அடிமையாவேன்....

இன்று பிறந்தநாள் (20-07-11) காணும் அன்பு மனைவிக்கு...
என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்..........

 அன்புடன்.................