எனக்கு ஆட்டோ வரும் முன்பே
உனக்கு பேருந்து வந்து விடுகிறேதே!
அம்மா
ஒவ்வரு நாளும்!
பள்ளி விட்டு திரும்புகையில்,
யாருமே இல்லாத வீட்டை பார்கையில்!
எதுவுமே இல்லாததுபோல்
தோன்றுகிறது எனக்கு!
இரவு ஒன்பது மணிக்குள் வந்துவிடும் உன்னையும்,
பதினோரு மணிக்குள் வந்து விட முயற்சிக்கும் அப்பாவையும்
பள்ளிகூடத்தில் நினைக்கையில்
மங்கலாய் வந்து போகிறது
நினைவில்!
வரவேற்பறைகளை அலங்கரிக்க
தெரிந்த உனக்கு,
உன் ஸ்பரிசத்துக்காக ஏங்கும்
என்னை ஏனம்மா புரிந்து
கொள்ளஇயலவில்லை!
வீட்டு வேலைகளை ஞாயிற்றுகிழமைகளில்
தள்ளிபோடும் உன்னை போலவே
என் ஏக்கங்களை நானும்
தள்ளி போட பழகிகொண்டேன்.
அன்பான வார்த்தைகளால்
தற்காலிக தாய் ஆகிவிடுகிறாள் வேலைக்கார ஆயா,
அப்பொழுதெல்லாம் தோன்றுகிறது எனக்கு
அவளுக்கே பிள்ளை ஆகிஇருக்கலாம் என்று.
உன்பிள்ளை என உணர்த்த
நான் நன்றாக படிப்பதாக மார்ர்தட்டுகிறாய்!
என் அம்மாவென உணர்த்த
நீ என்ன செய்யபோகிறாய்!
9 கருத்துகள்:
nalla irukku boss. pain full pathivu
vaazhthukal
முதல் வருகைக்கு/
கருத்துக்கும் நன்றி நண்பரே!
தொடர்ந்து வருக!
//அவளுக்கே பிள்ளை ஆகிஇருக்கலாம் என்று.//
//என் அம்மாவென உணர்த்த
நீ என்ன செய்யபோகிறாய்//
வலிக்கும் வரிகள் நண்பா.. உணர்ந்து எழுதியிருக்கிறீர்கள்..
பட்டாம் பூச்சி அழகாக உள்ளது நண்பா..
தவறாமல் வந்து வாழ்த்தும்
தோழிக்கு நன்றி!
இந்த glitter-graphics.com போனால் நெறய பட்டாம்பூச்சி கிடைக்கும் தோழி....
தகவலுக்கு நன்றி நண்பா.. தொடர் பதிவு இன்னும் எழுதலையா நண்பா..?
ரெடி பண்ணிவிட்டேன்,இன்னும் ஓரிரு நாட்களில் போஸ்ட் செய்துவிடுகிறேன்
செய்கிறேன் தோழி .
அருமையாக இருக்கிறது மகாராஜன்... துபாய்ல தான் இருக்கிறீர்களா...
நாஞ்சில் பிரதாப் சொன்னது…
//அருமையாக இருக்கிறது மகாராஜன்... துபாய்ல தான் இருக்கிறீர்களா...
//
..................
முதல் வருகைக்கு நன்றி நண்பரே!
தொடர்ந்து வருக!
ஆமாம் துபாய்இல் தன் இருக்கிறேன்
கருத்துரையிடுக