ஞாயிறு, மே 30, 2010

நகைச்சுவை விருதுகள்

எல்லோருமே அவார்ட் கொடுகீறாங்க அதனாலே நம்மளும்
சில பேருக்கு அவார்ட்  கொடுபோமேனு தான்

4 வது இடம்
சிறந்த துறை (2010): இந்திய தேசிய நெடுஞ்சாலை

3 வது இடம்
சிறந்த உழைப்பாளி (2010): I.T பெண்

 

2 வது இடம்
சிறந்த பேச்சாளர் (2010):பொது ஜனம்

 

முதல் இடம்
சிறந்த காமடியன்  (2010): S.A சந்திரசேகர்

 
நடிகர் விஜய் தற்போது அரசியலுக்கு வருவதற்கு அஸ்திவாரம் போட்டுள்ளார். அவர் நடிக்கும் படங்களுக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது. இதனால் அவரது செல்வாக்கு நாளுக்கு நாள்அதிகரித்து வருகிறது.என்றும் அன்புடன

 

திங்கள், மே 24, 2010

உண்மையான இந்தியர்

உண்மையான இந்தியர் யார்?

?
?
?
?
?
?
?

சானியா மிர்சா

ஏன்?

அவர் தானே இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தோர்(சகோதரர்கள்,சகோதரிகள்) என்ற உறுதிமொழி படி நடப்பவர்

எப்படி?
?
??
?
?
?
?
?
?
 
 
 


2.சுறா விஜய்

மருத்துவமனையில் ஒரு பெரியவரும், டாக்டரும் பேசும் வசனம்.


பெரியவர் : டாக்டர், ப்ளீஸ் எப்படியாவது காப்பாத்துங்க.

டாக்டர் : தற்கொலை பண்ணிக்க அவன் விஷம் குடிச்சிருந்தாலோ, தூக்குலே தொங்கியிருந்தாலோ கூட பரவாயில்லை. விவரமா ‘சுறா'வைப் பார்த்திருக்கான். ப்ச்.. (கண்ணாடியை கழட்டிக்கொண்டே) மனசைத் தேத்திக்குங்க. எல்லாம் முடிஞ்சிடிச்சி...

பெரியவர் (கதறியவாறே) : ஒருவேளை இண்டர்வெல்லேயே தூக்கிக்கிட்டு வந்திருந்தா அவனை காப்பாத்தியிருப்பீங்களா டாக்டர்?

டாக்டர் : சான்ஸே இல்லை. ஓபனிங் சாங் முடிஞ்சதுமே உயிர் போயிட்டிருக்கும்னு நெனைக்கிறேன்


இந்த மாத தத்துவம்:

நல்ல படத்துக்கு விளம்பரம் தேவையில்லை - சொன்னவர் விஜய்
நல்ல படத்துக்கு விஜய் தேவையில்லை            - சொல்வது மக்கள்
என்றும் அன்புடன்

ஞாயிறு, மே 23, 2010

அதிசிய பறவைகள்

உலகின் அதிசிய பறவைகள்


புதன், மே 19, 2010

நம்ப முடிகிறதா?

பிலிபைன்ஸ் விலங்குகள் பூங்கா.


இளம்கன்று பயம் அறியாது.
ஒரு தூக்கம் போடுட்டு வரேன்.

வா வீட்டுக்கு போகலாம்


 

ஞாயிறு, மே 16, 2010

இசைஞானியின் இசையில் பெண் பாடகர்கள்-பகுதி-6

"சின்னகுயில்" சித்ரா

இசைஞானியின் இசை மகுடத்தை அலங்கரித்த மற்றொரு
மாணிக்ககல்.முதல் தேசிய விருதே இசைஞானியின்
இசையில்.சின்னகுயில் என்று அன்போடு எல்லோராலும் அழைக்கபட்டவர்.அவர் பாடிய சில பாடல்கள் உங்கள் பார்வைக்கு.இந்த"சின்னகுயில்"யை தமிழில் நமக்கு தந்த அறிமுக பாடல்.
வாசம் வீசும் பூவில் வாசம் செய்ய வேண்டும்
என்னும் சந்தோஷ பாடல்
இந்த பாடல் பதிவுக்கு இசை ஞானி அழைத்த போது சித்ராவுக்கு பட்ட படிப்பு எக்ஸாம் இருந்ததால் அவர் பாடல் பதிவு வர விருப்பம் இல்லை என்று சொன்னாராம்,அப்போது இசைஞானிஇவ்வாறு சொன்னாராம்.நீ பட்ட படிப்பு எக்ஸாம் எழுதினால் உன் பெயர்கு பின்னால்நான்கு எழுத்து வேண்டுமானால் கூடலாம்,ஆனால் இந்த பாடலை நீ பாடினால் உனக்கு கிடைக்கின்ற பெயர் உனக்கு அழியா புகழை பெற்று தரும் எது வேண்டும் என்று நீ முடிவு எடுத்து கொள் என்று கூறிவிட்டாராம்.அரை மனதோடு வந்து பாடி கொடுத்து விட்டு போனாராம் சித்ரா,அந்த தீர்கதரிசி சொன்னது பலித்த பாடல் ஆம் சின்ன குயில்க்கு முதல் தேசிய விருது பெற்று தந்த பாடல்.

சிலகாலம் நான் சிறையில் வாழ்ந்தேன் அபொழுதே நான் இறந்து இருப்பேன்,உன்னை மீண்டும் பார்த்ததால் தான் உயிர் வாழ்கிறேன் என்று தன் காதல் மன்னனை நினைத்து பாடும் பாடல்.தான் விரும்பியவனை எதிர்பார்த்து கிழக்குவாசல் நோக்கி நின்றவளுக்கு அவன் தந்த குங்குமம் ஏற்படித்திய சந்தோஷ பாடல்.


என்றும் அன்புடன்

ஞாயிறு, மே 09, 2010

அன்னையர் தினம்

அன்னையர் தினம்
அம்மா என்றால் அன்பு.இந்த உலகில் நாம் பிறக்க காரணமாக இருந்த உயிர்.தன் பசியை மறந்து தன் பிள்ளைக்கு சோறு ஊட்டியவள். நாம் ஒவ்வொருவருமே, பிறக்கும்போது கைவிடப்பட்ட குழந்தைகள் தான். நம்மை தமது அரவணைப்பில் வைத்து பாதுகாப்பது நமது தாய் தான்.

அந்த அன்னையின் சிறப்பாக சில பாடல்கள்
ஆயிரம் உறவுகளில் பெருமை இல்லை
தாயில் சிறந்த கோவிலும் இல்லைஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் தாய்க்கு நாம்
பட்ட கடன் தீருமா?


எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
என் தாயாய் நீயே வர வேண்டும்
அம்மா என் அம்மா என்னை பெற்ற
சண்முகதம்மாதாய் சொல்லுகின்ற வார்த்தைகள் எல்லாம்
நோய் தீர்கின்ற மருந்து அல்லவா.
அனைவர்க்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்


என்றும் அன்புடன

புதன், மே 05, 2010

இசைஞானியின் இசையில் பெண் பாடகர்கள்-பகுதி-5

ஜானகி அம்மா
தமிழ் திரைஇசையின் சுந்தர குரலுக்கு சொந்தக்காரர். கதாநாயகிக்கு ஏற்றவாறு குரல் மாற்றி பாடும் வல்லமை கொண்டவர்.இசை ஞானியின் இசையை அலங்கரித்த பட்டியலில் இவருக்கு முக்கியமான இடம் உண்டு

திருவிளையாடல் பாணியில்சொன்னால்.

தமிழ் இசையில் பிரிக்க முடியாதது என்னவோ?

ஜானகியின் குரலும் இசைஞானியின் இசையும்

என்றே சொல்லாம்.பல ஆயிரம் பாடல்கள்,பாடிய ஒவ்வன்றும் இனிமையே.இந்த இசைராணியின் கடலில் இருக்கின்ற ஏராளமான முத்துக்களில் எதை எடுப்பது என்ற பெரிய குழப்பங்களுக்கு நடுவே எனக்கு பிடித்த ஐந்து முத்துகளை உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.

முதல் முத்து: உதிரிப்பூக்கள்

ஒரு தாய் தன் குழந்தையை எப்படி ரசிப்பாள்,அந்த குழந்தையை எதோடு எல்லாம் ஒப்பிட்டு பாடுவாள் என்பதை சொல்லும் இந்த"அழகிய" பாடல்2 வது முத்து: நான் பாடும் பாடல்


காதலன் வரவை எதிர்பார்த்து காதலி பாடும் பாட்டு,அவனுகாக அவள் அரங்கேற்றிய பாடலை அவனால் கேட்க முடியாமல் போகும் சோககீதம் இந்த
இசைராணியின் குரலில்


3 வது முத்து: ஆனந்தகும்மி

சிறுவயதில் இருந்து நட்போடு பழகிய இரு நெஞ்சங்கள்,காதல் வயபட்டபோது பெண்ணின் மனது சந்தோஷத்தில் உருகும் பாடல்

4 வது முத்து; வைதேகி காத்திருந்தாள்

இளம் வயதிலேயே விதவை ஆன இந்த அழகு மலர் ஆடும் பாடல்
5 வது முத்து : தளபதி


இது ஒரு தாய்க்கும் மகனுக்கும் இடையே உள்ள பாசகீதம்

என்றும் அன்புடன்