அப்பாட நானும் ஒரு வழியா வாங்கிவிட்டேன்.இங்கே(துபாய்) வந்த முதல் நாள் முதல் இது என் கனவு எப்படியாது வாங்கிவிடவேண்டும் என்று, வந்த உடனேயும் வாங்க முடியாது ஏன்ன? என்னடா இப்போ தான் வந்தான்,அதுகுள்ளே வாங்கிட்டன்,இவனுக்கெல்லாம் குடும்ப பொருப்பே கிடையாது அப்படி பழி வந்து விடக்கூடாது,அதன்னாலே முதல் வருஷம் என்னோட இந்த ஆசையை கொஞ்சம் தள்ளி வைத்தேன், சரி வருகிற வருஷம்(2008)எப்படியாவது வாங்கி விடலாம்,எப்படியும் போனஸ் கிடைக்கும் அதுல வங்கி விடலாம் என்ற என் கனவுல மண்ணு, உலக பொருளாதார நெருக்கடி! அதனால ஆபீஸ்ல நோ போனஸ், இனி மேல் இங்கே யாரும் வேலை பார்க்க முடியாது அப்படின்னு ஒரே பேச்சு என்னடா செய்ய நம்ம ஆசை அதை வாங்காமலே ஊருக்கு போய்விடுவோமோ என்றெல்லாம் ஒரே பயம்.சரி கொஞ்சம் சேர்த்து வைத்த பணத்தில் இருந்து வாங்கலாம் அப்படின்னு நினைக்கும் போது வீட்டுல இருந்து போன் எப்பா, நல்ல வரன் வந்து இருக்குடா தங்கச்சிக்கு அதனாலே நீ ஊருக்கு (2009) வரும் போது நகை வாங்கிட்டு வந்துடு,அப்படின்னு அப்பா,அம்மா கிட்ட இருந்து போன், சரி தங்கச்சி கல்யாணம் நல்ல படியா முடியட்டும் அப்புறம் வாங்கி கொள்ளலாம்.அப்படினு தோனுச்சி!இதுல வேற வாரம் தோறும் பீர்,டூர் அப்படின்னு செலவு செய்த கிரெடிட் கார்டு பில் கழுத்த பிடிக்க நெலமை ரொம்ப மோசம் ஆகிவிட்டது.அத்தான்வந்து கிரடிட் கார்டு பில் எல்லாம் செட்டில் செய்ததும் கொஞ்சம் நிம்மதி,ஆனா மாதம்தோறும் எனக்கு அந்த பணத்தை செட்டில் செய்ய வேண்டும் அப்படின்னு ஒரு ஆர்டர்,ஒரு கட்டத்துல நம்மாலே வாங்க முடியாதோ அப்படி தோனுச்சி,சரி இரண்டு வருடம் தான் வாங்க முடியல வருகிற (2010)வருஷம்மாவது நமக்கு நல்லா இருக்கட்டும் அப்பவாது எப்படியாச்சு இதை வாங்கி விடுவோம்,அப்படி மனசை தேத்திகொண்டேன்,ஆனா அதை பார்க்கும் போதெல்லாம் ஒரு ஆசை,ஒரு வழியா அத்தான்கிட்ட பேசி இந்த மாதம் மட்டும் நான் உங்க செட்டில்மென்ட் பணத்தை கொண்டு அதை வாங்க போகிறேன் அப்படின்னு சொல்ல,அவரும் சரி வங்கிகொள் என்றார்.ஒரு வழியா வாங்க முடிவு பண்ணி ஆச்சு,எதை வாங்க அப்படினு
குழப்பம்,வாங்குறது நல்லதா வாங்கு,பணத்தை வேஸ்ட் பண்ணாதே.அப்படின்னு அக்கா அட்வைஸ் வேறே!
சரி கடைக்கு போவோம் அப்படி நண்பர்களோடு கிளம்பியாச்சு,அங்கே போன சார் இது தான் லேட்டஸ்ட்,இது நல்லா இருக்கும் அப்படின்னு கடைக்காரன் வேற குழப்ப,ஒரு வழியா முடிவு பண்ணி எடுத்தாச்சு என்னமோ எதையோ சாதிச்ச மாதிரி ஒரு பீலிங்,இல்லையா பின்ன என்னோட மூன்று வருட கனவு ஆச்சே.....
(ஆமாங்க ஒரு வழியா போனவாரம் வியாழகிழமை
மடிகணினி (LAPTOP) வாங்கி விட்டேன்)
நினைவலைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைவலைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், மார்ச் 15, 2010
செவ்வாய், மார்ச் 09, 2010
"பதின்மம்" நினைத்து பார்த்தால்..........
என்னையும் (நம்பி) ஒரு பதிவரா
நினைத்து இந்த தொடரை எழுத அழைத்த
தோழி "திவ்யா ஹரி" க்கு முதலில் நன்றி
(முன்பே எழுத வேண்டியது ஆனால்
நேரம்மின்மையால் இப்பொழுது எழுதிஇருக்கிறேன்)
முதலில்
நான் பத்தாம் வகுப்பு படித்து கொண்டு இருந்தபோது,எங்கள்
வகுப்பில் நாங்க ஒரு குரூப்(மாப்ளை பெஞ்சு தான்).எங்கள் நண்பரில் ஒருவர் கொஞ்சம் கருப்பு(அதுகாக நான் ஒன்னும் அரவிந்த்சாமி கலர் கிடையாது நானும் கருப்பு தான்,அவர் இன்னும் கொஞ்சம் கூடுதல்).அப்ப நான் எல்லாரையும் கொஞ்சம் கூடுதலாகவே ஓட்டும் (கிண்டல்௦) பழக்கம் உண்டு.ஒரு முறை அந்த நண்பரை அனுமந்தராவ் அப்படின்னு கிண்டல் பண்ண,சாதாரண சண்டை முற்றி கைகலப்பு வரை போகிவிட்டது. நாளடைவில் அது சரியாகி போய் விடும் என்று என் நண்பர்களும் நினைத்தனர்,ஆனால் அது பெரிதாகி (இந்தியா/பாகிஸ்தான் ரேஞ்சுக்கு) வளர்ந்துவிட்டது.அன்றிலிருந்து பல நாட்களுக்கு, ஏன்.. பல வருடங்களுக்கு அவன் என்னிடம் சரியாகப் பேசவில்லை. பின் நான் பாலிடெக்னிக் படித்து கொண்டு இருக்கும் போதும் ஒரு நாள் எங்கள் (குரூப்) நண்பன் ஒருவனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தபோது, பள்ளி நினைவுகளை அசைபோட்டம் ,அந்த நண்பர் பெயரும் வந்த போது தான், ச்சே.. ஒரு சின்னப் கிண்டல் ஆசையால் ஒரு நல்ல நட்பை இழந்தோமே’ என்று நான் என்னையே கேவலமாக நினைத்துக் கொள்வதுண்டு.அன்று முதல் இன்று வரை நான் எவரையும் அவர்கள் மனது புண்படும்படி பேசுவதில்லை ,இன்றைக்கும் பலரோடு எனக்கு சங்கடங்கள், கருத்து வேறுபாடுகள் வருவதுண்டு. அந்த ஒரு சம்பவம் எனக்குத் தந்த பாடத்தால்... பேசாமலே போய்விடுவேன். தவறு என்மீதாயினும், என் மீது இல்லாவிட்டாலும்.அப்படியே எதாவதுபேசினாலும் உடனே மன்னிப்பு கேட்டு விடுகிறேன்.இது அந்த நண்பனுக்கு மானசிகமாக
நான் செய்யும் மரியாதை.
இரண்டாவது:
எங்கள் தெருவில் உள்ள தாணு அண்ணா மீது எப்போதும் எனக்கு ஒரு மரியாதை உண்டு.யார் மீது அதிர்ந்து பேசாதவர்,ஒரு முறை அவர் பிறந்த நாளுக்கு என்னை ஓரிடத்துக்கு அழைத்து சென்றார்,அது ஆதரவற்றவர்கள் முகாம்,நான் அவரிடம் கேட்டேன்,நாமே ஏன்ன இங்கே வந்து இருக்கிறோம் என்று,அவர் தன்னுடைய ஓவவரு பிறந்த நாளுக்கும் இங்கு வந்து தன்னால் முடிந்த உதவியை செய்வதோடு மட்டுமல்லாது அன்றைய மதிய உணவை அவர்களுடன் சேர்ந்து தான் சாப்பிடுவராம்,நீயும் இது போல் செய் என்றார்,அன்று முதல் நானும் எனது ஒவ்வரு பிறந்த நாளுக்கும் (பிறந்த நாளுக்கு மட்டுமல்ல என்னால் எபோதேல்லாம் முடிகிறதோ)அது மாதிரியே செய்து வருகிறேன் நான் என் வாழ்கையில் செய்த முதல் நல்ல காரியம் இதுதான்.இப்போ இங்கே(துபாய்) வந்த இந்த மூன்று வருடமாக என் பிறந்த நாளுக்கு செல்ல முடியவில்லை,ஆனால் ஊருக்கு(VACATION)வரும் போதும் தவறாமல் ஒரு நாள் அங்கு சென்றுவிடுகிறேன்.
(நீங்களும் இதை செய்யலாமே)
(நிறைய எழுதலாம் ஆனால் பதிவு பெரிதாகி விடும்
என்பதால் எந்த இரண்டு மட்டும்)
அனேகமாக எல்லாரும் இதை எழுதி இருப்பார்கள்
என்பதால் யாரையும் அழைக்கவில்லை.
யாராவது நண்பர்கள் இந்த தொடரை தொடர நினைத்தால்
அவர்களும் தொடரலாம்..

Labels:
நினைவலைகள்
வியாழன், பிப்ரவரி 11, 2010
என்காதல்!
காதல், இந்த மூன்று எழுத்து மந்திரம்.அனைவரது வாழ்விலும் வந்து போகும் ஒரு சுவாச காற்று.வாழ்வில் எனக்கும் வந்தது,
அப்பொழுது தான் நான் எனது பாலிடெக்னிக் முடித்து வேலை தேடி கொண்டு இருந்த நேரம்.ஒரு நாள் மாலை என் தங்கை உடன் வீட்டிற்கு வந்தாள் அவள்.(பெயர் வேண்டாம்,இன்று ஒரு குழந்தைக்கு தாய் அவள் )
எல்லா படத்திலயும் கதாநாயகன் பேசுவாரே? ஒரு வசனம் "உன்னை பார்த்த உடனே மனசுல ஆயிரம் பட்டாம் பூச்சி பறந்தது",அது மாதிரிதாங்க எனக்கும் இருந்தது. அன்று முதல் தினமும் என் தங்கையை கல்லூரிக்கு சென்று விடும் பனியை நானாகவே ஏற்று கொண்டேன்.தினசரி அவளை பார்த்தல் போதும் எனக்கு.ஒரு நாள் என் வீட்டிற்கு அவள் வந்த போது தைரியமாக அவளிடம் என் ஆசையை சொன்னேன்.
காதல் மலர்ந்தது, அவளுக்கோ இரண்டாம் ஆண்டு கல்லூரி படிப்பில்,எனக்கோ வேலை கிடைத்தது சென்னையில்.
தினமும் மாலை தொலைபேசியில் பேசுவாள்.ஒரு வருடம் போனது வந்தான் விதி என்னும் காலன், அவள் படிப்பை முடிக்க வீட்டில் மாப்பிள்ளை படலம். இருமுறை தவிர்தவள்,மூன்றம் முறை அவள் தந்தையிடம் எங்கள் காதலை சொல்ல,அவர் என்னை அழைத்து பேசினார்.ஒரு கடமை தவராதவரின் மகளை தான் காதலித்து இருக்கிறேன் என்ற கர்வமும் எனக்கு கூடியது,ஆனால் அன்றைக்கோ நான் சூழ்நிலை கைதி.
அப்பொழுது என் அண்ணனுக்கோ,தங்கைகோ கூட திருமணம் முடியவில்லை,வருமானமும் குறைவு. அந்த நல்ல மனிதருக்கோ தன் மகளின் வாழ்கை முக்கியம். விதி வென்றது!
என்னை விட்டு கொடுத்தாள்.
அந்த வெள்ளை உள்ளம் படைத்தவள்.
சேர்வது மட்டும் அல்ல காதல்!
சேராமல் வாழ்த்துவதும் காதலே!
Labels:
நினைவலைகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)