ஞாயிறு, மார்ச் 21, 2010

"கஷ்டபடாமல் இருக்க கஷ்டபடுங்கள்'

வாழ்கையில் பலவிதமான் கஷ்டங்கள் பிற்காலத்தில் வரமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.


இளமையில் கஷ்டப்படவேண்டும்,அதுமட்டுமல்ல இனம்புரியாத எதிர்பாரத கஷ்டங்கள் வராமல் இருக்க திட்டமிட்ட கஷ்டங்கள் படலாமே.காலை நான்கு மணிக்கே எழுவது கஷ்டம் ஆனால் பிற்காலத்தில் படுக்க இடம் இல்லாமல்,குடிஇருக்க விடு இல்லாமல் கஷ்டபடாமல் இருக்க படுக்கையை விட்டு நான்கு மணிக்கே எழலாமே, உடலில் முகுகு வலி, மூட்டு வலி என்று திணறாமல் இருக்க உடற்பயிற்சி என்ற ஒழுங்கான கஷ்டம் படலாமே.

பட்டினி அல்லது கடை உணவு என்கிற பெருங்கஷ்டம் படாமல் இருக்க சமையல் என்கின்ற கஷ்டபடலாமே.

ஒழுங்கற்ற எதிர்பாரத கஷ்டத்தை தவிர்க்க திட்டமிட்ட
கஷ்டங்கள் படுவது நல்லதே.

பிள்ளை பேறு கூட கஷ்டம் தான்,தாய் அதை படாமல் இருந்தால் நாம் வந்தே இருக்க முடியாது. ஆனால் இளைய தலைமுறை ஜாலியாக இருக்கவே விரும்புகிறது. கஷ்டமே இருக்க கூடாது என்று கனவு காண்கிறது.சின்ன வண்டு ஒன்று கூட்டில் இருந்து வெளியேறும் போது அவஸ்தையுடன் தான் பயணத்தை ஆரமிக்கிறது.இதை மாணவர்க்கு உணர்த்த ஆசிரியர் ஒரு வழி செய்தார் கூட்டில் இருந்து அது வெளிவரும் துயரத்தை பார்க்கட்டும் என்று மாணவர்கள் மத்தியில் விட்டுவிட்டு வெளியே போனார்.,அதன வேதனையை கண்ட ஒரு மாணவன் அதற்கு உதவி செய்வதாக நினைத்து கொண்டு அது வெளியேறும் ஓட்டையை பெரிதுபடிதினான்.அது சுலபமாக வெளியே வந்து விட்டது,மாணவன் மகிழ்ந்தான்,ஆனால் வண்டு மகிழவில்லை.வெளியே வந்ததும் அதனால் பறக்க முடியவில்லை. ஏன்?..

அதன சிறகுகளை அசைக்க கூட முடியவில்லை,செய்தி அறிந்ததும் அதன காரணம் கண்டுபிடித்தார்.கூட்டில் இருந்து சிறிய துளை வழியாக வெளியேற சிரமபடும்போது தான் அது தன் சிறகுகளை அசைத்து அசைத்து பழகுகிறது.அதற்கு வாய்ப்பே இல்லாததால் சிறகுகளை அசைக்க அதற்கு தெரியவே இல்லை.

சிரமங்கள் நம்மை பலபடுதுகின்றன.கஷ்டங்கள் நம்மை வலுபடுத்துகின்றன துயரங்கள் தான் நம்மை உருவாக்குகின்றன.எதிர்பாரத சிரமங்களை தவிர்க்க எதிபார்க்கும் சிரமங்களை ஏற்று கொள்ளுங்கள் ஆகவே,

 "கஷ்டபடாமல் இருக்க கஷ்டபடுங்கள்'

 வெற்றி நிச்சயம்...


....சுகிசிவம்/

என்றும் அன்புடன்

8 கருத்துகள்:

Chitra சொன்னது…

திரு சுகி.சிவம் sir பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும். பகிர்வுக்கு நன்றி.

S Maharajan சொன்னது…

முதல் வருகைக்கும்/வாழ்த்துக்கும்
நன்றி Chitra மேடம்.

virutcham சொன்னது…

தலைப்பும் அதற்கு ஒத்த விஷயங்களும் நல்லா இருக்கு.

பல சமயங்களில் சோம்பேறித்தனமாக நான் எனது பதிவில் எழுத்துப் பிழைகளை திருத்துவது இல்லை. நீங்களும் என் போல் தான் போல.

கொஞ்சம் கஷ்டப் பட்டு இனிமே நானும் எழுத்து பிழை தவிர்க்க முயலுகிறேன். உங்களுக்கும் அந்த கஷ்டங்களைக் கொஞ்சம் ஏற்றுக் கொள்ளும்படி சொல்லிக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

S Maharajan சொன்னது…

கருத்துக்கும்/பகிர்வுக்கும் நன்றி Virutcham நண்பரே!
//பல சமயங்களில் சோம்பேறித்தனமாக நான் எனது பதிவில் எழுத்துப் பிழைகளை திருத்துவது இல்லை. நீங்களும் என் போல் தான் போல//

திருத்தி கொள்கிறேன்

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
சசிகுமார் சொன்னது…

//"கஷ்டபடாமல் இருக்க கஷ்டபடுங்கள்'//

ஒரு வார்த்தை சொன்னாலும் திருவார்த்தை சொல்லிடீங்க நண்பரே, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

S Maharajan சொன்னது…

வருகைக்கும்/கருத்துக்கும் நன்றி சசி..
நேரம் கிடைக்கும் போது என்னுடைய சந்தேகத்திற்கு பதில் அளிக்கவும்.உங்கள் மினஞ்சலை பார்க்க வேண்டுகிறேன்

Jaleela Kamal சொன்னது…

உங்கள் இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பார்வையிடவும்.

http://blogintamil.blogspot.com/2012/09/blog-post_22.html

கருத்துரையிடுக