ஞாயிறு, பிப்ரவரி 28, 2010

விண்ணைத்தாண்டி வருவாயா-சினிமா விமர்சனம்



படம் ஆரம்பிக்கும்பொழுதே காதலும் ஆரம்பித்து விடுகிறது. பிறகு படம் முழுக்க காதல், காதல், காதல். எந்த வித சிதறல்களும் இன்றி காதலையே காட்டுகிறார்கள். இஞ்சினியரிங் முடித்துவிட்டு துணை இயக்குனராகும் ஒருவன், மாடி வீட்டு மலையாள கிறிஸ்டியனைக் பெண்ணை காதலிக்கும் கதை.


சிம்பு நன்றாக நடித்து உள்ளார்.காதலினால் அவர் படும் அவஸ்தைகளைக் உணரவைக்கும் நடிப்பு. த்ரிஷாவும் அழகாக நடித்து இருக்கிறார்.
சிம்பு, த்ரிஷா இருவருமே படத்தில் செம அழகு . மனோஜ் பரமஹம்ஸா படத்திற்கு அழகுணர்ச்சி சேர்த்திருக்கிறார். ரஹமான், படத்தில் விளையாடியிருக்கிறார். படம் கொஞ்சம் இயல்புதான். இப்படியான கதைகளை நிறைய நாம் பார்த்திருப்போம். இதில் என்ன வித்தியாசம் என்றல் ஒரு பெண்ணின் உண்மைக்காதலையும் எடுத்து காட்டியிருப்பது தான்.சில குறைகளும் இருக்கத் தான் செய்கிறது,

ரஹ்மான் இல்லை என்றால் படமே இல்லை,குறிப்பாக அவர் பாடும் "மன்னிப்பாய"பாடல் அருமை.

விண்ணைத்தாண்டி வருவாயா-நான் எழுதிய டைரியை சில ஆண்டு காலம் களித்து படித்த உணர்வு எனக்கு ஏற்பட்டது.

.

வியாழன், பிப்ரவரி 25, 2010

பணம் பணமறிய அவா

அன்னை தேசத்து
அகதிகள் நங்கள்
எண்ணெய் தேசங்களில்
எரிந்து கொண்டிருக்கிறோம்!

அடிவயிற்றில் பதிந்த
வறுமைக் கோடுகளின்
மர்மக் கரங்கள்
அறுத்தெரிந்து வீசிய
ஜீவனுள்ள
மாமிசத் துண்டுகள் நாங்கள்!

கண் தெரியா தேசத்தில் விழுந்து
காயங்கள் தலை சாய்த்துக்
கண்ணீர் வடிக்கிறோம்!

மொத்தக் குடும்பத்தையும்
முதுகில் சுமந்து
இன்னும் தீர்மானிக்கப்படாத்
திசைகளில் தொடர்கிறது
நம் பயணம்!

ஒவ்வொரு முறையும்
நலம் நலமறிய அவா
என்றுதான் கடிதம் எழுதுகிறோம்!
பணம் பணமறிய அவா
என்றல்லவா பதில் வருகிறது!

நமக்கு மட்டும் ஏன்
பணம்
பந்த பாசங்களின்
சமாதியாகிவிட்டது?

ஒரு டெலிபோன் கார்டிலும்
ஒரு பொட்டலம் பிரியாணியிலும்
முற்றுப்பெற்றுவிடுகிறது
நம் பண்டிகை நாட்கள் ஒவ்வொண்றும்.....

உயிரை பிழிந்து பிழிந்து
பாசத்தால் ஒத்தடம் தந்த
உறவுகளைப் பிரிந்து
இன்னும் எத்தனை நாட்கள்
இந்த ஏகாந்த வாழ்கை?

கலவரத்தில்
கைக் குழந்தையைத் தொலைத்த
தாயின் பதற்றத்தைப்போல்தான்
ஒவ்வொரு முறையும் போன் பேசிய
பின்னால் அடையும் அவஸ்தைகள்......

நம்மில் பலருக்கு
தாம்பத்திய வாழ்க்கைகூட
தவணை முறையில்தான்
தட்டுப்படுகிறது.....

தொலைபேசியிலும்
தபாலிலும்
கொஞ்சலும், சிணுங்கலுமாய்...
இன்ஸ்டால்மெண்டில்
இல்லறம் நடக்கிறது...

மனைவியின்
மூச்சுக் காற்று தந்த சுகம்கூட
இந்த ஏசி காற்று தருவதில்லை!

குடும்ப விளக்குகளை
கும்மிருட்டில் தவிக்கவிட்டு விட்டு
தீக்குச்சிகள் நாம்
தன்னந்தனியாய்
இந்தத் தீவுகளில்...

வீடுகூடும் நிஜம் தொலைத்து
ஒரு வீடு கட்டும் கனாவில்
இன்னும் எத்தனை ஆண்டுகள்
இந்த பாலைப் பிரதேசங்களில்?...

உயிரோடு இருக்கும்
பெற்ற குழந்தைக்கு
புகைப் படத்தில்தான்
கொடுக்க முடிகிறது
செல்ல முத்தங்கள்!

என்ன இருந்தாலும்
காகிதங்கள் உணருமா
பாசத்தின் ருசி

ஒவ்வொரு முறையும்
ஊர் சென்று திரும்பும்போது
மறக்காமல் எல்லாவற்றையும்
எடுத்து வர முடிகிறது
மனசைத் தவிர...!

காலத்தின்
இந்த பசை தடவல்கள்
நம்மை கட்டிப்போடாமல்
வெறும் கடிதம் போடத்தானா?

பாலைவன ஜீவன்கள் நாம்
தாகத்தோடு காத்திருக்கின்றோம்!
தண்ணீருக்காக அல்ல
தபால்களுக்காக....

வாழ்க்கையின் பாதி
விரக்தியிலும், விரகத் தீயிலும்
எரிந்துபோகும் நம் வாலிப வாழ்க்கை
கடைசியில் நரம்புகள் அறுந்துபோய்
முகாரி பாடும் வீணைகளாய்...


என்ன சொல்லி
என்ன பயன்
தண்ணீரில் மீன் அழுதால்
கண்ணீரைத்தான் யார் அறிவார்?

செவ்வாய், பிப்ரவரி 23, 2010

பொறுமையே? உன் பெயர் ரஜினியா....


இந்த முறை ரஜினியை சீண்டி இருப்பது ஜாகுவார்தங்கம்,குகநாதன்.  ரஜினியை ஜோக்கர் என்றும்,அஜித்தை மிக கேவலமாகவும் திட்டி உள்ளனர்.

இதுவரையிலும் ரஜினி என்னும் தமிழின் "சூப்பர்ஸ்டாரின்" இருப்பிடத்தை அசைக்க முடியாத இயலாமையில் முடியாதவர்கள் பலரும் வைக்கின்ற ஒரு முட்டாள்தனத்தை இந்த முறை இந்த இருவரும் வைத்து உள்ளனர்.

ஏன்?

முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவில் அஜித் சொன்ன கருத்தும் அதற்கு ரஜினியின் ஆதரவான கருத்தும் தான் காரணம். ரஜினிக்கு கண்டனம் என்று கூறியிருக்கும் அறிக்கையில் நடிகர் சங்கம் கையெழுத்திட்டு இருப்பதுதான் வெக்ககேடன விஷயம்.இதே நடிகர் சங்கம் பிச்ரனைகாக எத்தனை முறை இந்த மனிதர் குரல் கொடுத்து இருக்கிறார். அவருடைய புகழ் அவர்களுக்கு வேண்டும்.. பணம் அவர்களுக்கு வேண்டும்.. ஆனால் அவர் மட்டும் வேண்டாம் என்பது இவர்களது புதிய இலக்கனம்மாக இருக்கிறது,

நடிகைகளை விபச்சாரிகள் என்று தினமலர் போட்டுவிட்டது என்றதும் , ரஜினி வந்து பத்திரிகைகளுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றதும், ஜக்குபாய்க்கு ஒரு பிரச்சினை என்றதும் ரஜினி வேண்டும் என்று முரட்டுப் பிடிவாதம் பிடித்ததும் இந்த நடிகர் சங்கம் தான்.ஆனால் ரஜினிக்கு ஒரு பிரச்சினை என்றால் மட்டும் நாங்கள் பேசமாட்டோம் என்கிறது  நன்றி கெட்ட நடிகர் சங்கம்.

ரஜினி எத்தனையோ எதிர்ப்பை தாண்டி வந்தவர்தான் என்றாலும்,
ஒவ்வரு முறையும் அவரை அவமானபடுத்தும் போது ரசிகர்களுக்கு வலிக்கத்தான் செய்கிறது.ரஜினிக்கு கண்டனம் தெரிவித்த இவர்கள் ஏன் ஜாகுவார் தங்கம், குகநாதன்க்கு கண்டனம் தெரிவிக்கவில்லை.

முன்பு ஒரு முறை ஒகெனேகல் பிரச்சனையின் போது கூட மேடையில் ரஜினியை வைத்து கொண்டே புரட்சி தமிழன் பேசிய வார்த்தைக்கும் கூட இவர்கள் கண்டனம் தெரிவிக்கவில்லை. ஏன் ரஜினி என்றால் இவர்களுகு இளக்காரமா?

பாலிவுட்டில் ஷாருக்கனுக்கு சமிபத்தில் வந்த பிரச்சனைகளுக்கு அனைத்து நடிகர்களும் ஷாருக்கிற்க்கு ஆதரவு தெரிவித்தனர். அத்துடன் பிரச்ச்னையை முடித்துக் கொண்டார்கள் எதிர் தரப்பினர். அதுபோல் இங்கும் அனைத்து நடிகர்களும் அஜீத்திற்க்கு ஆதரவு கொடுக்க வேண்டும். ரஜினி மட்டும் ஆதரவு தெரிவித்திருக்கிறார் மாணமுள்ள மனிதனாக! அதற்கு தான் இவர்கள் மீண்டும் ரஜினியை வம்புக்கு இழுத்து இருகிறர்கள்

நடிகர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் பிப்ரவரி 27ம் தேதி நடிகர் சங்கக் கட்டடத்தில் கூடுமாம். இந்தக் கூட்டத்தில் நடிகர்கள் சத்யராஜ், குயிலி, மும்தாஜ், சின்னிஜெயந்த், மயில்சாமி, எஸ்வி சேகர், பூச்சி முருகன் ஆகியோர் பங்கேற்று, ரஜினி-அஜீத் மீது என்ன மாதிரி மேல் நடவடிக்கை எடுப்பது என்று விவாதிப்பார்களாம்.

இதை என்னவென்று சொல்வது!கால கொடுமையடா சாமி


இவர்களுக்கெல்லாம் ஒன்று சொல்லுகிறோம்
ரஜினி தனி மனிதன் அல்ல....

ஒன்று நிச்சயம்....
இந்த பயணத்திலும் இவர் நிச்சயம் தடைகளைத்தாண்டி
தடம் பதிக்கப் தான் போகிறார்.

அப்போது இன்னும் உரக்க சொல்லுவோம் உலகுக்கு
இவர் ரசிகராக இருப்பதே பெருமையென்று.....

"நெருப்புபொன்னைச்சோதிக்கிறது .
பொறுமை இந்த மனிதனை சோதிக்கிறது" .

வியாழன், பிப்ரவரி 18, 2010

இளம்வயது சாதனையாளர்கள் (தெரிந்து கொள்ளுங்கள்)

நேர் மறை மனபாங்கு,இலக்கு,முடிவு இவைகள் அனைத்தும் உணர்ந்து மிக இளம் வயதில் சாதனை படைத்தவர்கள்.

1. இந்திய சரித்திரத்தில் இடம்பெற்ற போது பகவத்சிங்
வயது 23

2. புத்தர் ஞானம் பெற அரண்மனையை விட்டு வெளியேறியபோது    வயது  27 

3. ஜான்சிராணி லட்சுமிபாய் வெள்ளையனை எதிர்த்து போரிட்ட போது வயது 25

4. திருப்பூர் குமரன் வெள்ளையனை எதிர்த்து ரத்தம் சிந்தியபோது வயது 26

5. அலெக்ஸ்சாண்டர் பாரசிகத்தின் மீது படையெடுத்த போது
வயது 22

6. நியூட்டன் புவி ஈர்ப்பு விசையை கண்டறிந்த போது
வயது 24 

7. கலிலியோ தெர்மோ மீட்டர்யை கண்டுபிடித்த போது
வயது 20

8. மார்கோ போலோ உலக பயணத்தை தொங்கிய போது
வயது 17

9. கிரகாம்பெல் தொலைபேசியைகண்டுபிடித்த போது
வயது 29

10. கவிஞர் ஷெல்லி புகழ் பெற்ற ஆங்கில கவிதைகளை எழுதிய போது   வயது 29 

11. குற்றாலீஸ்வரன் கடலை நீந்திய போது
வயது 11

12. மண்டலின் ஸ்ரீனிவாசன் புகழ் பெற்ற போது
வயது 15 

செவ்வாய், பிப்ரவரி 16, 2010

துப்பாக்கி தேவை (சிறுகதை )



நீ சொன்னாய் என்பதற்காக உன் அப்பாவிடம் பேசலாம் என்று முடிவு எடுத்தேன்.அலுவலகத்தில் இருக்கிறேன் சாயங்காலம் 'சரவணபவனில்' சந்திக்கலாம் என்று கூறியபோது கடமை தவராதவரின் மகளை தான் காதலித்து இருக்கிறேன் என்று பெருமை கொண்டேன். சொன்னபடி வந்த அவரை பார்த்து "எருமை மாட்டிற்கு மான் குட்டி எப்படி பிறந்தது" என்ற பழமொழி தான் நினைவில் வந்தது."மான் குட்டி" என்பது உனக்கு அதிகம் என்றாலும் எருமை மாடு உன் அப்பனுக்கு குறைவே.

அந்த கடையில் பில் போடுவதற்கான கம்ப்யூட்டர் தவிர மற்ற அனைத்தையும் தின்று தீர்த்து விடும் வெறி அவர் கண்ணில் இருப்பதை பார்க்க தவறிவிட்டேன் நான்.சரி ஏதாவது சாப்பிட்டு விட்டு பேச்சை துவங்கலாம் என்று சர்வரை அழைத்தேன்,அதன் பின் உன் அப்பன் கைங்கரியத்தால் சமையல் கட்டிருக்கும் டேபிளுக்கும் சுமார் அம்பது ஓட்டங்கள் எடுத்தான் சர்வர்.

அரசனிலும்,அன்னபூர்ணாவிலும் நீ புல் கட்டு கட்டுவது ஒரு "ஜெனடிக் பிரச்சனை" என்று கண்டுகொண்டேன்.வேழ முகம் தான் இல்லையே தவிர பேழை வயறு இருக்கிறது உன் பரம்பரைக்கே...

அவரது வேட்டையை ஒரு வழிக்கு கொண்டு வர இயலாதவனாய் இருந்தேன்'தம்பி இபோதெல்லாம் முன்ன மாதிரி சாப்பிட முடியவில்லை என்று திருவாய் வேறு மலர்ந்தார். திடபொருளிலிருந்து "ரோஸ் மில்க்" போன்ற திரவ பொருளுக்கு மாறினார்.அப்பாட முடித்துவிட்டார் என்ற என் என்னத்தை ஒரு "கஸாட" என்ற வார்த்தையில் உடைத்தார்.ஜர்தார் பீடா சாப்பிடவில்லை என்றாலும் நெல்லையப்பர் கோவிலில் உண்ட கட்டிக்கு காத்திருக்கும் கோவில் யானைக்கும் உன் அப்பனுக்கும் ஆறு வித்தியாசங்கள் கூட இல்லை. தம்பி எப்ப சாப்பிட்டாலும் கடைசியா ஒரு ஐஸ்கிரீம் சாப்டருது வழக்கம் என்ற அவரது கூற்றிலிருந்து "கடைசியா" என்ற வார்த்தை தான் எனக்கு வாழ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது.

"சார் உங்க மகளை லவ் பண்ணுகிறேன்"

அவளையே கல்யாணம் செய்து கொள்ள ஆசை படுகிறேன்" என்று சொன்ன போது அப்போ இது விஷயமா போனவாரம் "ஆர்யாஸ் ஹோட்டலில்" பேசினது நீங்கள் இல்லையா?! என்று அவர் ஆச்சரியமாக கேட்ட போது தான் தெரிந்தது,மொத்த குடும்பமும் இரை எடுபதற்கென்றே
எவனயாவது இரையாக்குவதை "ப்ரோபோச்னல் "டச்சோடு செய்வதை உணர்ந்தேன்.

"தம்பி இது பெரிய விஷயம் ஒரு நாளில் பேசி தீர்த்து விடமுடியாது" நீங்க ஒன்னு பண்ணுங்க நாளைக்கு சாயங்காலம் "அன்னபூர்ணா" வந்துடுங்க அப்ப பேசிகொள்ளலாம் என்ற உன் அப்பனை கொல்ல அந்த நேரம் என்னிடம் துப்பாக்கி இல்லாமல் போனது என் துர்பாக்கியமே!







(கடந்த வருடம் நண்பர்(2009) மின்னஞ்சலில் அனுப்பிய கதையை சற்று மாற்றி எழுதி இருக்கிறேன்)

திங்கள், பிப்ரவரி 15, 2010

காதல்! என் காதல்!

காதல்!
ஏக்கம் துக்கம் கலந்தது
ஆம் உண்மை தான்
மரணத்தை போல!

காதல்!
பிணி மூப்பு அற்றது
ஆம் உண்மை தான்
மரணத்தை போல!

காதல்!
நோய் நொடி அற்றது
ஆம் உண்மை தான்
மரணத்தை போல!

காதல்!
பாவம் ஞாயம் தெரியாதது.
ஆம் உண்மை தான்
மரணத்தை போல!

ஆம் உண்மை தான்
மரணத்தை போல!
என் காதலும்
மரணமில்லாதது!

வியாழன், பிப்ரவரி 11, 2010

என்காதல்!


காதல், இந்த மூன்று எழுத்து மந்திரம்.அனைவரது வாழ்விலும் வந்து போகும் ஒரு சுவாச காற்று.வாழ்வில் எனக்கும் வந்தது,
அப்பொழுது தான் நான் எனது பாலிடெக்னிக் முடித்து வேலை தேடி கொண்டு இருந்த நேரம்.ஒரு நாள் மாலை என் தங்கை உடன் வீட்டிற்கு வந்தாள் அவள்.(பெயர் வேண்டாம்,இன்று ஒரு குழந்தைக்கு தாய் அவள் )

எல்லா படத்திலயும் கதாநாயகன் பேசுவாரே? ஒரு வசனம் "உன்னை பார்த்த உடனே மனசுல ஆயிரம் பட்டாம் பூச்சி பறந்தது",அது மாதிரிதாங்க எனக்கும் இருந்தது. அன்று முதல் தினமும் என் தங்கையை கல்லூரிக்கு சென்று விடும் பனியை நானாகவே ஏற்று கொண்டேன்.தினசரி அவளை பார்த்தல் போதும் எனக்கு.ஒரு நாள் என் வீட்டிற்கு அவள் வந்த போது தைரியமாக அவளிடம் என் ஆசையை சொன்னேன்.

காதல் மலர்ந்தது, அவளுக்கோ இரண்டாம் ஆண்டு கல்லூரி படிப்பில்,எனக்கோ வேலை கிடைத்தது சென்னையில்.

தினமும் மாலை தொலைபேசியில் பேசுவாள்.ஒரு வருடம் போனது வந்தான் விதி என்னும் காலன், அவள் படிப்பை முடிக்க வீட்டில் மாப்பிள்ளை படலம். இருமுறை தவிர்தவள்,மூன்றம் முறை அவள் தந்தையிடம் எங்கள் காதலை சொல்ல,அவர் என்னை அழைத்து பேசினார்.ஒரு கடமை தவராதவரின் மகளை தான் காதலித்து இருக்கிறேன் என்ற கர்வமும் எனக்கு கூடியது,ஆனால் அன்றைக்கோ நான் சூழ்நிலை கைதி.

அப்பொழுது என் அண்ணனுக்கோ,தங்கைகோ கூட திருமணம் முடியவில்லை,வருமானமும் குறைவு. அந்த நல்ல மனிதருக்கோ தன் மகளின் வாழ்கை முக்கியம். விதி வென்றது!

என்னை விட்டு கொடுத்தாள்.
அந்த வெள்ளை உள்ளம் படைத்தவள்.

சேர்வது மட்டும் அல்ல காதல்!
சேராமல் வாழ்த்துவதும் காதலே!

செவ்வாய், பிப்ரவரி 09, 2010

தமிழ் சினிமாவின் வெற்றி கூட்டணி- படங்கள் ஒரு பார்வை

தமிழ் சினிமாவில் தற்போது பல வெற்றி கூட்டணிகள் இருந்தாலும் இங்கே நான் பதிவாக கொடுக்க போகின்றது சுமார் பல (1977-1992) ஆண்டுகளாக தொடர்ந்த வெற்றி கூட்டணி.

இந்த காலகட்டத்தில் இந்த கூட்டணியில் முக்கிய பங்கு இசைஞானி இளையராஜா தான்.

இவருடன் பணியாற்றிய சில இயகுனர்கள் மற்றும் அவர்கள் இசைஞானி உடன் பணியாற்றிய படங்கள் & அந்த படங்களின் வெற்றி பற்றி தான் இந்த பதிவு.

இது பற்றி பல பதிவர்கள் எழுதி இருந்தாலும் என்னுடைய பதிவாக சிலவற்றை எழுதலாம் என்று எழுதுகிறேன்.

இசைஞானியோடு பல இயகுனர்கள் பணியாற்றி இருந்தாலும் நம் மனதில் சில இயகுனர்கள் மட்டுமே இடம் பிடிகின்றனர்.
அவர்களில் முதலில் வருபவர் இயகுனர் திரு.மணிரத்தினம் அவர்கள்
.

இசைஞானியும்,மணிரத்தினம் இணைந்த படங்கள் அத்தனையுமே வெற்றி படங்கள்தான்.


பகல்நிலவு (1985)

முரளி,ரேவதி,சத்யராஜ்,ராதிகா,சரத்பாபு,நிழல்கள் ரவி மற்றும் பலர் நடித்தது.....

ஊரின் பெரியமனிதர் சத்யராஜ்,அவரின் இரு மகன்களும் செய்யும் அடாவடிக்கு துணையாக முரளி.

அந்த ஊரின் இன்ஸ்பெக்டர் சரத்பாபுவின் தங்கை ரேவதி.ரேவதியை முரளி காதலிக்கிறார்.ரேவதி,முரளி காதலை முதலில் சரத்பாபு ஏற்க மறுத்தாலும் பின் சம்மதிக்கிறார்.
இதற்கிடையில் நாட்டியம் சொல்லி தரும் ராதிகாவை சரத்பாபு விரும்கிறார்.ராதிகா ஏற்கனவே நிழல்கள் ரவியால் கற்பிளந்து போகிறார்.சரத்பாபு,சத்யராஜின் எல்லா கட்ட பஞ்சயதையும் நிறுத்துமாறு சொல்ல அவரை கொல்ல சத்யராஜ் முரளியை பகடகாயா பயன்படுத்துகிறார்.இது தெரிந்து ரேவதி முரளியை வெறுக்க,முரளி தான் நல்லவன் தான் என்பதை முடிவில் சத்யராஜ்& கோ வை கொன்று நிருபிக்கிறார்.

இந்த படத்தில் எல்லா பாடல்களும் அருமையாக இருக்கும்.
குறிப்பாக "பூமாலையே தோள் சேரவா" .....

ஒரு காதல் பாடலை இப்படிக் கூட கம்போஸ் செய்து பாட முடியுமா என சக இசையமைப்பாளர்களை பிரமிக்க வைத்த பாடல் இது. ராஜாவின் இசை, குறிப்பாக ஜானகியின் குரலோடு இணைந்து பாடும் ராஜாவின் அந்தப் புதிய உத்தி, காலத்தின் நியதிகளை வென்ற பாடலாக இதை மாற்றியது. மற்றொரு அருமையான பாடல் ஜெயச்சந்திரன் குரலில் ஒலிக்கும்
"பூவிலே மேடை நான் போடவா"பாடல்.

படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது இந்த பாடல்கள்.

இன்னும் வரும்......

ஞாயிறு, பிப்ரவரி 07, 2010

அசல்-சினிமா விமர்சனம்





நடிப்பு: அஜித் , பிரபு ,சமீரா ரெட்டி,பாவனா,சுரேஷ், யூகி சேது,சம்பத்,ராஜீவ் கிருஷ்ணா.

இசை : பரத்வாஜ்
இயக்கம் : சரண்
தயாரிப்பு : சிவாஜி பிலிம்ஸ்

அஜித் முதல் முறையாக இணை இயக்குனராக பணியாற்றி இருக்கும் படம். கதை திரைக்கதையிலும் அவரின் பங்கு உண்டு.

கதை இது தான்.

அப்பா அஜித், அவருக்கு மூன்று பிள்ளைகள். (அப்பா அஜித்திற்கும் மகன் அஜித்திற்கும் உள்ள வித்யாசம் பெரிதாக இல்லை ). அதில் மகன் அஜித் அப்பா அஜித்தின் சின்ன வீட்டிற்கு பிறந்தவர். இதனால் மற்ற இரு பிள்ளைகளுக்கும் (சம்பத், ராஜீவ் கிருஷ்ணா ) அவரை கண்டால் பிடிப்பதில்லை. இந்நிலையில் அப்பா அஜித் இறந்து விட, சின்ன அஜித்தை அவமான படுத்தி வீட்டை விட்டு அனுப்ப முயற்சிகிறார்கள். இதற்கிடையில்,மற்ற இரு மகன்களும் அப்பாவிற்கு தெரியாமல் செய்த திருட்டு வியாபாரத்தின் தொழில் போட்டி காரணமாக ராஜீவ் கிருஷ்ணா மும்பைக்கு கடத்தப்படுகிறார்.அவரை விடுவிக்க அஜீத் மும்பை பயனமாகிறார்.அவருடன் அவருடைய உதவியாளர் சமீராவும் மும்பை செல்கிறார். அது முடிந்தவுடன் அவரை கொலை செய்கிறார்கள்.அதிலிருந்து தப்பி,மீண்டும் பிரான்ஸ் சென்று கடும் போராட்டத்தின் பின் என்னத்துக்காக தன்னை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள் என்ற இரகசியத்தை கண்டுபிடித்து வில்லன்களை அழிப்பதுதான் கதை.

சில இடங்களில் பில்லா (2007) நினைவுக்கு வருவதை தடுக்க முடிவதில்லை. ஸ்லோ மோசன் நடை சில இடங்களில் சலிப்பூட்டவே செய்கிறது,கேட்டால் power of silence என்கிறார்கள்.அஜித் இன் அறிமுக
காட்சி அசத்தல். தூதரக அதிகாரி கடத்தப்பட,அவரை காப்பாற்ற அஜித்தை அணுகுகிறார்கள். அந்த கார் சேசிங் சூப்பர்.

மும்பை வில்லன் (பெயர் தெரியவில்லை) சூப்பர்,அமைதியாக வந்து கலக்குகிறார்.
மும்பையில் ஜீவானந்ததின்(அப்பா அஜித்)நண்பராக் பிரபு. பிரபு விடம் வேலை பார்கிறார்கள் பாவனாவும், யுகிசெதுவும்.
பாவனா கண்டதும் அஜித் மேல்
காதல் கொள்கிறார்.பாவனா, இந்த படத்தில் அனியாயத்துக்கு அழகாக இருக்கிறார். அழகாக வெட்கப்படுகிறார், அவ்வப்போது கவர்ச்சி காட்டுகிறார், சூப்பராகச் சிரிக்கிறார்,ஒரு இன்னசன்ட் கதாபாத்திரத்துக்கு அப்படியே பொருந்தியிருக்கிறார்
சமீரா ரெட்டி சும்மா வந்து போகிறார்.

ஊகிக்ககூடிய திரைக்கதை தான் என்றாலும்

ஒளிப்பதிவு மிகவும் அருமை.பிரான்ஸ் நகரை அழகாக காட்டி இருகின்றார். பாடல்களில்"துஷ்யந்த"பாடல் மட்டும் ஒ.கே ரகம்.

கிளைமாக்ஸ் படு சொதபல்

அசல்-பார்க்கலாம்

வியாழன், பிப்ரவரி 04, 2010

மனதைத் தொட்ட வரிகள்!!!

1.பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். பணம் குறைந்த வட்டிக்கு வெளியேகிடைக்கும்-ஸ்காட்லாந்து பொன்மொழி

2. துன்பம் துன்பம் என்று சலித்துக் கொண்டு என்ன பயன்? உடம்பிலிருக்கும் ஒன்பது ஓட்டைகளோடு அதுவும் பத்தாவது ஓட்டை என்று முடிவு கட்டு : வாழ்வுக்கு நியாமும், நெஞ்சிற்கு நிம்மதியும் கிடைக்கும். - கவியரசு கண்ணதாசன்

3. உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை; தீமையையும் விரட்டுகிறது.- வால்டேர்

4. அழகான பெண் , கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம் , இரண்டாமவள் ஒரு புதையல் - மாவீரன் நெப்போலியன்

5. ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கிவிடுகிறாள். - ஆஸ்கார் ஒயில்ட்

6. பெண்களில் இரண்டே பிரிவினர் தாம் இருக்கிறார்கள். ஒன்று அழகானவர்கள். மற்றொன்று அழகானவர்கள் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள் - பெர்னாட்ஷா

7. அழகான பெண்களுக்குப் பிறக்கும்போதே நிச்சயதார்த்தம் நடந்து விடுகிறது. - ஹாபர்ட்.

8. பெண் இல்லாத வீடும் , வீடு இல்லாத பெண்ணும் மதிப்பு இல்லாதவை! - பாலஸ்தீனப் பழமொழி

9. ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. - ப்ரெட்ரிக் நீட்சே

10. நீங்கள் போருக்குச் செல்லும்போது ஒரு தடவை பிரார்த்தனை செய்யுங்கள். கடல் பயணத்திற்குச் செல்லும்போது இரண்டு தடவை பிரார்த்தனை செய்யுங்கள் ஒரு பெண்ணை மனைவியாக ஏற்கும் போது மூன்று தடவை பிரார்த்தனை செய்யுங்கள்- வின்ஸ்டர்லூயிஸ்

11. தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும்

மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்

12. குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன்அடியில்

சற்று இருள் இருக்கத்தான் செய்யும்

13.சுயநலம் என்பது சிறு உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான்

14. வெற்றியின் ரகசியம் - எடுத்த கரியத்தில் நிலையாக இருத்தல்

15. பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம

இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.

16. மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது

நண்பனை பற்றி நல்லது பேசு.விரோதியை பற்றிஒன்றும் பேசாதே.

17. அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!

18. செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை!

19. நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை!

20. பறக்க விரும்புபவனால் படர முடியாது!

21. மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.

22. ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.

புதன், பிப்ரவரி 03, 2010

ரஜினி - ஒரு சகாப்தம்



ர‌ஜினி- நடிகர் என்ற அடையாளத்துக்கு மேலாக அவரது பெயர் உலகத்தில் உருவாக்கியிருக்கும் தாக்கம் ஆச்ச‌ரியமானது. சினிமா ஆன்மிகம் அரசியல் என்ற மூன்று முகம் கொண்ட ர‌ஜினியின் பிரபல்யத்தை தனிப்பட்ட சாதனையாக ஏற்க மறுப்பவர்களுக்கும் உண்டு. விருது, பாராட்டு விழா போன்றவற்றுக்கு அப்பாற்பட்டவர். 'பணம், புகழ் இதெல்லாம் வந்தாலும் சரி, போனாலும் சரி ஏன்னு கேட்க முடியாது' என தனது அனுபவத்தையே பாடமாக சொன்னவர்.ஒருவர் உன்னை தாழ்த்திப் பேசும்போது ஊமையாய் இரு... புகழ்ந்து பேசும்போது செவிடனாய் இரு... எளிதில் வெற்றி பெறுவாய்! என்ற தத்துவத்தின் படி வாழும் ர‌ஜினியை அவரது தாயார் ரமாபாய்
நாச்சிக்குப்பத்தில் பெற்றெடுத்தார் என்பது அனனவருக்கும் சமீபத்தில் தெரிந்து இருக்கும் உண்மை. இதற்கு முன்பு அவர் வேற்று மாநிலத்துக்காரன் என்ற பேச்சும் இதன் முலம் மாறிவிட்டது.ரஜினியை ஏன் அனைவருக்கும பிடிக்கிறது தெரியுமா? அவர் அரைவேக்காடுகளின் விமர்சனங்களைக் கண்டுக்கொள்வதுமில்லை, சுயநலமிகள் சிலரது புகழ்மொழிக்கு மயங்குவதும் கிடையாது.




ர‌ஜினியின் நடத்துனர் வேலையும், அவரது சினிமா பிரவேசமும் அனைவரும் அறிந்தது. எதிர்பாராத விபத்தால் நிகழ்ந்த அற்புதமல்ல ர‌ஜினியின் திரை பிரவேசம். பசி, பட்டினி, அலைச்சல், அவமானங்கள், காத்திருப்புகள், ஏமாற்றங்கள் என அனைத்தும் நிரம்பியது அவரது ஆரம்ப காலம். சினிமா பின்னணி வாய்க்கப்பெறாத ஒருவர் எதிர்கொள்ளும் அனைத்து சவால்களையும் ர‌ஜினியும் எதிர்கொண்டார்.

கலைந்த சிகை, கறுத்த மேனி, அலட்சிய பார்வை, திரையில் அதுவரை பார்த்திராத ஸ்டைல் என ரசிகர்களை சுண்டி இழுத்தார் ர‌ஜினி. சினிமாவின் அழகியல் இலக்கணங்களுக்கு அப்பாற்பட்ட அவரை தங்களின் பிரதிநிதியாக பார்க்க தலைப்பட்டார்கள் சாதாரண ஜனங்கள். .

புகழின் உச்சியிலும் நிலைதடுமாறாத மனம், அவருக்கு கிடைத்த ஆன்மீக ப‌ரிசென்றால் அதில் மிகையில்லை.

பிரபலம் கொடுத்த அதிகாரத்தை அவர் தனது எதி‌‌ரிகளின் மீது ஒருபோதும் பிரயோகித்தது இல்லை.


மனோரமா,மன்சூர்அலிகான்,வேலுபிரபாகரன்,பாரதிராஜா,சத்யராஜ்,போன்றோர் அவரை விமர்சித்த போது ர‌ஜினியின் எதிர்தாக்குதல் அரவணைப்பாகவே இருந்ததை நாடறியும்.அதனால்தான் இன்றும் நிறைகுடமாய், எல்லாம் அறிந்தும் எதுவும் தெரியாத பாவனை காட்டும் ஞானியாய் இருக்கிறார்.


வாழ்க்கையை வெளிப்படையாக வாழ்ந்து பழகிவிட்டவர் ர‌ஜினி.அரசியலுக்கு‌‌ரிய பொறுமையும், சாதுர்யமும் இருந்தும் இன்னும் அதை தொடததில் ஆச்சரியமே!!!





திரையில் வரும் கதாநாயக பிம்பத்தை நிஜத்திலும் பேண வேண்டிய கட்டாயம் ர‌ஜினிக்கு முன்பு அனைவருக்கும் இருந்தது. அந்த அவஸ்தையை உடைத்தெறிந்தவர் ர‌ஜினி. தனது வழுக்கை விழுந்த தலையை பொது இடங்களில் மறைக்க ஒருபோதும் அவர் முயன்றதில்லை.



ஆரம்ப காலத்தில் அவர்மீது படிந்த கலகக்கார சாயல் இன்று இல்லை. இன்று அவர் ஒரு ஆன்மீகவாதி. சிறந்த குடும்பத் தலைவர். சமூக ஒழுக்கங்களை மீறாத நல்ல குடிமகன். மரபான சமூக ஒழுக்கங்களின் நிழலில் பாதுகாப்பை தேடும் அனைத்து தரப்பினருக்கும் அவர் ஆதர்ஷ புருஷன். அவரை விரும்புவதன் மூலம் அந்த பாதுகாப்பு குறித்த நம்பிக்கை இன்னும் அதிகரிக்க தான் செய்கிறது.


ர‌ஜினி என்பது இன்று ஒரு பெயர் மட்டுமல்ல. ர‌ஜினி என்பது ஒரு நபருமல்ல. அதையெல்லாம் தாண்டி அது ஒரு மிகை யதார்த்த பிம்பம். அந்த பிம்பத்திற்கு எதிராக யாராலும் ர‌ஜினியை ஒன்றும் செய்ய இயலாது.
ர‌ஜினிக்கு இன்று எதி‌‌ரிகள் யாருமில்லை. அவர் வெற்றி கொள்ள வேண்டியவர்கள் ஒருவருமில்லை. அவர் எட்ட வேண்டிய உயரங்களும் இல்லை. இன்று அவருக்கிருக்கும் ஒரே சவால், சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் நடிகன்(ர‌ஜினி ) என்ற என்ற பிம்பத்தை கடந்து ,ஒரே அடையாளத்தில் தங்கிப் போகாமல் இருப்பது தான்.இது சாத்தியமா என்றால், நிச்சயம் சாத்தியமே. எத்தனையோ சாதனைகளை செய்த ர‌ஜினியால் இந்த சவாலையும் வெற்றி கொள்ள முடியும்.இதை தான் முன்பே அவர் சொல்லி இருப்பார் இப்படி


"மத்தவங்க நினைக்கிறதை நான் செய்ய மாட்டேன்...
நான் செய்றத மத்தவங்க எதிர்பார்க்கவும் விடமாட்டேன்!"



                                                           வாழ்க ரஜினி !!!

செவ்வாய், பிப்ரவரி 02, 2010

நிஜ ஹீரோ சகாயம் ஐ.ஏ.எஸ்.

சகாயம் ஐ.ஏ.எஸ்., நாமக்கல் மாவட்ட ஆட்சியர்

''என்னை கோயம்புத்தூருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணியிருந்த நேரம். என் பொண்ணு யாழினிக்கு அப்போ மூணு வயசு. திடீர்னு ஒருநாள் ராத்திரி அவ மூச்சுவிட சிரமப்பட்டா. ஹாஸ் பிடலுக்குத் தூக்கிட்டுப் போனா உடனே அட்மிட் பண்ணச் சொல்லிட் டாங்க. மாசக் கடைசிங்கிறதால கையில ஆயிரம் ரூபாய்கூட இல்லை. புது ஊரு. அறிமுகம் இல்லாத மனுசங்க. எனக்குக் கீழே வேலை பார்க்குறவங்ககிட்ட கடன் கேட்கவும் சங்கடமா இருந்துச்சு. காஞ்சிபுரத்துல நான் வேலை பார்த்துட்டு இருந்தப்ப, எனக்கு நண்பரான ஒரு ஸ்கூல் டீச்சரும் அப்ப கோவைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி வந்திருந்தாரு. அவர்கிட்ட தயங்கிட்டே நாலாயிரம் ரூபாய் கடன் கேட்கவும், அரை மணி நேரத்துல கொண்டுவந்து கொடுத்தார். உடனே, குழந்தைக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சுட்டோம். ஆனா, சம்பளம் வாங்கினதும் அந்தக் கடனை அடைச்சதும்தான் என் மனசுல இருந்த பாரம் இறங்குச்சு!''


சகாயம் ஐ.ஏ.எஸ்., நாமக்கல் மாவட்ட ஆட்சியர். மதுரையில் ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பில் எல்.ஐ.சி. ஹவுஸிங் லோன் மூலம் கட்டப்பட்ட ஒரு வீடு, வங்கியில் 7,172 ரூபாய் சேமிப்பு எனப் பகிரங்கமாகத் தனது சொத்துப் பட்டியலை வெளியிட்ட இந்தியாவின் முதல் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம். 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' வாசகத்துக்குக் கீழ் தலை நிமிர்ந்து அமர்ந்திருக்கிறார் சகாயம்.

''நான் அந்த கோயம்புத்தூர் சம்பவத்தை ஏன் சொல்றேன்னா... அப்ப என் கன்ட்ரோல்ல 650 மதுபானக் கடைகள் இருந்தன. லைசென்ஸ் புதுப்பிக்க கடைக்குத் தலா 10 ஆயிரம் ரூபாய்னு கொடுக்கத் தயரா இருந்தாங்க. நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, அடுத்த அஞ்சாவது நிமிஷம் 65 லட்ச ரூபாய் என் வீடு தேடி வந்திருக்கும். ஆயிரம் ரூபாய்கூட கையில் இல்லாத, மகளுக்கு உடம்பு சரியில்லாத சூழ்நிலையில் மனநிலை என்ன மாதிரி இருக்கும்னு யோசிச்சுப்பாருங்க. ஆனா, அதெல்லாம்தான் ஓர் அரசு அதிகாரியின் நேர்மைக்கான சோதனை. நேர்மையா இருக்குறதுல ஒரே ஒரு சிக்கல் மட்டும்தான். நாளுக்கு நாள் நமக்கு எதிரிகள் அதிகரிச்சுட்டே போவாங்க. அவங்களை மட்டும் சமாளிச்சுட்டாப் போதும்!'' - தடதடக்கும் வார்த்தைகளில் கொப்பளிக்கிறது உற்சாகம்.

''புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுனை குக்கிராமம்தான் என் ஊரு. 'மத்தவங்க தோட்டத்து மாங்காய் தெருவுல கிடந்தாக்கூட எடுத்துட்டு வரக் கூடாது'ன்னு சொல்ற அம்மா. 'நீ படிச்சு கலெக்டர் ஆகி, உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு எல்லாம் உதவணும்டா'ன்னு சொல்லிட்டே இருக்குற அப்பா. 'கலெக்டர்தானே... ஆயிடுவோம்'னு படிச்சேன். ஆயிட்டேன். வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் நம்ம மனசு எந்தளவுக்குப் புத்துணர்ச்சியோடவும் புனிதமாகவும் இருக்கோ... கடைசி நாளின்போதும் அதே உணர்ச்சியோடு ஓய்வு பெறணும்னு மட்டும் முடிவு பண்ணேன்.

காஞ்சிபுரத்துல டி.ஆர்.ஓ-வா இருந்தப்ப ஒரு பெரியவர் தான் வாங்கிய பெப்சியில் அழுக்குப் படலம் இருந்ததாகப் புகார் கொடுத்தார். சாம்பிளை லேப் டெஸ்ட்டுக்கு அனுப்பினதுல, 'மனிதர்கள் குடிக்க ஏற்ற பானமில்லை'ன்னு ரிப்போர்ட் வந்தது. சட்டப்படி அந்த நிறுவனம் மேல என்ன நடவடிக்கை எடுக்கணும்னு ஒரு அறிக்கை தயாரிச்சேன். ரொம்ப யோசனைக்குப் பிறகு தாசில்தார்கிட்ட எட்டு பூட்டு மட்டும் வாங்கிட்டு வரச் சொன்னேன். எதுக்குன்னு புரியாம வாங்கிட்டு வந்தவரைக் கூட்டிக்கிட்டு மதுராந்தகத்துல இருக்குற பெப்சி கம்பெனிக்குப் போனேன்.

நான் தயாரித்த அறிக்கையின் ஒரு நகலை கம்பெனி மேனேஜர்கிட்ட கொடுத்துட்டு, 'கம்பெனியைப் பூட்டி சீல்வைக்கப் போறோம். எல்லாரையும் வெளியே வரச் சொல்லுங்க'ன்னு சொன்னோம். அந்த மேனேஜரைவிட என்கூட வந்த தாசில்தார் ஆடிப் போயிட்டாரு. 'சார்... பெரிய பிரச்னை ஆயிடும். எதுக்கும் கலெக்டரை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்'னு பதறுனாரு. 'கலெக்டரைக் கேட்டா சீல்வைக்க விட மாட்டாரு. சட்டப்படி இந்தக் கம்பெனியை மூட நமக்கே அதிகாரம் இருக்கு. நீங்க தைரியமா உங்க கடமையைச் செய்யுங்க'ன்னு அவரை உள்ளே அனுப்பினேன். ஒரு மணி நேரம் கழிச்சு இன்னும் பதற்றத்தோடு வெளியே வந்தவரு, 'சார்... அவங்க அமெரிக்கா வரைக்கும் பேசுறாங்க சார். சி.எம்-கிட்ட பேசுறதாச் சொல்றாங்க சார். என்ன பண்ணலாம்?'னு கேட்டாரு. 'உள்ளே இருக்கிறவங்களை அரெஸ்ட் பண்ணிட்டு சீல்வைக்க வேண்டியதுதான்'னு நான் சொல்லவும்தான் எல்லாரும் பயந்து வெளியே வந்தாங்க. கம்பெனியை இழுத்து மூடி, எட்டு பூட்டுகளையும் போட்டு சீல்வெச்சுட்டோம்.

நான் உடனே அலுவலகத்துக்குப் போகாம ஒரு குக்கிராமத்துக்குப் போயி ரேஷன் கடை, பள்ளிக்கூடத்தை எல்லாம் ஆய்வு பண்ணி முடிச்சுட்டு, ராத்திரி எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தேன். என் மனைவி வாசல்லயே காத்துட்டு இருந்தாங்க. கலெக்டர், சீஃப் செக்ரெட்டரி, உள்துறைச் செயலாளர்னு பலரும் என்னைக் கேட்டு வீட்டுக்கு போன் பண்ணிஇருக்காங்க. நான் திரும்ப எல்லோருக்கும் போன் பண்ணா, 'யாரைக் கேட்டு சீல்வெச்சீங்க? என்ன காரியம் பண்ணியிருக்கீங்க தெரியுமா?'ன்னு எல்லாரும் கேள்வி கேட்டாங்க. 'நான் என் கடமை யைத் தான் சார் செஞ்சேன். மக்களுக்கு நல்லது செஞ்சதுக்காக சஸ்பெண்ட் பண்ணா, தாராளமாப் பண்ணிக்கோங்க'ன்னு சொல்லிட்டேன். மறு நாள் எந்தப் பத்திரிகைலயும் பெட்டிச் செய்தியாக்கூட பெப்சிக்கு சீல்வெச்ச சம்பவம் ரிப்போர்ட் செய்யப்படவே இல்லை.

ரெண்டு நாள் கழிச்சு ஜூனியர் விகடன்ல மட்டும் அந்தச் செய்தி விரிவா வந்திருந்தது. அதுக்குப் பிறகுதான் பெப்சிக்கு நான் சீல்வெச்ச விஷயமே வெளி உலகத்துக்குத் தெரிஞ்சது.

இதுவரை 15 இடங்களுக்கு என்னை மாத்தி மாத்திப் பந்தாடிட்டாங்க. இப்போதான் முதன்முதலா நாமக்கல் மாவட்டத்துக்கு கலெக்டர் ஆகியிருக்கேன். மாவட்டம் முழுக்க ஒரு கோடி மரக் கன்றுகள் நடத் திட்டமிட்டு, ஏழு லட்சம் மரக் கன்றுகளை நட்டாச்சு. அவற்றின் முறையான பராமரிப்புக்கும் ஏற்பாடு பண்ணியாச்சு. இன்னும் 10 வருஷத்துல அதிக மரங்கள் உள்ள மாவட்டமாக நாமக்கல் இருக்கும். ஏற்கெனவே நொந்து போயிருக்கும் விவசாயிகளை, 'குறை தீர்க்கும் கூட்டத்துக்கு வா'ன்னு ஒவ்வொரு மாசமும் கலெக்டர் ஆபீசுக்கு அலைக்கழிக்கிறது நல்லாவா இருக்குன்னு நானே விவசாயிகளைத் தேடிப் போக ஆரம்பிச்சேன். ஒருநாள் ராத்திரி முழுக்க அந்தந்த கிராமத்துலயே தங்கி, அவங்க குறைகளை வாழ்ந்து பார்த்துட்டு வருவேன். அப்பதான் அவங்க சொல்றதுக்கு முன்னாடியே அவங்க குறைகள் என்னன்னு நாமளே உணர முடியும்!'' என்கிற சகாயம், தன் மகள் யாழினியை மடியில் வைத்துக்கொண்டு, ''சொல்லுடா குட்டி... உயர உயரப் பற... வானம் வசப்படும்!'' என சொல்லிக் கொடுக்கிறார்.


''உயர உயரப் பற... வானம் ஒரு நாள் வசப்படும்'தான் கரெக்ட்!'' - திருத்திச் சிரிக்கிறாள் கலெக்டர் மகள்!


நன்றி........ ஆனந்த விகடன்

திங்கள், பிப்ரவரி 01, 2010

இசை புயலுக்கு வாழ்த்துக்கள்

இந்த முறையும் சொல்லியடித்துள்ளார் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான். இசைத் துறையில் உலகிலேயே மிக உயர்ந்த விருதாக கூறப்படும் கிராமி விருதுகளில் இரண்டை வென்றுள்ளார் ரஹ்மான்.

ஸ்லம்டாக் மில்லியனேர் படத்தில் இடம்பெற்ற ‘ஜெய் ஹோ…’ பாடலுக்காகவும், அந்தப் படத்தில் ரஹ்மானின் சிறந்த இசைக்காகவும் இந்த இரு விருதுகளும் கிடைத்துள்ளன

இது எல்லாம் கடவுள் அருளால் தான் நடந்துள்ளது. இறைவனுக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்தியர்களின் பேராதரவும், அன்பும் அவர்களது பிரார்த்தனையும் எனக்கு எப்போதும் உள்ளது. இதன் மூலம் இந்த கிராமி விருதை பெற்றதை இந்தியர்களுடன் பகிர்ந்து மகிழ்ச்சி கொள்கிறேன் என்று அவர் கூறினார்.