வியாழன், டிசம்பர் 26, 2013

என் கதை -2

ஒவ்வரு  மனிதனுக்கும் தன் பதினம் வயது நினைவுகள்  என்பது கல்வெட்டு போன்றது , அதிலும் பள்ளி பருவ காலங்கள் இனி எப்போது வரும் என்ற ஏக்கமும் அவவபோது வரும். ஏனெனில் அது அப்படி பட்ட வயது, எதையும் பற்றி எண்ணாமல், தன் மனம் சொல்லும் படி வாழும் வயது, எதையும் எதிர்க்கும் துணிவும் அப்போது தான் வருவதுண்டு , ஜாதி மதம் இனம் பார்க்காமல் ஒரே தட்டில் நண்பர்கள் அனைவரும் உண்டு மகிழும் தருணம் அது , அது தூய்மை கலந்த மனது கொண்ட பருவம்.
எனக்கும் அப்படி ஒரு பட்டாளமுண்டு , நாங்கள் எழுவர் கொண்ட எழுச்சி பட்டாளம் ,( ரஞ்சித், ஸ்ரீதர், கந்தசாமி, ரவிக்குமார், ராம்குமார், செந்தில்குருசாமி, நான் ), வகுப்பறையில் நன்றாக படிக்கும் ஒரு குரூப்ம், படிக்காத மாப்பிள்ளை குரூப் இருப்பது போன்று நடுத்தரம் என்று ஒரு ரகம் உண்டு , பாஸ் மட்டும் ஆனால் போதும் என்று என்னும் ரகம், வரவே இல்லாமல் செலவு செய்து மகிழ்ந்த  நாங்கள் நடுத்தரம். இருந்தாலும் எங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் உண்டு, அது பத்தாம் வகுப்பு படிக்கும் போது வந்தது,
கணித பாடத்திற்கு நாங்கள் சீறப்பு வகுப்பு போவதுண்டு, அப்போது எங்கள் நேரம்காலை அதற்கு முந்தைய நேரம் பெண்கள் வகுப்புக்கு, அதில் ஒருத்தி எங்கள் எழுவர் மனதிலும் வந்த குடியமர்ந்த குறத்தி, எங்கள் ஒப்பந்தமே அது ன் யார் அவள் வசம் ஆகிறோமோ, மற்றவர்கள் ஒதுங்கி, உதவிடவேண்டும்.

கலை இல்லாத ஓவியமா?
காதல் இல்லாத வாலிபமா?...

 பூர்ணிமா...............

 
கதை தொடரும் (.3).............

 


என்றும் அன்புடன்
 

புதன், டிசம்பர் 11, 2013

என் கதை என் பாடம்

வலை தமிழ் மக்களுக்கு  இனிய வணக்கம்
வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும்  வலை பதிவில் நான். இந்த முறை என் சொந்த கதை, இது சுய சரிதை அல்ல, என் சுயத்தை நான் பரிசோதிக்க நினைக்கும் ஒரு முயற்சி! சுயசரிதை என்றால் உண்மையை மட்டுமே எழுத வேண்டும் , அது என்னை சார்ந்த என்னுடன் இருக்கும் பல இதயங்களை காயபடுத்தும், அது என் எண்ணமல்ல, முடிந்தவரை அவ்வாறு நடக்காமல் எழுத வேண்டும் என்பது தான் என் எண்ணம்.

 
என் கதை  என் பாடம் -1

 தமிழ் மொழியானது பொதிகை மலையில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் என்ற சிற்றூரில் உள்ளது
"திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' என சம்பந்தரும், "தண் பொருநைப் புனல்நாடு' எனச் சேக்கிழாரும், "பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி' என்று கம்பரும் பாடிய பூமி, திருநெல்வேலி ஆகும். இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில் முக்கியமானவையாக ஐந்து தலங்கள் இருக்கின்றன. சிவபெருமானுக்கான ஐம்பெரும் சபைகளில் "தாமிர சபை" என்று போற்றப்படுவது திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்தான்.மேலும் இது ஆசியாவின் மிகப்பெரிய சிவன் கோயில் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இத் திருமாவட்டதில் முறப்பநாடு (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது) என்கின்ற கிராமத்தில்  பிறந்த சுடலையாண்டி-கலா அவர்களுக்கு மூன்றாவது மகனாக (இறைவன் தவம் இருந்தான் நான் இவர்களுக்கு மகனாக பிறக்க) பாசகார உள்ளங்களை மட்டுமே கொண்ட பாளையங்கோட்டையில் 1979 வருடம் பிப்ரவரி மாதம் பிறந்த நான், பஞ்ச பாண்டவர்கள் போல ஐந்து உடன்பிறப்புகளை கொண்டவன்……..

 
கதை தொடரும் ................

அன்புடன்
சு. மகாராஜன்