ஞாயிறு, ஜனவரி 30, 2011

குரல் கொடுப்போம் நம் இனத்துக்காக!!!!!!!!!!!!!இலங்கையின் கடலோர காவல்படை, தமிழக மீனவர்களை கொன்று குவித்து வருகிறது. இந்திய எல்லைக்குள் மீன் பிடித்தாலும், அதை பொறுக்க முடியாமல், அவர்களை அடித்து விரட்டுவது, சித்ரவதை செய்வது, கொல்வது என, இலங்கை அரசு, தங்கள் அன்றாட நடவடிக்கைளை தொடர்கிறது. காரணம், அனாதையாகிவிட்டான் தமிழன் என்ற ஒரு அதீத நம்பிக்கை. கடிதம் எழுதுவதோடு, தமிழக அரசு நிறுத்திக் கொள்ளும்; எச்சரிக்கை விடுவதோடு மத்திய அரசு முடித்துக் கொள்ளும்.இதை நன்கு உணர்ந்து விட்ட இலங்கை அரசும், இலங்கை கடலோர படையும், தங்கள் அஸ்திரங்களை செலுத்திக் கொண்டிருக்கின்றன. வல்லரசு நாடாக உருவாகிவரும் இந்திய அரசுக்கு, இதை தட்டி கேட்க கூட திராணியில்லை. சொந்த மண்ணில் தமிழர்கள் செத்து மடிவதை ரசித்துக் கொண்டிருக்கும் தமிழக அரசுக்கு, கேட்க தைரியமில்லை.

 இனியும் இது போல் நடைபெறாமல் இருக்க ஏதோ
ஒருவகையில் நம் ஆதரவை அவர்களுக்கு வழங்குவோம்

நம் போடும் சத்தம் சென்றடைய http://www.savetnfisherman.org/
தளத்தில் நம் ஆதரவை தெரிவிப்போம்
இணைய தள முகவரி : http://savetnfisherman.org/

ட்விட்டர் முகவரி- twitter.com/savetnfisherman

பேஸ்புக் முகவரி - http://www.facebook.com/savetnfisherman ,
http://www.facebook.com/pages/Save-Fishermen-from-Sri-Lankan-Navy/167109543335671

உங்களுடைய ஆதரவரை இந்திய அரசுக்கு அனுப்ப http://www.petitiononline.com/TNfisher/petition-sign.html?


நண்பர் வைகை அவர்களின் "'உண்மை சுடும்"" கடிதம்
உங்கள் பார்வைக்கு
http://unmai-sudum.blogspot.com/2011/01/blog-post_29.htmlநன்றி பாரத்... பாரதி...(http://bharathbharathi.blogspot.com/)


என்றும் அன்புடன்
 

புதன், ஜனவரி 19, 2011

பொன் மொழிகள்


1. கட்டுப்பாடு இல்லாமல் வாழ்கிறவன் கௌரவம்
    இல்லாமல் செத்து போவான்

2. பாராட்டுக்கு நாவின் ஈரம் மட்டும் போதாது,
    மனதில் ஈரமும் வேண்டும்

3. அணைய போகிற தீபத்திற்கு ஓளி அதிகம்

4. வறுமையில் நிறை காண்பவனே சிறந்த பணக்காரன்

5. வாழ்வில் நம்பிக்கை நல்லது தான். ஆனால
   அதற்கும் எல்லை உண்டு

6. கடன் இல்லாதவனே பணக்காரன்,
    உடல் ஆரோக்கியம் உள்ளவனே செல்வந்தன்

7. புத்திசாலிகள் எப்போதுமே எண்ணிக்கையில் குறைவு தான்

8. நேர் வழியில் அடைய முடியாததை
    ஒருபோதும் குறுக்கு வழியில்  அடைய முடியாது

9.  வாக்குறுதி என்பதும் ஒரு வகை கடன் தான்

10. தெரியாது என்று உணருவது அறிவை
      அடைவதற்கு ஒரு வழி

11. நமக்கு தீமை செய்பவர்களுக்கும் நாம் நன்மையே செய்யவேண்டும்

12. இறைவனை அண்டியவர்களுக்கு பிறவி துன்பம் என்றும் இல்லை.

எப்போதும் மகிழ்ந்திருக்க

1.   அமைதி, ஆனந்தம், துணிவு,ஊக்கம், நம்பிக்கை, நல்வாழ்வு,
      இவை பற்றியே நினைவுகள் உள்ளத்தில் இருக்கட்டும்

2.   நம் நிறைவன்புகளை நினைத்து மகிழ்வோம்
      இல்லாமையை எண்ணி வருந்தவேண்டாம்

3.  மற்றவர்களை போல் ஆக ஆசைபடுவது ஆபத்து நம்மை
     நாமே அடையாளம் கண்டு திருப்தி அடைவோம்

4.  நம் கையில் உள்ளவற்றை கொண்டு நல்லது செய்ய பழகுவோம் .

5.  நாம் விரும்பாத மனிதர்களை பற்றிய நினைவில்
     ஒரு விநாடி கூட  வீணாக்க வேண்டாம்

6.  மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை தரும் முயற்சியில்
     நாம் நம் துயரத்தை மறப்போம்
அனுதின‌மும் ஆனந்தமாய் வாழ்ந்திட‌

வாழ்த்துக்க‌ளோடு!


வியாழன், ஜனவரி 06, 2011

நினைவலைகள் 2010

ஒரு வருட நிகழ்வுகள்


முதலில் நண்பர்கள் அனைவர்க்கும் என் இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்.

வலையுலகிற்கு வந்து இன்றோடு ஒரு வருடம் ஆகின்றது.
கடந்த ஆண்டு இதே நாளில் தான் வலைபதிவு தொடங்கினேன்.

2010 - எனக்களித்த சந்தோசங்கள்...

1. நிறைய எண்ணங்களை எழுத கொடுத்தது வலைபதிவின் முலமாக.

2. முகம் தெரியா நண்பர்களை கொடுத்தது வலைபதிவின் முலமாக

3. பதின்ம வயதின் நண்பனை மீட்டு கொடுத்தது ( நன்றி சித்ராஅக்கா)

4. தங்கையின் குழந்தை (சஞ்சய்)

5. ஒரு புதிய உறவினை என்னுடைய திருமணத்தின் மூலம்,
   என்  வாழ்வின் சரிப்பாதியை என்னுடன் இணைத்து கொண்ட
   என்னவளை தந்தது.

6. சில நினைவுகள் பூக்கும் தருணங்களும், நினைத்து வருந்தும்  நிகழ்வுகளும் நடந்த கடந்த ஆண்டு ஒரு படிப்பினையை விட்டுச் சென்றுள்ளது. இந்தப் படிப்பினை வரும் ஆண்டுகளின் நிகழ்வுகளை
எதிர் கொள்ள உதவும் என்ற நம்பிக்கையுடன்


என்றும் அன்புடன்