செவ்வாய், மார்ச் 09, 2010

"பதின்மம்" நினைத்து பார்த்தால்..........

என்னையும் (நம்பி) ஒரு பதிவரா
நினைத்து இந்த தொடரை எழுத அழைத்த
தோழி "திவ்யா ஹரி" க்கு முதலில் நன்றி

(முன்பே எழுத வேண்டியது ஆனால்
நேரம்மின்மையால் இப்பொழுது எழுதிஇருக்கிறேன்)




முதலில்

நான் பத்தாம் வகுப்பு படித்து கொண்டு இருந்தபோது,எங்கள்
வகுப்பில் நாங்க ஒரு குரூப்(மாப்ளை பெஞ்சு தான்).எங்கள் நண்பரில் ஒருவர் கொஞ்சம் கருப்பு(அதுகாக நான் ஒன்னும் அரவிந்த்சாமி கலர் கிடையாது நானும் கருப்பு தான்,அவர் இன்னும் கொஞ்சம் கூடுதல்).அப்ப நான் எல்லாரையும் கொஞ்சம் கூடுதலாகவே ஓட்டும் (கிண்டல்௦) பழக்கம் உண்டு.ஒரு முறை அந்த நண்பரை அனுமந்தராவ் அப்படின்னு கிண்டல் பண்ண,சாதாரண சண்டை முற்றி கைகலப்பு வரை போகிவிட்டது. நாளடைவில் அது சரியாகி போய் விடும் என்று என் நண்பர்களும் நினைத்தனர்,ஆனால் அது பெரிதாகி (இந்தியா/பாகிஸ்தான் ரேஞ்சுக்கு) வளர்ந்துவிட்டது.அன்றிலிருந்து பல நாட்களுக்கு, ஏன்.. பல வருடங்களுக்கு அவன் என்னிடம் சரியாகப் பேசவில்லை. பின் நான் பாலிடெக்னிக் படித்து கொண்டு இருக்கும் போதும் ஒரு நாள் எங்கள் (குரூப்) நண்பன் ஒருவனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தபோது, பள்ளி நினைவுகளை அசைபோட்டம் ,அந்த நண்பர் பெயரும் வந்த போது தான், ச்சே.. ஒரு சின்னப் கிண்டல் ஆசையால் ஒரு நல்ல நட்பை இழந்தோமே’ என்று நான் என்னையே கேவலமாக நினைத்துக் கொள்வதுண்டு.அன்று முதல் இன்று வரை நான் எவரையும் அவர்கள் மனது புண்படும்படி பேசுவதில்லை ,இன்றைக்கும் பலரோடு எனக்கு சங்கடங்கள், கருத்து வேறுபாடுகள் வருவதுண்டு. அந்த ஒரு சம்பவம் எனக்குத் தந்த பாடத்தால்... பேசாமலே போய்விடுவேன். தவறு என்மீதாயினும், என் மீது இல்லாவிட்டாலும்.அப்படியே எதாவதுபேசினாலும் உடனே மன்னிப்பு கேட்டு விடுகிறேன்.இது அந்த நண்பனுக்கு மானசிகமாக
நான் செய்யும் மரியாதை.

இரண்டாவது:

எங்கள் தெருவில் உள்ள தாணு அண்ணா மீது எப்போதும் எனக்கு ஒரு மரியாதை உண்டு.யார் மீது அதிர்ந்து பேசாதவர்,ஒரு முறை அவர் பிறந்த நாளுக்கு என்னை ஓரிடத்துக்கு அழைத்து சென்றார்,அது ஆதரவற்றவர்கள் முகாம்,நான் அவரிடம் கேட்டேன்,நாமே ஏன்ன இங்கே வந்து இருக்கிறோம் என்று,அவர் தன்னுடைய ஓவவரு பிறந்த நாளுக்கும் இங்கு வந்து தன்னால் முடிந்த உதவியை செய்வதோடு மட்டுமல்லாது அன்றைய மதிய உணவை அவர்களுடன் சேர்ந்து தான் சாப்பிடுவராம்,நீயும் இது போல் செய் என்றார்,அன்று முதல் நானும் எனது ஒவ்வரு பிறந்த நாளுக்கும் (பிறந்த நாளுக்கு மட்டுமல்ல என்னால் எபோதேல்லாம் முடிகிறதோ)அது மாதிரியே செய்து வருகிறேன் நான் என் வாழ்கையில் செய்த முதல் நல்ல காரியம் இதுதான்.இப்போ இங்கே(துபாய்) வந்த இந்த மூன்று வருடமாக என் பிறந்த நாளுக்கு செல்ல முடியவில்லை,ஆனால் ஊருக்கு(VACATION)வரும் போதும் தவறாமல் ஒரு நாள் அங்கு சென்றுவிடுகிறேன்.


(நீங்களும் இதை செய்யலாமே)

(நிறைய எழுதலாம் ஆனால் பதிவு பெரிதாகி விடும்
என்பதால் எந்த இரண்டு மட்டும்)

அனேகமாக எல்லாரும் இதை எழுதி இருப்பார்கள்
என்பதால் யாரையும் அழைக்கவில்லை.

யாராவது நண்பர்கள் இந்த தொடரை தொடர நினைத்தால்
அவர்களும் தொடரலாம்..

5 கருத்துகள்:

திவ்யாஹரி சொன்னது…

//இது அந்த நண்பனுக்கு மானசிகமாக நான் செய்யும் மரியாதை.//

நல்லது நண்பா.. அப்படியே அவரை பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தால் நட்பை புதுப்பித்துக் கொள்ளுங்கள்..

//(நீங்களும் இதை செய்யலாமே) //

நாங்களும் செய்து கொண்டுதானிருக்கிறோம் நண்பா..

S Maharajan சொன்னது…

திவ்யாஹரி சொன்னது…
//நல்லது நண்பா.. அப்படியே அவரை பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தால் நட்பை புதுப்பித்துக் கொள்ளுங்கள்..//

நிச்சயமாக புதுப்பித்து கொள்வேன் தோழி

//நாங்களும் செய்து கொண்டுதானிருக்கிறோம் நண்பா..//

உங்கள் நண்பர்களிடமும் சொல்லுங்கள்

அன்புடன் மலிக்கா சொன்னது…

அருமை நியாபங்கள் புத்துப்பிக்க புதுபிக்க புத்தம் புதிதாய் மலரும் மலர்கள்போல் பூத்துசிரிக்கும் எண்ணச்சிறகுகள்..

மிக அழகான நியாபச்சிதறல்கள் மகா ..

S Maharajan சொன்னது…

அன்புடன் மலிக்கா சொன்னது…
//மிக அழகான நியாபச்சிதறல்கள் மகா ..//

வந்து (வாசி)சுவாசிதமைக்கு நன்றி!நன்றி!

Butter_cutter சொன்னது…

nandru

கருத்துரையிடுக