தெரிந்து கொள்ளுங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தெரிந்து கொள்ளுங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, பிப்ரவரி 20, 2011

மணிமொழிகள் !


.தேவைப்பட்டாலொழியக் கோபம் கொள்ளாதே.

.நன்மை செய்தவனுக்கு நன்றி காட்டு.

.தீமை செய்தவனை மறந்து விடு.

.எதையும் சாதிக்க நிதானம், அற்புதமான ஆயுதம்.

.வென்றவனுக்கு மலையும் கடுகு. தோற்றவனுக்கு கடுகும் மலை.

.ஆணவமும், அழிவும் இறைட்டைக் குழந்தைகள்.

.அற்ப ஆசைகள் பெரிய வெற்றியைத் தேடித் தருவதில்லை.

.சோம்பி நிற்கும் மனிதனிடம் துன்பங்கள் உற்ப்பத்தியாகின்றன.

.தாய்ப்பால் கொடுக்காத குழந்தைகளுக்கு தாய்ப்பாசம் இருக்காது.

.இலக்கியங்கள் எல்லாம் மனிதர்களுடைய அனுபவத்தில் உதித்தவையே.

.நீயாகவே முடிவு செய். நீயாகவே செயல் படு.

.முடிந்தால் நன்மை செய். தீமை செய்யாதே.

.சினிமா-பயன் படுத்த தெரிந்தவனுக்கு அற்புதமான ஆயுதம்.

.சிறு வயதில் வரவு வையுங்கள். பெரிய வயதில் செலவளிங்கள்.

.நம் மனதளவு எவ்வளவோ அவ்வளவு தான் உலகம்.

.வாழ்வில் நகைச்சுவை வேண்டும். சிரிக்காதவன் மிருகம்.

.அருங்குறள் 1330-ம் கடலளவு. அதன் முன் உலகம் கடுகளவு.

.வாழ்ககையின் ஒவ்வொரு அணுவையும் அனுபவிக்க வேண்டும்.

.எதையும் தெரியாது என்று சொல்லாமல் தெரியுமென சொல்.

.வாழ்வில் துணிவு வேண்டும்.

.விதி என்னும் மூலத்தில் இருந்து முளைத்த கிளையே மதி.

.காற்றுள்ள போதே தூற்றிக்கணும் என்பதை கவனத்தில் வை.

.வாழ்க்கையில் முன்னேற எந்த விமர்சனத்தையும் தாங்கிக்கொள்.

.திறமை உள்ளவனுக்கு வாய்ப்பு தூரமில்லை.

.............கவியரசு கண்ணதாசன்




என்றும் அன்புடன்

வியாழன், பிப்ரவரி 10, 2011

கணித மேதை ராமானுஜன் (1887-1920)

இது என் நண்பர் எனக்கு மினஞ்சலில் அனுப்பியது.




“ராமானுஜத்தின் கணித மேன்மையை இலக்க ரீதியில் நான் ஒப்பிட்டுச் சொன்னால் ராமானுஜத்தின் திறனுக்கு மதிப்பெண் 100 அளிப்பேன், ஜெர்மன் மகா கணித மேதை, டேவிட் ஹில்பெர்ட்டுக்கு [David Hilbert] மதிப்பெண் 80 ! பிரிட்டீஷ் கணித நிபுணர் லிட்டில்வுட்டுக்கு மதிப்பெண் 30 தருவேன், எனக்கு நான் கொடுப்பது 25 மட்டுமே.”

பிரிட்டீஷ் கணித மேதை ஜி. ஹெச். ஹார்டி

சுமார் 85 ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒர் இந்தியக் கணித ஞானி, பை [PI] குறியின் மதிப்பைத் துல்லியமாய்க் கணக்கிட, நூதன முறையில் பல வழிகளை வகுத்தார். அவர்தான் கணித மேதை ராமானுஜன். பை [PI] என்பது வட்டத்தின் சுற்றளவை அதன் விட்டத்தால் வகுத்து வரும் ஓர் இலக்கம். அதைப் “பை” [Greek Letter PI] என்று கணிதத்தில் குறிப்பிடுவர். எந்த வட்டத்திலும் பை [PI] என்பது ஒரு நிலை இலக்கம் [Constant Number]. 1987 இல் பை [PI] இன் மதிப்பைத் துள்ளியமாக 100 மில்லியன் தசமத்தில் கணக்கிடப் பட்டது. ஆனால் அதன் அடித்தள அணுகுமுறை யாவும் ராமானுஜன் 1915 இல் ஆக்கிய கணிதக் கோட்பாடுகள் மூலம் உருவானவை. அவர் அப்போது அணுகிய அந்த நுணுக்க முறைகள், இப்போது மின்கணணிப் பிணைப்பாடுத் தொடரில் [Computer Algorithms] சிக்கலான கணிதச் சிக்கல்களைத் தீர்க்கப் பயன்படுகின்றன.

1917 ஆம் ஆண்டு ராமானுஜத்துக்கு அவரது 30 ஆம் வயதில், இங்கிலாந்து F.R.S. [Fellow of Royal Society] விருதை அளித்தது. அதே சமயம் ராமானுஜன் இங்கிலாந்தில் டிரினிடி கல்லூரி ஃபெல்லோ [Fellow of Trinity College] என்னும் கௌரவத்தையும் பெற்றார். பிரிட்டனுடைய இவ்விரு பெரும் பட்டத்தையும் முதன்முதல் பெற்ற இந்தியர் இவர் ஒருவரே. உலக மகாக் கணித மேதைகளான லியனார்டு யூளார் [Leonhard Euler], கார்ல் ஜெகொபி [Karl Jacobi], வரிசையில் இணையான தகுதி இடத்தைப் பெறுபவர், இந்திய ராமானுஜன்! அவர் கற்ற எளிய கல்வியின் தரத்தைப் பார்த்தால், கணித மேதை ராமானுஜத்தின் திறனைக் கண்டு எவரும் பிரமித்துபோய் விடுவார்!

ராமானுஜன் தமிழ் நாட்டில் 1887 டிசம்பர் 22 நாள் ஒர் ஏழை அந்தணர் வகுப்பில் பிறந்தார். பிறந்த ஊர் ஈரோடு. படித்ததும், வளர்ந்ததும் கும்பகோணத்திலே. தந்தையார் ஒரு துணிக்கடையில் கணக்கு எழுதுபவர். கலைமகள் கணித ஞானத்தை அருளியது, ராமானுஜன் சிறுவனாக இருந்த போதே தென்பட்டது. அபூர்வமான தெய்வீக அருள் பெற்ற “ஞானச் சிறுவன்” [Child Prodigy] ராமானுஜன். அவரது அபாரக் கணிதத் திறனைச் சிறு வயதிலேயே பலர் கண்டு வியப்படைந்தார்கள். ஏழு வயதிலே உதவிநிதி பெற்று, ராமானுஜன் கும்பகோணம் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றார்! அப்போதே பள்ளித் தோழரிடம் கணித இணைப்பாடு [Formulae] பலவற்றை, மனப்பாடம் செய்து ஒப்பிவித்து அவரை வியக்க வைத்தாராம்! “பை” இன் மதிப்பை [3.14] பல தசமத்தில் மாணவர்களிடம் பள்ளியில் தெளிவாகச் சொல்லி யிருக்கிறார் அந்த இளமை வயதிலே, ராமானுஜன்.

பன்னிரண்டாம் வயதில் “லோனியின் மட்டத் திரிகோணவியல்” கணித நூலில் [Loney's Plane Trigonometry] கணிதக் கோட்பாடுகளைத் தானே கற்று ராமானுஜன் தேர்ச்சி அடைந்தார். முடிவில்லாச் சீரணியின் தொகுப்பு, அதன் பெருக்கம் [Sum & Products of Infinite Sequences] பற்றிய விளக்கத்தை அறிந்தார். அவரது பிற்காலக் கணிதப் படைப்புகளுக்கு அவை பெரிதும் பயன்பட்டன. முடிவில்லாச் சீரணி என்பது எளிய இணைப்பாடு ஒன்று [Formula], உருவாக்கும் முடிவற்ற தொடர் இலக்கம். அத்தொடரோடு வேறோர் எண்ணைக் கூட்டியோ, பெருக்கியோ, முடிவற்ற சீரணியை முடிவுள்ள சீரணியாக மாற்றி விடலாம்.

பதினைந்தாம் வயதில், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக கணித வல்லுநர், கார் [G.S.Carr] தொகுத்த “தூய கணித அடிப்படை விளைவுகளின் சுருக்கம்” [Synopsis of Elementary Results in Pure Mathematics] என்னும் நூலைக் கடன் வாங்கி, சுமார் 6000 கணித மெய்ப்பாடுகளை [Theorems] ஆழ்ந்து கற்றுக் கொண்டார். இந்த இரண்டு கணித நூல்களின் பயிற்சிதான் ராமானுஜன் முழுமையாகக் கற்றுக் கொண்டது. அவைகளே அவரது பிற்கால அபாரக் கணிதப் படைப்புகளுக்கு அடிப்படையாய் அமைந்தன.

1903 ஆம் ஆண்டில் பதினாறு வயதில் கும்பகோணம் அரசினர் கல்லூரியில் ராமானுஜன் சேர்க்கப்பட்டார். ஆனால் அவரது முழு மனதும் கணிதம் ஒன்றிலே ஆழ்ந்து விட்டதால், மற்ற பாடங்களில் கவனம் செல்லாது, அவர் கல்லூரித் தேர்வில் தோல்வியுற்றார். இதே ஒழுங்கில் படித்து, நான்கு வருடங்கள் கழித்துச் சேர்ந்த சென்னைக் கல்லூரியிலும் முடிவில் தோல்வியடைந்தார். 1909 இல் ராமானுஜன் திருமணம் செய்த கொண்டபின், தற்காலியமாய்த் தன் கணிதப் பித்தை ஒதுக்கி வைத்தி விட்டு, வயிற்றுப் பிழைப்புக்காகச் சென்னையில் ஒரு வேலையைத் தேடினார்.

கணிதத்தை ஆதரிக்கும் செல்வந்தர் ஆர்.. ராமச்சந்திர ராவ், அனுதாப முடைய கணித வல்லுநர் பலரது உறுதியான சிபாரிசின் பேரில், 1910 இல் ராமானுஜத்துக்கு கணிதத் துறையில் பணிபுரிய, ஓரளவுத் தொகையை உபகாரச் சம்பளமாக மாதா மாதம் அளிக்க முன்வந்தார். 1911 இல் ராமானுஜத்தின் முதல் பதிவு கணிதப் படைப்புகள், இந்திய கணிதக் குழுவின் வெளியீட்டில் [Journal of the Indian Mathematical Society] வெளிவந்தன.
மேலும் தனியாக வேலை செய்ய விரும்பி 1912 இல், ராமானுஜம் சென்னைத் துறைமுக நிறுனத்தில் எழுத்தராக [Madras Port Trust Clerk] அமைந்தார். நிறுவனத்தின் மேலதிபர் பிரிட்டீஷ் எஞ்சினியர், ஸர் பிரான்ஸிஸ் ஸ்பிரிங். அதை மேற்பார்க்கும் மானேஜர், இந்திய கணிதக் குழுவை [Indian Mathematical Society] நிர்மாணித்த பிரபல வி. ராமசுவாமி ஐயர். இருவரும் ராமானுஜத்தின் கணித ஞானத்தைப் பாராட்டி, அவரது கணிதப் படைப்புக்களை, இங்கிலாந்தில் மூன்று முக்கிய பிரிட்டீஷ் கணித வல்லுநர்களுக்கு அனுப்பித் தொடர்பு கொள்ள ஊக்கம் அளித்தார்கள். அவர்களில் இருவர் பதில் போடவில்லை. ஒருவர் மட்டும் பதில் அனுப்பினார்! அவர்தான், அக்காலத்தில் புகழ்பெற்ற பிரிட்டீஷ் கணித நிபுணர், G.H. ஹார்டி.

ராமானுஜத்தின் கத்தையான கடிதம் ஹார்டியின் கையில் கிடைத்த 1913 ஜனவரி 16 ஆம் தேதி, ஒரு முக்கிய தினம்! அன்றுதான் அதிர்ஷ்ட தேவதை தன் அருட் கண்களைத் திறந்து ராமானுஜத்துக்கு ஆசிமழை பொழிந்தாள்! முதலில் மேலாகப் பார்த்து விட்டு, ஏதோ ஒரு பைத்தியம் எழுதியதாக எண்ணிக் கடிதக் கட்டை ஒதுக்கி வைத்தார் ஹார்டி. டின்னருக்குப் பிறகு இரவில் பொறுமையாக அவரும், அவரது நெருங்கிய கணித ஞானி, ஜான் லிட்டில்வுட்டும் [John E. Littlewood], புதிர்களைப் போல் காணும் ராமானுஜத்தின் நூதனமான 120 கணித இணைப்பாடுகளையும், [Formulae] கணித மெய்ப்பாடுகளையும் [Theorems] மெதுவாகப் புரட்டிப் பார்த்துப் பொறுமையாக ஆழ்ந்து படித்தார்கள். சில மணி நேரம் கழித்து, பிரமித்துப் போன இருவரும் ஒரு முடிவான தீர்மானத்துக்கு வந்தனர். நிச்சயம் அவர்கள் காண்பது ஒரு மகா மேதையின் உன்னதக் கணிதப் படைப்புகள். ஒரு பைத்தியகாரனின் முறை கெட்ட கிறுக்கல் அல்ல அவை என்று வியப்படைந்தார்கள்!
ஹார்டி உடனே ராமானுஜத்தை கேம்பிரிட்ஜ் வரும்படிக் கடிதம் எழுதி அழைப்பு விடுத்தார். சென்னைப் பல்கலைக் கழகமும் [University of Madras], இங்கிலாந்து கேம்பிரிட்ஜ், டிரினிடிக் கல்லூரியும் அவருக்கு உதவிநிதி கொடுக்க முன்வந்தன. 1914 ம் ஆண்டு மார்ச் மாதம், தாயின் பலத்த எதிர்ப்பைத் தள்ளியும், தன் கொள்கையை விட்டுக் கொடுத்தும், ராமானுஜன் இங்கிலாந்துக்குப் புறப்படக் கப்பலேறினார்.

அடுத்த ஐந்து ஆண்டுகள் ஹார்டியும், ராமானுஜமும் டிரினிடிக் கல்லூரியில் [Trinity College] ஒன்றாகக் கணிதத் துறை ஆக்கப் பணியில் ஈடுபட்டார்கள். ஹார்டியின் சீரிய பொறி நுணுக்கமும், ராமானுஜத்தின் நூதன கணித ஞானமும் இணையாகப் பொருந்தி, ஒப்பற்ற உடன்பாடு நிலவி, கணித மெய்ப்பாடுகள் பல உருவாகின. இருவரும் கணிதச் சீர்ப்பாடுகள் [Arithmatic Functions] பலவற்றை ஆங்கில, ஈரோப்பிய விஞ்ஞானப் பதிவுகளில் வெளியிட்டார்கள். அவற்றில் ரெய்மன் சீரினம் [Riemann Series], நீள்வட்ட முழு இலக்கங்கள் [Elliptical Integrals], உயர் ஜியாமெட்ரிச் சீரினம் [Hyper Geometric Series], ஜீட்டா சீர்ப்பாடுகளின் இயக்கச் சமன்பாடுகள் [Fuctional Equations of Zeta Functions], ராமானுஜன் தனியாக ஆக்கிய விரியும் சீரினங்கள் [Divergent Series] ஆகியவை கணிதத் துறையில் குறிப்பிடத் தக்கவை. அவை பின்வரும் வினாக்களுக்குப் பதில் அளிக்க அடிப்படைத் தளமாய் அமைந்தன. எடுத்துக் கொண்ட ஓர் இலக்கம், எத்தனை “பிரதம வகுப்பினம்” [Prime Divisors] கொள்ளலாம் ? எத்தனை முறைகளில் ஓர் எண்ணை, அதற்கும் சிறிய “நேரியல் முழு இலக்கங்கள்” [Positive Integers] பலவற்றின் தொகையாகக் குறிப்பிடலாம் ?

தெய்வீக ஞானசக்தி மூலம் தான் கணித்த மெய்ப்பாடுகள் எதிர்காலத்தில் மின்கணணிகளுக்குப் [Computers] பயன்படப் போகின்றன என்று ராமானுஜன் எதிர்பார்த்திருக்க மாட்டார்! சமீபத்தில் அவரது கணிதக் களஞ்சியங்களிலிருந்து தோண்டி எடுத்ததுதான், பை [PI] இன் மதிப்பீடு காணும் அவரது நூதன அணுகு முறை! ராமானுஜத்தின் கணிதத் தீர்வு முறை மற்றவர் ஆக்கிய முறைகளைப் போல் விரியாமல், அதி விரைவில் குவிந்து, பை [PI] இன் மதிப்பைத் துள்ளியமாய்த் தருகிறது!

ராமானுஜத்தின் படைப்புகள் யாவும் அவரது “குறிப்பு நூலில்” [Notebooks] அடங்கி யுள்ளன. பல மெய்ப்பாடுகள் வழக்கமான நிரூபணம் இல்லாமல் எழுதப்பட்டுள்ளன. மற்றும் அவரது குறிப்பு நூலில் “முழுமைப்பாடுகள்” [Integrals], முடிவில்லாச் சீரினங்கள் [Infinite Series], தொடர்ப் பின்னங்கள் [Continued Fractions] போன்றவை விளக்கப் படுகின்றன. கணிதத் துறையினர் இன்னும் அவரது கணித மேன்மையின் முழுத் தகுதியையும் அறிய வில்லை! அமெரிக்காவில் இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தின் [University of Illinois] கணித வல்லுநர், புரூஸ் பெர்ன்ட் [Bruce C. Berndt] ராமானுஜத்தின் கணிதக் குறிப்பு நூலைத் தொகுத்து வெளியிடும் பொறுப்பை மேற்கொண்டுள்ளார். அதற்குப் பிறகுதான், ராமானுஜத்தின் நூதனக் கணிதப் பணிகள் யாவும் கணிதத் துறையினர் கையாளப் பயன்படும்.

பின்னால் ஒரு முறை ராமானுஜத்தின் கணித மேன்மையை இலக்க ரீதியில் ஒப்பிட்டு ஹார்டி கூறியது; ராமானுஜத்தின் திறனுக்குத் தகுதி மதிப்பு 100 அளித்தால், லிட்டில்வுட்டுக்கு 30, தனக்கு 25 மட்டுமே! அப்போதைய ஜெர்மன் மகா கணித மேதை, டேவிட் ஹில்பெர்டின் [David Hilbert] தகுதி மதிப்பு 80! ராமானுஜன் அனுப்பிய கணித மெய்ப்பாடுகள், அவற்றின் விளைவுகள், அவரது கணிதக் கூட்டுழைப்பு, யாவும் தன் வாழ்க்கையில் நிகழ்ந்த ஓரினிய கவர்ச்சிச் சம்பவமாக எண்ணி ஹார்டி களிப்படைகிறார். ராமானுஜத்துக்கு காஸி மெய்ப்பாடு [Cauchy Theorem], இரட்டை நொடிச் சீர்ப்பாடுகள் [Doubly Periodic Functions] போன்ற மற்ற கணிதத் துறை அறிவில் எந்தவித ஞானமும் இல்லை! “இவற்றை எப்படி அவருக்குக் கற்றுக் கொடுப்பது” என்று மலைப்படைந்தார், ஹார்டி! ராமானுஜத்தின் கணிதப் படைப்புகள் யாவும் மெய்யானவை என்றும், அவரது கணித மெய்ப்பாடுகள் தன்னைப் பிரமிக்க வைத்து முற்றிலும் வென்று விட்டதாகவும், ஹார்டி கருதுகிறார். அவை யாவும் பொய்யானவையாக இருந்தால், ஒரு மேதை தன் கற்பனையில் அவற்றை உருவாக்கி யிருக்க முடியாது, என்றும் கூறுகிறார்!

1917 ஆம் ஆண்டில் ராமானுஜன் லண்டன் F.R.S. [Fellow of Royal Society] விருதையும், டிரினிடி கல்லூரியின் ஃபெல்லோஷிப் [Fellow of Trinity College] விருதையும் ஒன்றாகப் பெற்றுப் புகழடைந்தார். அரும்பெரும் இந்த இரண்டு கௌரவப் பட்டங்களை முதன்முதலில் முப்பது வயதில் பெற்ற இந்தியன் ராமானுஜன் ஒருவரே! ஆனால் அவரது சீரும், சிறப்பும் உன்னதம் அடைந்து மேல் நோக்கிப் போகையில், அவரது உடல் ஆரோக்கியம் அவரைக் கீழ் நோக்கித் தள்ளியது! வேனிற் காலநிலைப் பூமியில் வாழ்ந்த ராமானுஜனுக்கு, ஈரம் நிரம்பிய குளிர்ச்சித் தளமான இங்கிலாந்து உடற்கேடைத் தந்தது! முதல் உலக மகா யுத்தத்தின் நடுவில், இங்கிலாந்து உழன்று கொண்டிருக்கும் தருவாயில், அளவான காய்கறி உணவை மட்டும் கட்டுப்பாடோடு உண்டு வந்ததால், அது வேறு அவர் உடல் பலவீனத்தை அதிக மாக்கியது. ராமானுஜத்தைப் பயங்கரக் காசநோய் [Tuberculosis] பற்றி வீரியமோடு தாக்கியது! அந்தக் காலத்தில் இங்கிலாந்தில் கூட காசநோயிக்குப் போதிய மருந்தில்லை! அடிக்கடி சானடோரியத்துக்கு [Sanatorium] ராமானுஜன் போக வேண்டிய தாயிற்று. அப்படிப் போய்க் கொண்டிருந்தாலும், அவரது புதியக் கணிதப் படைப்புகள் பேரளவில் பெருகிக் கொண்டுதான் இருந்தன!

1919 ஆம் ஆண்டில் போர் நின்று அமைதி நிலவிய போது, நோய் முற்றி இங்கிலாந்தில் வாழ முடியாது, ராமானுஜன் இந்தியாவுக்குத் திரும்ப வேண்டியதாயிற்று. அந்தக் காலத்தில் காசநோயைக் குணப்படுத்தச் சரியான மருந்து கண்டு பிடிக்கப் படவில்லை! நோயின் உக்கிரம் கூட அவரது கணிதப் பணியை எள்ளவும் குறைக்க வில்லை! தனது 32 ம் வயதில், இந்தியக் “கணிதச் சுடர்விழி” [Maths Icon] ராமானுஜன், 1920 ஏப்ரல் 26 ம் நாள் இந்த மண்ணுலகை விட்டு விண்ணுலகுக்கு ஏகினார். உயிர் நழுவிச் செல்லும் கடைசி வேளை வரை அவர் கணிதத் துறைக்குப் புத்துயிர் அளித்ததை, இன்றும் அவரது இறுதிக் குறிப்பு நூல்கள் காட்டுகின்றன.

ஆயுள் முழுவதையும் கணிதப் பணிக்கு அர்ப்பணம் செய்து, வாலிப வயதிலே மறைந்த, ராமானுஜத்தின் அரிய சாதனைகளுக்கு ஈடும், இணையும் இல்லை என்று, அவர் பிறந்த தமிழகம் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்! கணிதப் பூங்காவில் அவர் ஊன்றிய விதைகள் பல, ஆல மரமாய் எழுந்து விழுதுகள் பெருகிப் பல்லாண்டு காலம், பயன் அடையப் போகிறது, கணித உலகம்! ராமானுஜன் கற்றது கடுகளவு! கணித்தது கால் பந்தளவு! என்று சொன்னால், அப்புகழ்ச்சி சற்றும் அவருக்கு மிகையாகாது!

.................(சி. ஜெயபாரதன், B.E.(Hons), P.Eng. (Nuclear) Canada)..

என்றும் அன்புடன்

புதன், ஜனவரி 19, 2011

பொன் மொழிகள்


1. கட்டுப்பாடு இல்லாமல் வாழ்கிறவன் கௌரவம்
    இல்லாமல் செத்து போவான்

2. பாராட்டுக்கு நாவின் ஈரம் மட்டும் போதாது,
    மனதில் ஈரமும் வேண்டும்

3. அணைய போகிற தீபத்திற்கு ஓளி அதிகம்

4. வறுமையில் நிறை காண்பவனே சிறந்த பணக்காரன்

5. வாழ்வில் நம்பிக்கை நல்லது தான். ஆனால
   அதற்கும் எல்லை உண்டு

6. கடன் இல்லாதவனே பணக்காரன்,
    உடல் ஆரோக்கியம் உள்ளவனே செல்வந்தன்

7. புத்திசாலிகள் எப்போதுமே எண்ணிக்கையில் குறைவு தான்

8. நேர் வழியில் அடைய முடியாததை
    ஒருபோதும் குறுக்கு வழியில்  அடைய முடியாது

9.  வாக்குறுதி என்பதும் ஒரு வகை கடன் தான்

10. தெரியாது என்று உணருவது அறிவை
      அடைவதற்கு ஒரு வழி

11. நமக்கு தீமை செய்பவர்களுக்கும் நாம் நன்மையே செய்யவேண்டும்

12. இறைவனை அண்டியவர்களுக்கு பிறவி துன்பம் என்றும் இல்லை.

எப்போதும் மகிழ்ந்திருக்க

1.   அமைதி, ஆனந்தம், துணிவு,ஊக்கம், நம்பிக்கை, நல்வாழ்வு,
      இவை பற்றியே நினைவுகள் உள்ளத்தில் இருக்கட்டும்

2.   நம் நிறைவன்புகளை நினைத்து மகிழ்வோம்
      இல்லாமையை எண்ணி வருந்தவேண்டாம்

3.  மற்றவர்களை போல் ஆக ஆசைபடுவது ஆபத்து நம்மை
     நாமே அடையாளம் கண்டு திருப்தி அடைவோம்

4.  நம் கையில் உள்ளவற்றை கொண்டு நல்லது செய்ய பழகுவோம் .

5.  நாம் விரும்பாத மனிதர்களை பற்றிய நினைவில்
     ஒரு விநாடி கூட  வீணாக்க வேண்டாம்

6.  மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை தரும் முயற்சியில்
     நாம் நம் துயரத்தை மறப்போம்




அனுதின‌மும் ஆனந்தமாய் வாழ்ந்திட‌

வாழ்த்துக்க‌ளோடு!


ஞாயிறு, செப்டம்பர் 19, 2010

சிந்தனைகள்_3



உயர்ந்த இலக்கு ஒன்றே


செய்வனை திருந்த செய்!

இரு கண்கள்

1.வந்தால் போகாதது , இரண்டு : புகழ், பழி

2.போனால் வராதது இரண்டு : மதிப்பு( மானம்) உயிர்

நான்கு உணவருந்தும் திசை பலன்கள்

கிழக்கு : ஆயுள் பெருகும்

மேற்கு : செல்வம் பெருகும்

தெற்கு : புகழ் பெருகும்

வடக்கு : உணவு அருந்துவதை தவிர்க்கலாம்

ஐவகை முன்னோடிகள்

1.வளர்த்த பெற்றோர்கள்

2.கல்வி கற்பித்தோர்

3.மனமுடித்த உறவினர்

4.பொருள் தேட தொழில்கற்பித்தோர்

5.இடுக்கண் களையும் நட்பு

ஆறு வகை முட்டாள்கள்

1.நேற்று செய்த தவறை திருத்தி கொள்ளாதவன்

2.வாய்பு வரட்டும் என்று காத்து இருபவர்கள்

3.அவசியம் என்று உணர்ந்த பின்பும் தன்னை மாற்றிகொள்ளதவர்கள்

4.தேவை இல்லாத இடத்தில் பொருளை வாரி இறைபவர்கள்

5.வெற்றியாளருக்கு பின்னால் யாரோ இருக்கிறார்கள் என்று  தவறாக  நினைபவர்கள்

6.இனி என்னால் முடியாது என்று நுனிபுல் மேய்ந்து விட்டு பிரச்னையை   தீர்க்காமல் ஒதுங்குபவர்கள்

ஏழு நன்மைகள்

1.ஏழ்மை யிலும் நேர்மை

2.கோபத்திலும் பொறுமை

3.தோல்வியிலும் விடா முயற்சி

4.வறுமையிலும் பரோபகாரம்

5.துன்பத்திலும் தைரியம்

6.செல்வதிலும் எளிமை

7.பதவியிலும் பணிவு


அனுதின‌மும் ஆனந்தமாய் வாழ்ந்திட‌ வாழ்த்துக்க‌ளோடு!

செவ்வாய், செப்டம்பர் 14, 2010

சிந்தனைகள்-2


நவ ரத்தினங்கள்

1.புத்தகத்தை வாங்கலாம் ஆனால் அறிவை வாங்க முடியாது!

2.உணவை வாங்கலாம் ஆனால் பசியை வாங்க முடியாது!

3.பகட்டை வாங்கலாம் ஆனால் பண்பாட்டை வாங்க முடியாது!

4.கட்டிலை வாங்கலாம் ஆனால் உறக்கத்தை வாங்க முடியாது!

5.கேளிக்கைகளில் கலந்து கொள்ளலாம் ஆனால் மகிழ்ச்சியை வாங்க  முடியாது!

6.ஆயுதங்களை வாங்கலாம் ஆனால் வீரத்தை வாங்க முடியாது!

7.ஊழியர்களை அமர்த்தலாம் ஆனால் சேவை மனப்பான்மையை வாங்க முடியாது!

8.அமைதியான இடம் வாங்கலாம் ஆனால் மன நிம்மதியை வாங்க முடியாது!

9.சிலையை வாங்கலாம் ஆனால் ரசிக்கும் திறனை வாங்க முடியாது!

உயரிய பத்து வெகுமதிகள்

1.மிக மிக நல்ல நாள்     : இன்று

2.மிக பெரிய வெகுமதி : மன்னிப்பு

3.உயர்வுக்கு வழி             : உழைப்பு

4.நழுவவிட கூடாதது   : வாய்ப்பு

5.விலக்கவேண்டியது   : விவாதம்

6.கொடிய நோய்              : பொறமை

7.மிக பெரிய தேவை    : சமயோசித புத்தி

8.செய்யவேண்டியது     : உதவி

9.தவிர்க்க வேண்டியது   : வெறுப்பு

10.நம்பகூடாதது                 : வதந்தி

வாழ்க்கை

வாழ்க்கை ஒரு விளையாட்டு  அதனை விளையாடுங்கள்

வாழ்க்கை ஒரு வினோதம்  அதனை கண்டறியுங்கள்

வாழ்க்கை ஒரு பாடல் அதனை பாடுங்கள்

வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம்  அதனை பயன்படுத்திகொள்ளுங்கள்

வாழ்க்கை ஒரு உறுதிமொழி  அதனை நிறைவேற்றுங்கள்

வாழ்க்கை ஒரு அன்பு  அதனை நேசியுங்கள்

வாழ்க்கை ஒரு அழகு   அதனை ஆராதியுங்கள்

வாழ்க்கை ஒரு இலக்கு   அதனை எட்டிபிடியுங்கள்

வாழ்க்கை ஒரு துயரம்   அதனை தாங்கிகொள்ளுங்கள்

வாழ்க்கை ஒரு உணர்வு    அதனை உணர்ந்துகொள்ளுங்கள்

வாழ்க்கை ஒரு போராட்டம் அதனை எதிர் கொள்ளுங்கள்

வாழ்க்கை ஒரு குழப்பம் அதற்கு விடை காணுங்கள்

வாழ்க்கை ஒரு ஞானம்  அதனை அறிந்து கொள்ளுங்கள்


அனுதின‌மும் ஆனந்தமாய் வாழ்ந்திட‌ வாழ்த்துக்க‌ளோடு!

திங்கள், செப்டம்பர் 06, 2010

சிந்தனைகள்!



· ஒரு மனிதன் எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று          தீர்மானித்துக் கொள்கிறானோ, அந்த அளவுக்குத்தான் அவன் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.


· எதையும் சிறப்பாகவும், முழுமையாகவும் நாம் செய்ய வேண்டுமானால் அதற்கு ஒரு வழி இருக்கிறது. கற்பனையில் அதைப் பயிற்சி செய்வதுதான் அந்த வழி.

· நமக்கு என்ன கிடைத்திருக்கிறதோ அதைப்பற்றி நாம் அதிகம் எண்ணிப் பார்ப்பதில்லை. எது நம்மிடம் இல்லையோ அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு இருக்கிறோம்.

· நீங்கள் விரும்பாதவர்களைப் பற்றி சிந்தித்து ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்காதீர்கள்.

· மனச் சுமையை இறக்கிவைக்கக் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் மனதைக் குடைவது எதுவானாலும், அதனை உடனுக்குடன் பேசி வெளியேற்றி விடுங்கள்.

· காரியத்தைச் செய்யுங்கள்; சக்தி தானாகவே வரும்.

· மனிதன் எதை நினைத்தாலும், எதை நம்பினாலும், அதை சாதிக்க முடியும். தயக்கமோ அச்சமோ இன்றி வேலையைத் தொடங்குங்கள். செய்யத் தொடங்கிவிட்டால், செய்வதற்குத் தேவையான சக்தி உங்களுக்குத் தானாகவே கிடைத்துவிடும்.

.நான் நீ என்னும் போக்கை தவிர், நாம் என்னும் உணர்வை பெறு

.குடும்பம் என்பது இரு சக்கர வாகனம் போன்றது, கணவன்
மனைவி என்ற இரு சக்கரமும் ஒத்து இருந்தால் தான்
வண்டி ஓடும்.



வாழ்கை ரகசியங்கள் எட்டு

1. அன்பு காட்டு ஆனால் அடிமை ஆகாதே!

2. இரக்கம் காட்டு ஆனால் ஏமாந்து விடாதே

3. பணிவாய் இரு ஆனால் கோழையாய் இராதே!

4. கண்டிப்பா இரு ஆனால் கோவ படாதே!

5. சிக்கனமாய் இரு ஆனால் கஞ்சனாய் இராதே!

6. வீரனாய் இரு ஆனால் போக்கிரியாய் இராதே!

7. சுறுசுறுபாய் இரு ஆனால் பதட்ட படாதே!

8. உழைப்பை நம்பு ஆனால் கடவுளை மறந்து விடாதே !


என்றும் அன்புடன்

திங்கள், ஜூன் 21, 2010

வருந்துகிறேன்

தெரிவித்து கொள்கிறேன்.


அலுவல் பணி அதிகமாக இருபதாலும்,அலுவலகத்தில் தமிளீஷ் சரியாக வராத காரணத்தினாலும் நண்பர்களின் வலைதளதிற்கு என்னால் சரியான நேரத்துக்கு வர இயலவில்லை என்பதனை (வருத்ததோடு) தெரிவித்து கொள்கிறேன்.

காலையில் பைசல் செய்ய முடியாதை மாலையில் வீட்டிற்கு சென்று பைசல் (வோட்டு) செய்து விடுவேன் என்பதனையும் உறுதியோடு கூறி கொள்கிறேன்

என்றும் அன்புடன்

ஞாயிறு, மார்ச் 21, 2010

"கஷ்டபடாமல் இருக்க கஷ்டபடுங்கள்'

வாழ்கையில் பலவிதமான் கஷ்டங்கள் பிற்காலத்தில் வரமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.


இளமையில் கஷ்டப்படவேண்டும்,அதுமட்டுமல்ல இனம்புரியாத எதிர்பாரத கஷ்டங்கள் வராமல் இருக்க திட்டமிட்ட கஷ்டங்கள் படலாமே.காலை நான்கு மணிக்கே எழுவது கஷ்டம் ஆனால் பிற்காலத்தில் படுக்க இடம் இல்லாமல்,குடிஇருக்க விடு இல்லாமல் கஷ்டபடாமல் இருக்க படுக்கையை விட்டு நான்கு மணிக்கே எழலாமே, உடலில் முகுகு வலி, மூட்டு வலி என்று திணறாமல் இருக்க உடற்பயிற்சி என்ற ஒழுங்கான கஷ்டம் படலாமே.

பட்டினி அல்லது கடை உணவு என்கிற பெருங்கஷ்டம் படாமல் இருக்க சமையல் என்கின்ற கஷ்டபடலாமே.

ஒழுங்கற்ற எதிர்பாரத கஷ்டத்தை தவிர்க்க திட்டமிட்ட
கஷ்டங்கள் படுவது நல்லதே.

பிள்ளை பேறு கூட கஷ்டம் தான்,தாய் அதை படாமல் இருந்தால் நாம் வந்தே இருக்க முடியாது. ஆனால் இளைய தலைமுறை ஜாலியாக இருக்கவே விரும்புகிறது. கஷ்டமே இருக்க கூடாது என்று கனவு காண்கிறது.சின்ன வண்டு ஒன்று கூட்டில் இருந்து வெளியேறும் போது அவஸ்தையுடன் தான் பயணத்தை ஆரமிக்கிறது.இதை மாணவர்க்கு உணர்த்த ஆசிரியர் ஒரு வழி செய்தார் கூட்டில் இருந்து அது வெளிவரும் துயரத்தை பார்க்கட்டும் என்று மாணவர்கள் மத்தியில் விட்டுவிட்டு வெளியே போனார்.,அதன வேதனையை கண்ட ஒரு மாணவன் அதற்கு உதவி செய்வதாக நினைத்து கொண்டு அது வெளியேறும் ஓட்டையை பெரிதுபடிதினான்.அது சுலபமாக வெளியே வந்து விட்டது,மாணவன் மகிழ்ந்தான்,ஆனால் வண்டு மகிழவில்லை.வெளியே வந்ததும் அதனால் பறக்க முடியவில்லை. ஏன்?..

அதன சிறகுகளை அசைக்க கூட முடியவில்லை,செய்தி அறிந்ததும் அதன காரணம் கண்டுபிடித்தார்.கூட்டில் இருந்து சிறிய துளை வழியாக வெளியேற சிரமபடும்போது தான் அது தன் சிறகுகளை அசைத்து அசைத்து பழகுகிறது.அதற்கு வாய்ப்பே இல்லாததால் சிறகுகளை அசைக்க அதற்கு தெரியவே இல்லை.

சிரமங்கள் நம்மை பலபடுதுகின்றன.கஷ்டங்கள் நம்மை வலுபடுத்துகின்றன துயரங்கள் தான் நம்மை உருவாக்குகின்றன.எதிர்பாரத சிரமங்களை தவிர்க்க எதிபார்க்கும் சிரமங்களை ஏற்று கொள்ளுங்கள் ஆகவே,

 "கஷ்டபடாமல் இருக்க கஷ்டபடுங்கள்'

 வெற்றி நிச்சயம்...


....சுகிசிவம்/

என்றும் அன்புடன்

புதன், மார்ச் 17, 2010

சில நேரங்களில் சில மனிதர்கள்



 நியூயார்க் நகரத்தின் சுரங்கபாதை ஒன்றில் பிரபல எழுத்தாளர் ஒருவர் ஞாயிற்றுகிழமை காலையில் அமைதியாக அமர்ந்திருந்தார்.ஆட்கள் அதிகமில்லாத அந்த இடத்தில ஒரு அமைதியான சூழ்நிலை உருவாகியது. சிலர் கண்களை முடியும்,பலர் பத்திரிகைகளை படித்த படியும் அமர்திருன்தனர்.அப்போது அங்கே ஒருவர் தன் இரு குழந்தைகளுடன் வந்து அந்த பிரபல எழுத்தாளர் அருகே வந்து கண்களை மூடி அமர்ந்தார்.குழந்தைகள் இருவரும் ஆறு வயதை தண்டாதவர்கள்,அவர்கள் விளையாட ஆரமித்தனர்.

சிறிது நேரத்தில் அங்கு இருந்த அமைதி காணாமல் போயிற்று.
குழந்தைகள் சத்தம் போட்டு விளையாடிய் கொண்டனர்,பிறகு சண்டை போட்டு கொண்டு ஒருவர் மீது ஒருவர் பொருட்களை வீசி கொள்ள அரமித்தனர்,அவர்கள் தந்தையோ அவர்களை கண்டிபதாக தெரியவில்லை,அவரோ கண்களை திறபதாக தெரியவில்லை.

அங்கு இருந்த அனைவரும் அவரை எரிச்சலாக பார்ப்பதை அவர் உணரவில்லை,அருகில் இருந்த எழுத்தாளர்ரோ பொறுமை பற்றி நெறய எழுதி குவித்தவர் பொருத்து,.பொருத்து பார்த்த அவர்ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து தன் அருகே அமர்ந்து இருந்த குழந்தைகளின் தந்தையிடம் சொன்னார் உங்கள் குழந்தைகள் மற்றவர்களை தொந்தரவு செய்கிறார்கள் அவர்களை கட்டுபடுதுன்கலேன் என்றார்.

அந்த நபர் மெல்ல கண்களை திறந்து ஆமாம் ஏதாவது செய்ய வேண்டும்,ஒரு மணி நேரத்துக்கு முன்பு தான் அவர்கள் தாய் இறந்துவிட்டாள், ஆஸ்பித்திரியில் அவளது உடலை தர இன்னும் ஒரு மணி நேரமாகும் அதனால் தான் இங்கு வந்தேன் இதை எப்படி அவர்களிடம் சொல்லுவது என்று எண்ணி கொண்டு இருக்கிறேன் மன்னித்து விடுங்கள் என்றார்.

அந்த எழுத்தாளர் அதுவரை அந்த நபர் மீதும்,அவருடைய குழந்தைகள் மீதும் கொண்ட கோபம் மறைந்து அவர்கள் மேல் பரிவும்,பச்சோதாபமும் பிறந்தது,ஏதவாது உதவி வேணுமா என்றும் அவரிடம் கேட்டார்.

அந்த எழுத்தாளர் "செயல் திறன் மிக்க மனிதர்களின் ஏழு பழக்கங்கள்" என்ற புகழ் பெற்ற நூலை எழுதிய ஸ்டீபென் ஆர்.கோவே.

இந்த நிகழ்சியில் அந்த சிறுவர்கள் செயல் மாறவில்லை,அங்கே மீண்டும் அமைதி திரும்பவில்லை.ஆனால் அந்த குழந்தைகளும்,அந்த தகப்பனும் இருக்கும் சூழ்நிலை தெரிந்த உடன் அவர் மனநிலை மாறிவிட்டது.

நமக்கு தவறாக தோன்றும் பல செயல்களுக்கு பின்னால் பல காரணங்கள் இருக்கின்றன.சில நம்மால் ஏற்று கொள்ள கூடியதாகவும்,சில ஏற்று கொள்ள முடியாதாகவும் இருக்கலாம்,ஆனால் அந்த காரண காரியம்அறியும் போது புரிந்து கொள்ளுதல் சாத்தியமாகிறது,
மன்னித்தல் எளிதாகிறது.

எப்போதும் ஒரே மாதிரி நடந்து கொள்வதற்கு
மனிதன் எந்திரமல்ல,
எந்திரம் கூட சில நேரங்களில் பழுதாகும் போது,
சில நேரங்களில் சில மனிதர்கள் நாம் எதிர்பார்பதற்கு மாறாக நடந்து கொள்வது அதிசியமல்ல. அந்த நேரத்தில் ஏதவாது காரணம் இருக்கும் என்று நாம் கோபபடாமல் சிந்தனை செய்தால் அதை பெரிதுபடுத்தாமல் நகர்கிற பக்குவம் நமக்கு வந்து விடும்


(இது என் நண்பர் எனக்கு மின்அஞ்சலில்
எனக்கு அனுப்பியதை மாற்றி எழுதி இருக்கிறேன்)

வியாழன், பிப்ரவரி 18, 2010

இளம்வயது சாதனையாளர்கள் (தெரிந்து கொள்ளுங்கள்)

நேர் மறை மனபாங்கு,இலக்கு,முடிவு இவைகள் அனைத்தும் உணர்ந்து மிக இளம் வயதில் சாதனை படைத்தவர்கள்.

1. இந்திய சரித்திரத்தில் இடம்பெற்ற போது பகவத்சிங்
வயது 23

2. புத்தர் ஞானம் பெற அரண்மனையை விட்டு வெளியேறியபோது    வயது  27 

3. ஜான்சிராணி லட்சுமிபாய் வெள்ளையனை எதிர்த்து போரிட்ட போது வயது 25

4. திருப்பூர் குமரன் வெள்ளையனை எதிர்த்து ரத்தம் சிந்தியபோது வயது 26

5. அலெக்ஸ்சாண்டர் பாரசிகத்தின் மீது படையெடுத்த போது
வயது 22

6. நியூட்டன் புவி ஈர்ப்பு விசையை கண்டறிந்த போது
வயது 24 

7. கலிலியோ தெர்மோ மீட்டர்யை கண்டுபிடித்த போது
வயது 20

8. மார்கோ போலோ உலக பயணத்தை தொங்கிய போது
வயது 17

9. கிரகாம்பெல் தொலைபேசியைகண்டுபிடித்த போது
வயது 29

10. கவிஞர் ஷெல்லி புகழ் பெற்ற ஆங்கில கவிதைகளை எழுதிய போது   வயது 29 

11. குற்றாலீஸ்வரன் கடலை நீந்திய போது
வயது 11

12. மண்டலின் ஸ்ரீனிவாசன் புகழ் பெற்ற போது
வயது 15