வியாழன், ஏப்ரல் 29, 2010

படித்ததில் பிடித்தது!

இலக்கு வேண்டும் அதற்கு உழைக்கவேண்டும்!ஒரு நகரத்திற்கு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.

அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.

இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இருப்பினும் ஒரு சிலர் 'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.

இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.

மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். மக்கள் வாயைப் பிளந்தனர் ''இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான் ; அதற்கு இவ்வளவு அலங்காரமா!''தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான், ''மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!''. கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது. மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை. அழுது புலம்பி, புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான்.

படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான் ''மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?''

''தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!''

''அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?''

''தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!''

''பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?''

''அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!

இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள்.

மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்!

நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.

இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்! சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!'' என்றான் மன்னன்.

ஒரே ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.
மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை?
பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.

ஒன்று : ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.

இரண்டு : அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!

அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல; நாம் அனைவருமே வெற்றி பெறவேண்டுமென்றால் நமக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும், திட்டமிட்ட பின் வெற்றி பெறும்வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பதுமே!!!!!!!இன்றைய பொழுது இனிய பொழுதாக அமையட்டும்! வாழ்த்துகள் !!என்றும் அன்புடன்

புதன், ஏப்ரல் 28, 2010

இசைஞானியின் இசையில் பெண் பாடகர்கள்- பகுதி-4

உமாரமணன் 
இசைஞானியின் இசை கடலால் அலங்கரிகபட்ட மற்றொரு முத்து. எண்ணிகையில் குறைவான பாடல்களை பாடி இருந்தாலும்,நல்ல பாடல்களையே தேர்வு செய்து இவரை பாட வைத்து இருப்பார் இசைஞானி இளையராஜா.அதில் சில என் விருப்பபாடலாக இங்கே

பகவதிபுரம் ரயில்வே கேட்

காதல் கொண்ட இரு மனங்கள் அவரவர் ஊடல் என்னத்தை வெளிபடுத்தும் பாடல் இசைஞானியோடு இணைந்து
உமாரமணனின் குரல் "செவ்வரளி தோட்டத்தில்"முதல் வசந்தம்

கடலா பெரிது இல்லையில்லை தன் காதல் தான் பெரிது
என்று பெண் மனது பாடும் பாடலாக"ஆறும் அது ஆழம் இல்லை"பன்னிர் புஷ்பங்கள்

காதலனோடு இணைந்து இருக்கும் எல்லாம் தருனமுமே எனக்கு ஆனந்தம்தான். கள்ளம் இன்றி உள்ளம் துள்ளி எழும்
"ஆனந்த ராகமாக " இந்த பாடல்புதுமை பெண்


நீ கொடுக்கின்ற முத்தத்தால் என் தேகத்தில் ஒரு மின்னல் எழுகின்றது என்று இந்த"கஸ்தூரிமான்" நானபட்டு நிற்கும் பள்ளியறை பாடல்என்றும் அன்புடன்

திங்கள், ஏப்ரல் 26, 2010

சாதித்த சென்னை சூப்பர்கிங்க்ஸ்

கிரிக்கெட்
நேற்று நடந்த கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அபார வெற்றி பெற்று கோப்பையைதட்டி சென்றது. முதலில் பாட்டிங் செய்த சென்னை அணி ஆரம்பம் முதலே அடித்து விளையாடியது.நிர்ணயிக்க பட்ட இருபது ஓவர்லில் சென்னை அணி 168 ரன்கள் எடுத்தது.பின்பு ஆடிய மும்பை அணி ஆரம்பத்திலேயே விக்கெட்ஐ பறிகொடுத்தது. எனினும் சச்சினின் நிதானமான துடுப்பாட்டம், (48) அணியை ஓவருக்கு 6 ரன்கள் என்ற நிலையில் கொண்டு சென்றது. எனினும் மறுமுனையில் ஆடிய அனைவரும் குறைவான் ஆட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.

நேற்றைய பைனலில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியதன் மூலம், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதன்முறையாக ஐ.பி.எல்., கோப்பை வென்று சாதித்தது. கடந்த 2008ல் நடந்த பைனலில் சென்னை அணி, ராஜஸ்தான் அணியிடம் தோல்வியடைந்து ஏமாற்றியது. கடந்த 2007ல் இந்திய அணிக்கு
'டுவென்டி-20' உலக கோப்பை பெற்றுத்தந்த தோனி, நேற்று சென்னை அணிக்கு ஐ.பி.எல்., கோப்பை பெற்றுத்தந்து, ரசிகர்களின் பாராட்டை பெற்றார்.

என்றும் அன்புடன்

வியாழன், ஏப்ரல் 22, 2010

இசைஞானியின இசையில் பெண் பாடகர்கள்-பகுதி 3

ஜென்சிதமிழ் இசை உலகில் மறக்க முடியாத மந்திர குரலுக்கு சொந்தக்காரர்.தமிழில் இசைஞானியால் அறிமுகபடுதபட்டு தொடர்ந்து அவரது இசையில் மட்டுமே பாடிய இன்னிசைகுயில். குறைவான பாடல்கள் மட்டுமே பாடி இருந்தாலும்,பாடிய அத்தனை பாடல்களும் மகுடத்தில் பதிக்கப்பட்ட வைரங்கள்.அவர் பாடிய பாடல்களில் என் விருப்ப பாடல்களாக இங்கே மூன்று முத்துகள்.

1.முள்ளும் மலரும்: "அடி பெண்ணே"

கன்னி பெண் ஒருத்தி இயற்கை காட்சி, வண்ணங்கள் போன்றவற்றோடு ஒப்பிட்டு தன் இளமையை பாடுவது போல் இருக்கும் இந்த பாடலில்.2.புதிய வார்ப்புகள் :"இதயம் போகுதே"

போன பாடலில் சந்தோஷ தருணத்தை பாடிய இந்த குரல் இந்த பாடலில் தான் விரும்பிய காதலன்,தன்னை பிரிந்து வேறு ஊருக்கு செல்லும் அந்த நிலையை
"அரும்பான என் காதல் மலராகுமோ"
"அது மலராகி மனம் விசூமோ"

என்று தான் நேசித்த "இதயம் போவதை" சோககீதமாக
சொல்வதை கேளுங்கள்.
3. ஜானி: "ஒரு இனிய மனது"

பாடல் ஆரம்பத்தில் இவர் கொடுக்கின்ற அந்த "லா ல லா ல" என்கின்ற ஹும்பிங்கை தொடர்ந்து இசைஞானி எழுப்புகின்ற அந்த இசையோடு இந்த பாடல் நம்மை வசபடுத்திவிடும். இந்த பாடலில் முதல் சரணத்தில் வருகின்ற

"ஜீவனானது இசை நானமென்பது முடிவில்லாதது
வாழும் நாளெல்லாம் என்னை வாழவைப்பது இசை என்றானது"

என்ற வரிகள் இந்த கலைஞர்களுக்கே உரித்தானது.
என்றும் அன்புடன்

வியாழன், ஏப்ரல் 15, 2010

இசைஞானியின் இசையில் பெண் பாடகர்கள்-பகுதி 2

ஸ்வர்ணலதா


"தளபதி" படத்தில் இவர் பாடிய "ராக்கம்மா கைய தட்டு"என்ற பாடல் முலம் எல்லாராலும் அறிய பட்ட இசைக்குயில்.இசைஞானியின் இசையில் இவர் பாடிய பாடல்கள் அத்தனையுமே இனிமையானவை தான்.
அதில் என் விருப்பபாடலாக இங்கே இரண்டு.

1.சத்ரியன்

இந்த படத்தில் வரும் "மாலையில் யாரோ மனதோடு பேச".
ஒரு பெண் காதல் வயபடுபோது அவளுக்கு ஏற்படுகின்ற மோகத்தையும்,தாபத்தையும் அழகாக சொல்வது போல் இருக்கும் இந்த பாடல்.


2.சின்னத்தம்பி

 
தனது காதலன் அந்த ஊரைவிட்டு  வேறு எங்கோ போகபோகிறேன் என்பதனை அறிந்த காதலி,உன் அன்பு எனக்கு இல்லையென்றால் நான் உயிரோடு இருப்பதேஇல்லை என்று தன் நிலைகுறித்து அவள் தெரிவிப்பது போல் இருக்கும்.அவளின் இந்த சோகத்தை எங்கள் இசைஞானியின் இசையோடு,இந்த குயிலின் குரலோடு கேட்டு பாருங்கள்.

 என்றும் அன்புடன்

செவ்வாய், ஏப்ரல் 13, 2010

அப்பா...


எப்படி எப்படி
எல்லாமோ
தன் பாசம்
உணர்த்துவாள் அம்மா
ஒரேயொரு
கைஅழுத்தத்தில்
எல்லாமே
உணர்த்துவார்
அப்பா...
முன்னால்
சொன்னதில்லை
பிறர் சொல்லித்தான்
கேட்டிருக்கிறேன்
என்னைப்
பற்றி பெருமையாக
அப்பா
பேசிக்கொண்டிருந்ததை.

 நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை...
இருந்தும் காட்டிக்
கொடுத்த கண்ணீரைத்
துடைக்க இன்று
அப்பாவும் இல்லை..


லேசாக என் கால்
தடுமாறினாலும்
பதறும் அப்பா
இன்று நான்
தடுமாறிய போது
பதறாமல் இருக்கிறார்
மீளா துயிலில்...

என்றும் அன்புடன்

ஞாயிறு, ஏப்ரல் 11, 2010

இரண்டாவது சந்தோசம்

 நண்பர் கிருபா அவர்களின் மகள் கிருதியா இரண்டாவது பிறந்தநாள் நேற்று வெள்ளிகிழமை இங்கே (துபாய்) ஷர்ஜாஹ் ஏசியன் பாலஸ் ஹோட்டலில் நடைபெற்றது.எல்லா நண்பர்களும் வந்து கலந்து கொண்டது சிறப்பாக இருந்தது. நண்பர்கள் எல்லோரும் ஒரே இடத்தில் கூடி இருந்தால் அங்கே கலகலப்புக்கும் பஞ்சம் இருக்குமா.அந்த நேரத்தில் நண்பர் செந்தில் வந்து சொன்னார் உங்களுக்கு நண்பர் சசி (http://vandhemadharam.blogspot.com/)என்பவர் விருது கொடுத்து இருக்கிறார்,பார்த்திர்களா என்று,  இல்லையே இன்று முழுவதும் நான் ப்ளாக் பக்கமே போகலே இந்த பர்த்டே வேலையே எனக்கு சரியாக இருந்தது என்று சொன்னேன். இன்று காலையில் ப்ளாக் பார்த்தபோது தான் தெரிந்துகொண்டேன் நண்பர் சசி எனக்கு விருது கொடுத்து என்னை பெருமைபடுத்தி இருக்கிறார்என்று,பதிவ்யுலகில் நான் எழுதிவந்த இந்த நான்கு மாதத்தில் இது நான் பெரும் இரண்டாவது விருது.ப்ளாக் எழுதிய முதல் எனக்கு ஏற்பட்ட பல சந்தேகங்களை மினஞ்சல் முலம் அதை தெளிவு படித்தியதோடு அல்லாமல்,இன்று எனக்கும் விருது கொடுத்து பெருமை படுத்திஇருக்கும் நண்பருக்கு

என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல...

இதனை நானும் சில பேருடன் பகிர்ந்துகொள்ளலாம் என்று எண்ணுகிறேன்


திவ்யாஹரி (http://everythingforhari.blogspot.com/)

"இயற்கை துணையிருந்தால்
இருவரும் மரணத்திலும்
சேர்ந்திருக்கவே வேண்டுகிறேன்..
சுயநலமாய் இருந்தாலும்!!!.." என்று

தன் காதலை சொன்னவர்.ஒருவரை விட்டு ஒருவர் கனநேரம் கூட பிரியமுடியவில்லை என்பதை அழகாக சொல்லி காதலை பெருமைபடுத்தியவர்.

ஜோக்கிரி (http://jokkiri.blogspot.com/)

”எந்திரன்” - ஒரு எலெக்ட்ரிக்சந்திப்பு பார்க்காத ஒரு சம்பவத்தை நேரில் பார்த்து பேட்டி எடுத்து போல் develop செய்த இவர் கற்பனை திறனுக்கு இந்த விருது

வள்ளுவம்(http://valluvam-rohini.blogspot.com/)

தினம் ஒரு குறள் முலம் நல்ல கருத்துகளை அள்ளி வழங்கும் இவர் ஹா..ஹா...ஹாஸ்யம் என்ற மற்றொரு ப்ளாக் முலம் நகைசுவைகளையும் அள்ளி வழங்கும் என் நெல்லை மண்ணின் வேங்கை.

பவி (http://pavithulikal.blogspot.com/)

கவிதை,பாடல்வரிகள்,என்று கலக்கும் இவர் வாக்களிப்போம் என்று ஜனநாயக கடமையை பறைசாற்றிய ஆல்ரவுண்டர்


அப்புறம்

 சித்ரா அக்கா (http://konjamvettipechu.blogspot.com/)

வேலன் சார் (http://velang.blogspot.com/)சசி (http://vandhemadharam.blogspot.com/)அன்புடன் மலிக்கா (http://niroodai.blogspot.com/)

இவர்களுக்கும் இதனை வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
என்னடா எல்லா பதிவர்களுக்கும் விளக்கம் கொடுத்து விட்டு இவர்களுக்கு கொடுக்கவில்லை என்று யாரும் என்ன வேண்டாம் இவர்களுக்கு முகவுரை தேவைஇல்லை.
                                                        
                                                                நன்றி!


என்றும் அன்புடன்

எஸ் மகாராஜன்

புதன், ஏப்ரல் 07, 2010

இசைஞானியின் இசையில் பெண் பாடகர்கள்-பகுதி-1

1. S.P சைலஜா

தமிழ் மட்டுமல்லாது மற்ற மொழி பாடல்களிலும்
தன் திறமையை நிருபித்த இனிமையான குரலுக்கு சொந்தகாரர். இசைஞானியின் இசையில் இவர் பாடிய அத்தனை பாடல்களுமே எவர் கிரீன் சாங்க்ஸ். "சலங்கைஒலி" திரைபடத்தில் பாடியதோடு மட்டுமல்லாது நாட்டிய நங்கையகவும் நடித்து இருப்பார். இவர் குரலில் நான் மிகவும் ரசித்து கேட்கின்ற இரு பாடல்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.(இரண்டுமே தலைவர் ரஜினி அவர்களின் படம் என்பது கூடுதல் சிறப்பு) இரண்டுமே மெலடி சாங்க்ஸ் தான்,ஆனால் அந்த இரண்டிலும் இவர் காட்டிஇருக்கும் குரல் ஜாலத்தை பாருங்கள்

முதலில் "தனிகாட்டுராஜா" படத்தில் வரும் "ராசாவே உன்னை நான் எண்ணித்தான்" பாடல்.ஒரு பெண் தனக்கு வரும் கணவனை நினைத்து/அழைத்து பாடுவதாக இருக்கும்.இரண்டாவது "ஜானி" படத்தில் வரும்

"ஆசையை காத்துல தூது விட்டு"
பெண் தனது எதிரில் இருக்கும் ஒரு ஆண்மகனுக்கு தனது
காதலை காற்றின் முலம் தூது சொல்லும் பாடல்இந்த பதிவை வெளியிட உதவி புரிந்த நண்பர் சசிக்கு (http://vandhemadharam.blogspot.com/)

என் நன்றிகள்!

(இன்னும் வரும்)

என்றும் அன்புடன்

சனி, ஏப்ரல் 03, 2010

க்ரீக் பார்க்

சரி இந்த வாரம் எங்கே போகலாம்,கேட்டது
எங்க அர்கைனைசெர் பாஸ்கர் அண்ணன்.நண்பர்கள் அனைவரும் ஒவ்வரு இடம் சொல்ல,


கடைசியாக முடிவானது இந்த கிரீக் பார்க். எபோதாவது இப்படி பார்க் பீச் அப்படினி போறது.இது இங்கே துபாய்லே தான் இருக்கு,கடந்த மூன்று வருடத்தில் நான் இப்போதான் முதல் முறையா போகிறேன்.வெள்ளிகிழமை காலையிலே ஒன்பதரை மணிக்கு பஸ் ஸ்டான்ட் வந்து விடுங்கள் என்றார்.நான் வழக்கபோல லேட் பத்தரை மணிக்கு தான் பஸ் ஸ்டான்ட் போனேன்.பிறகு பஸ் பிடித்து பதினோரு மணிக்கு பார்க்க்கு போயாச்சி

பதினோரு மணிக்கு டால்பின் ஷோ,(ஏற்கனவே எனக்கும் சேர்த்து ரீஸ்ர்வேசன் பண்ணியாச்சு) பதினைந்து நிமிடம் லேட்ஆ தான் உள்ளே போனேன்.உள்ளே போன அந்த பொண்ணு முதலில் நீர் நாய்(அதாங்க கடல் சீல்) வச்சு வித்தை காமிச்சிட்டு இருக்கு.நமக்கு ஒன்னும் புரியல என்னடா இது டால்பின் ஷோ சொன்னார்களே,இதுவா டால்பின் அப்படின்னு ஒரு குழப்பம்,அப்புறமா நண்பர் கிட்டே கேட்ட உடன் தான் புரிந்தது,ஆகா இது சீல் டோய்,அது ஒரு பதினைந்து நிமிடம் போச்சு டால்பின் ஷோ ஆரமிச்சாங்க,ஆறரிவு உள்ள மனிதன் சொல்வதை ஐந்தறிவு ஜீவன் எவ்வளவு அருமையா பாலௌ பண்ணுது,(இங்கே மனிதன் சொல்வதை மனிதன் எங்கே கேக்கிறான்). ஷோ முடிச்சு வெளிய வந்து பார்க்ல கொஞ்சம் நேரம் அரட்டை.அப்புறம் சாப்பாடு


 
அதன் பிறகு நாங்க போனது கேபிள் கார்(அதாங்க நம்ம ஊருல விஞ்ச் அப்படி சொல்லுவோம்),என்னோட ஆபீஸ் நண்பர்கள் எல்லாரும் அவங்க அவங்க பேமிலியோட, நான் மட்டும் தனியா(நம்ம கஷ்டம் வீட்டுல யாருக்கு புரியுது) என்னடா இது நம்ம மட்டும் தனியா அப்படின்னு யோசிச்சேன் ஆனா ஆண்டவன் என்னை சோதிக்கலை ஒரு பிலிபைன் பிகரு நம்ம பக்கதுல உக்கார்ந்தது, யாரு கண்ணு பட்டதோ உடனே அவ லவர் ஏதோ சொன்னான் அவ எழுந்து எதிர் பக்கம் போய் உக்கார்ந்துவிட்டாள், பிறகு பீலிங்லேயே கேபிள் கார் ரவுண்டு முடிச்சு வந்தேன்.அதன் பிறகு கொஞ்சம் நேரம் பார்கை சுற்றி பார்த்து விட்டவீட்டிற்கு வந்தோம்.
இங்கே (துபாய்) இருக்கின்ற நண்பர்கள் நேரம் கிடைத்தால் ஒரு முறை சென்று வாருங்கள்),குழந்தைகளுடன் சேர்ந்து உங்கள் கவலைகள் அனைத்தும் மறந்து என்ஜாய் பண்ணலாம்.


என்றும் அன்புடன்