வியாழன், மார்ச் 18, 2010

கண்ணதாசன் கவிதை




பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!

அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!

பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!

பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!

வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!

‘அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்’ எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
‘அனுபவம் என்பதே நான்தான்’ என்றான்!

- கவியரசு கண்ணதாசன்

7 கருத்துகள்:

ஆர்வா சொன்னது…

பழைய நியாபகம்...

S Maharajan சொன்னது…

//கவிதை காதலன் சொன்னது…
பழைய நியாபகம்...//

old is gold
முதல் வருகைக்கு நன்றி!

சசிகுமார் சொன்னது…

நல்ல பதிவு நண்பா, அப்புறம் ஒரு விஷயம் உங்களுடைய டெம்பிளேட்டை மாற்ற முடியவில்லையா ஏதேனும் சந்தேகம் இருப்பின் தயங்காமல் கேட்கலாம்

S Maharajan சொன்னது…

வந்து பகிர்ந்தமைக்கு நன்றி சசி,
முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்
சந்தேகம் இருப்பின் தயங்காமல் கேட்கிறேன்

S Maharajan சொன்னது…

வந்து பகிர்தமைக்கு நன்றி சசி!
டெம்பிளேட்டை மாற்ற முயற்சி
செய்து கொண்டு இருக்கிறேன்
ஏதேனும் சந்தேகம் இருந்தால் நிச்சயம் கேட்கிறேன்

அன்புடன் மலிக்கா சொன்னது…

கண்ணதாசனின் கவிவரிகள் எனக்குமிகப்பிடிக்கும்..

நல்லபகிர்வு மகராஜன்

S Maharajan சொன்னது…

வந்து பகிர்தமைக்கு நன்றி
அன்புடன் மலிக்கா

கருத்துரையிடுக