வியாழன், பிப்ரவரி 11, 2010
என்காதல்!
காதல், இந்த மூன்று எழுத்து மந்திரம்.அனைவரது வாழ்விலும் வந்து போகும் ஒரு சுவாச காற்று.வாழ்வில் எனக்கும் வந்தது,
அப்பொழுது தான் நான் எனது பாலிடெக்னிக் முடித்து வேலை தேடி கொண்டு இருந்த நேரம்.ஒரு நாள் மாலை என் தங்கை உடன் வீட்டிற்கு வந்தாள் அவள்.(பெயர் வேண்டாம்,இன்று ஒரு குழந்தைக்கு தாய் அவள் )
எல்லா படத்திலயும் கதாநாயகன் பேசுவாரே? ஒரு வசனம் "உன்னை பார்த்த உடனே மனசுல ஆயிரம் பட்டாம் பூச்சி பறந்தது",அது மாதிரிதாங்க எனக்கும் இருந்தது. அன்று முதல் தினமும் என் தங்கையை கல்லூரிக்கு சென்று விடும் பனியை நானாகவே ஏற்று கொண்டேன்.தினசரி அவளை பார்த்தல் போதும் எனக்கு.ஒரு நாள் என் வீட்டிற்கு அவள் வந்த போது தைரியமாக அவளிடம் என் ஆசையை சொன்னேன்.
காதல் மலர்ந்தது, அவளுக்கோ இரண்டாம் ஆண்டு கல்லூரி படிப்பில்,எனக்கோ வேலை கிடைத்தது சென்னையில்.
தினமும் மாலை தொலைபேசியில் பேசுவாள்.ஒரு வருடம் போனது வந்தான் விதி என்னும் காலன், அவள் படிப்பை முடிக்க வீட்டில் மாப்பிள்ளை படலம். இருமுறை தவிர்தவள்,மூன்றம் முறை அவள் தந்தையிடம் எங்கள் காதலை சொல்ல,அவர் என்னை அழைத்து பேசினார்.ஒரு கடமை தவராதவரின் மகளை தான் காதலித்து இருக்கிறேன் என்ற கர்வமும் எனக்கு கூடியது,ஆனால் அன்றைக்கோ நான் சூழ்நிலை கைதி.
அப்பொழுது என் அண்ணனுக்கோ,தங்கைகோ கூட திருமணம் முடியவில்லை,வருமானமும் குறைவு. அந்த நல்ல மனிதருக்கோ தன் மகளின் வாழ்கை முக்கியம். விதி வென்றது!
என்னை விட்டு கொடுத்தாள்.
அந்த வெள்ளை உள்ளம் படைத்தவள்.
சேர்வது மட்டும் அல்ல காதல்!
சேராமல் வாழ்த்துவதும் காதலே!
Labels:
நினைவலைகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
8 கருத்துகள்:
பாவம் நீங்க
V.A.S.SANGAR,
எல்லாம் விதி!
முதல் வருகைக்கு
நன்றி நண்பா.
இன்றும் மனதிலே இருத்தி வைத்து பதிவு எழுதும் அளவுக்கு வாழும் காதல் காலமெலாம் வாழ்க.
காதல் அழிவதில்லை காதலர்கள் தான் தோற்று போகிறார்கள் துணிவின்றி...
"காதல் அழிவதில்லை காதலர்கள் தான் தோற்று போகிறார்கள் துணிவின்றி..."
உண்மை தான் நிலாமதி
வந்து பகிர்ந்தமைக்கு நன்றி
எல்லாம் விதி நண்பா..
உண்மைதான் திவ்யாஹரி
வந்து பகிர்ந்தமைக்கு நன்றி தோழி
arumai
வசந்தமுல்லை
வந்து பகிர்ந்தமைக்கு நன்றி
கருத்துரையிடுக