செவ்வாய், பிப்ரவரி 23, 2010

பொறுமையே? உன் பெயர் ரஜினியா....


இந்த முறை ரஜினியை சீண்டி இருப்பது ஜாகுவார்தங்கம்,குகநாதன்.  ரஜினியை ஜோக்கர் என்றும்,அஜித்தை மிக கேவலமாகவும் திட்டி உள்ளனர்.

இதுவரையிலும் ரஜினி என்னும் தமிழின் "சூப்பர்ஸ்டாரின்" இருப்பிடத்தை அசைக்க முடியாத இயலாமையில் முடியாதவர்கள் பலரும் வைக்கின்ற ஒரு முட்டாள்தனத்தை இந்த முறை இந்த இருவரும் வைத்து உள்ளனர்.

ஏன்?

முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவில் அஜித் சொன்ன கருத்தும் அதற்கு ரஜினியின் ஆதரவான கருத்தும் தான் காரணம். ரஜினிக்கு கண்டனம் என்று கூறியிருக்கும் அறிக்கையில் நடிகர் சங்கம் கையெழுத்திட்டு இருப்பதுதான் வெக்ககேடன விஷயம்.இதே நடிகர் சங்கம் பிச்ரனைகாக எத்தனை முறை இந்த மனிதர் குரல் கொடுத்து இருக்கிறார். அவருடைய புகழ் அவர்களுக்கு வேண்டும்.. பணம் அவர்களுக்கு வேண்டும்.. ஆனால் அவர் மட்டும் வேண்டாம் என்பது இவர்களது புதிய இலக்கனம்மாக இருக்கிறது,

நடிகைகளை விபச்சாரிகள் என்று தினமலர் போட்டுவிட்டது என்றதும் , ரஜினி வந்து பத்திரிகைகளுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றதும், ஜக்குபாய்க்கு ஒரு பிரச்சினை என்றதும் ரஜினி வேண்டும் என்று முரட்டுப் பிடிவாதம் பிடித்ததும் இந்த நடிகர் சங்கம் தான்.ஆனால் ரஜினிக்கு ஒரு பிரச்சினை என்றால் மட்டும் நாங்கள் பேசமாட்டோம் என்கிறது  நன்றி கெட்ட நடிகர் சங்கம்.

ரஜினி எத்தனையோ எதிர்ப்பை தாண்டி வந்தவர்தான் என்றாலும்,
ஒவ்வரு முறையும் அவரை அவமானபடுத்தும் போது ரசிகர்களுக்கு வலிக்கத்தான் செய்கிறது.ரஜினிக்கு கண்டனம் தெரிவித்த இவர்கள் ஏன் ஜாகுவார் தங்கம், குகநாதன்க்கு கண்டனம் தெரிவிக்கவில்லை.

முன்பு ஒரு முறை ஒகெனேகல் பிரச்சனையின் போது கூட மேடையில் ரஜினியை வைத்து கொண்டே புரட்சி தமிழன் பேசிய வார்த்தைக்கும் கூட இவர்கள் கண்டனம் தெரிவிக்கவில்லை. ஏன் ரஜினி என்றால் இவர்களுகு இளக்காரமா?

பாலிவுட்டில் ஷாருக்கனுக்கு சமிபத்தில் வந்த பிரச்சனைகளுக்கு அனைத்து நடிகர்களும் ஷாருக்கிற்க்கு ஆதரவு தெரிவித்தனர். அத்துடன் பிரச்ச்னையை முடித்துக் கொண்டார்கள் எதிர் தரப்பினர். அதுபோல் இங்கும் அனைத்து நடிகர்களும் அஜீத்திற்க்கு ஆதரவு கொடுக்க வேண்டும். ரஜினி மட்டும் ஆதரவு தெரிவித்திருக்கிறார் மாணமுள்ள மனிதனாக! அதற்கு தான் இவர்கள் மீண்டும் ரஜினியை வம்புக்கு இழுத்து இருகிறர்கள்

நடிகர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் பிப்ரவரி 27ம் தேதி நடிகர் சங்கக் கட்டடத்தில் கூடுமாம். இந்தக் கூட்டத்தில் நடிகர்கள் சத்யராஜ், குயிலி, மும்தாஜ், சின்னிஜெயந்த், மயில்சாமி, எஸ்வி சேகர், பூச்சி முருகன் ஆகியோர் பங்கேற்று, ரஜினி-அஜீத் மீது என்ன மாதிரி மேல் நடவடிக்கை எடுப்பது என்று விவாதிப்பார்களாம்.

இதை என்னவென்று சொல்வது!கால கொடுமையடா சாமி


இவர்களுக்கெல்லாம் ஒன்று சொல்லுகிறோம்
ரஜினி தனி மனிதன் அல்ல....

ஒன்று நிச்சயம்....
இந்த பயணத்திலும் இவர் நிச்சயம் தடைகளைத்தாண்டி
தடம் பதிக்கப் தான் போகிறார்.

அப்போது இன்னும் உரக்க சொல்லுவோம் உலகுக்கு
இவர் ரசிகராக இருப்பதே பெருமையென்று.....

"நெருப்புபொன்னைச்சோதிக்கிறது .
பொறுமை இந்த மனிதனை சோதிக்கிறது" .

6 கருத்துகள்:

R.Gopi சொன்னது…

மகராஜன்...

தலைவர் இது போன்ற பல அக்னி பரீட்சைகள் ஏற்கனவே பல முறை பாஸ் பண்ணியவர்... அதுவும் அனாயாசமாக...

இந்த முறையும் இந்த வெத்து பார்ட்டிகளின் (டங்குவார் பித்தளை, டகால்டி நாதன்)மிரட்டல்களை வெற்றிகரமாக தாண்டி வருவார் என்பதே என் கருத்து...

Unknown சொன்னது…

நண்பா, தலைவர் இதையும் கடந்து போவார்... :)

திவ்யாஹரி சொன்னது…

இன்னும் உரக்க சொல்லுவோம் உலகுக்கு
இவர் ரசிகராக இருப்பதே பெருமையென்று....

S Maharajan சொன்னது…

R.Gopi சொன்னது…

"மகராஜன்...
தலைவர் இது போன்ற பல அக்னி பரீட்சைகள் ஏற்கனவே பல முறை பாஸ் பண்ணியவர்... அதுவும் அனாயாசமாக...
இந்த முறையும் இந்த வெத்து பார்ட்டிகளின் (டங்குவார் பித்தளை, டகால்டி நாதன்)மிரட்டல்களை வெற்றிகரமாக தாண்டி வருவார் என்பதே என் கருத்து..."


இதுவேதான் என் கருத்தும் கோபி

S Maharajan சொன்னது…

"முகிலன் சொன்னது…
நண்பா, தலைவர் இதையும் கடந்து போவார்... :)

நிச்சயமாக

S Maharajan சொன்னது…

திவ்யாஹரி சொன்னது…
"இன்னும் உரக்க சொல்லுவோம் உலகுக்கு
இவர் ரசிகராக இருப்பதே பெருமையென்று...."


தைரியமாக சொல்லுவோம் தோழி...

கருத்துரையிடுக