செவ்வாய், பிப்ரவரி 09, 2010

தமிழ் சினிமாவின் வெற்றி கூட்டணி- படங்கள் ஒரு பார்வை

தமிழ் சினிமாவில் தற்போது பல வெற்றி கூட்டணிகள் இருந்தாலும் இங்கே நான் பதிவாக கொடுக்க போகின்றது சுமார் பல (1977-1992) ஆண்டுகளாக தொடர்ந்த வெற்றி கூட்டணி.

இந்த காலகட்டத்தில் இந்த கூட்டணியில் முக்கிய பங்கு இசைஞானி இளையராஜா தான்.

இவருடன் பணியாற்றிய சில இயகுனர்கள் மற்றும் அவர்கள் இசைஞானி உடன் பணியாற்றிய படங்கள் & அந்த படங்களின் வெற்றி பற்றி தான் இந்த பதிவு.

இது பற்றி பல பதிவர்கள் எழுதி இருந்தாலும் என்னுடைய பதிவாக சிலவற்றை எழுதலாம் என்று எழுதுகிறேன்.

இசைஞானியோடு பல இயகுனர்கள் பணியாற்றி இருந்தாலும் நம் மனதில் சில இயகுனர்கள் மட்டுமே இடம் பிடிகின்றனர்.
அவர்களில் முதலில் வருபவர் இயகுனர் திரு.மணிரத்தினம் அவர்கள்
.

இசைஞானியும்,மணிரத்தினம் இணைந்த படங்கள் அத்தனையுமே வெற்றி படங்கள்தான்.


பகல்நிலவு (1985)

முரளி,ரேவதி,சத்யராஜ்,ராதிகா,சரத்பாபு,நிழல்கள் ரவி மற்றும் பலர் நடித்தது.....

ஊரின் பெரியமனிதர் சத்யராஜ்,அவரின் இரு மகன்களும் செய்யும் அடாவடிக்கு துணையாக முரளி.

அந்த ஊரின் இன்ஸ்பெக்டர் சரத்பாபுவின் தங்கை ரேவதி.ரேவதியை முரளி காதலிக்கிறார்.ரேவதி,முரளி காதலை முதலில் சரத்பாபு ஏற்க மறுத்தாலும் பின் சம்மதிக்கிறார்.
இதற்கிடையில் நாட்டியம் சொல்லி தரும் ராதிகாவை சரத்பாபு விரும்கிறார்.ராதிகா ஏற்கனவே நிழல்கள் ரவியால் கற்பிளந்து போகிறார்.சரத்பாபு,சத்யராஜின் எல்லா கட்ட பஞ்சயதையும் நிறுத்துமாறு சொல்ல அவரை கொல்ல சத்யராஜ் முரளியை பகடகாயா பயன்படுத்துகிறார்.இது தெரிந்து ரேவதி முரளியை வெறுக்க,முரளி தான் நல்லவன் தான் என்பதை முடிவில் சத்யராஜ்& கோ வை கொன்று நிருபிக்கிறார்.

இந்த படத்தில் எல்லா பாடல்களும் அருமையாக இருக்கும்.
குறிப்பாக "பூமாலையே தோள் சேரவா" .....

ஒரு காதல் பாடலை இப்படிக் கூட கம்போஸ் செய்து பாட முடியுமா என சக இசையமைப்பாளர்களை பிரமிக்க வைத்த பாடல் இது. ராஜாவின் இசை, குறிப்பாக ஜானகியின் குரலோடு இணைந்து பாடும் ராஜாவின் அந்தப் புதிய உத்தி, காலத்தின் நியதிகளை வென்ற பாடலாக இதை மாற்றியது. மற்றொரு அருமையான பாடல் ஜெயச்சந்திரன் குரலில் ஒலிக்கும்
"பூவிலே மேடை நான் போடவா"பாடல்.

படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது இந்த பாடல்கள்.

இன்னும் வரும்......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக