புதன், பிப்ரவரி 03, 2010

ரஜினி - ஒரு சகாப்தம்



ர‌ஜினி- நடிகர் என்ற அடையாளத்துக்கு மேலாக அவரது பெயர் உலகத்தில் உருவாக்கியிருக்கும் தாக்கம் ஆச்ச‌ரியமானது. சினிமா ஆன்மிகம் அரசியல் என்ற மூன்று முகம் கொண்ட ர‌ஜினியின் பிரபல்யத்தை தனிப்பட்ட சாதனையாக ஏற்க மறுப்பவர்களுக்கும் உண்டு. விருது, பாராட்டு விழா போன்றவற்றுக்கு அப்பாற்பட்டவர். 'பணம், புகழ் இதெல்லாம் வந்தாலும் சரி, போனாலும் சரி ஏன்னு கேட்க முடியாது' என தனது அனுபவத்தையே பாடமாக சொன்னவர்.ஒருவர் உன்னை தாழ்த்திப் பேசும்போது ஊமையாய் இரு... புகழ்ந்து பேசும்போது செவிடனாய் இரு... எளிதில் வெற்றி பெறுவாய்! என்ற தத்துவத்தின் படி வாழும் ர‌ஜினியை அவரது தாயார் ரமாபாய்
நாச்சிக்குப்பத்தில் பெற்றெடுத்தார் என்பது அனனவருக்கும் சமீபத்தில் தெரிந்து இருக்கும் உண்மை. இதற்கு முன்பு அவர் வேற்று மாநிலத்துக்காரன் என்ற பேச்சும் இதன் முலம் மாறிவிட்டது.ரஜினியை ஏன் அனைவருக்கும பிடிக்கிறது தெரியுமா? அவர் அரைவேக்காடுகளின் விமர்சனங்களைக் கண்டுக்கொள்வதுமில்லை, சுயநலமிகள் சிலரது புகழ்மொழிக்கு மயங்குவதும் கிடையாது.




ர‌ஜினியின் நடத்துனர் வேலையும், அவரது சினிமா பிரவேசமும் அனைவரும் அறிந்தது. எதிர்பாராத விபத்தால் நிகழ்ந்த அற்புதமல்ல ர‌ஜினியின் திரை பிரவேசம். பசி, பட்டினி, அலைச்சல், அவமானங்கள், காத்திருப்புகள், ஏமாற்றங்கள் என அனைத்தும் நிரம்பியது அவரது ஆரம்ப காலம். சினிமா பின்னணி வாய்க்கப்பெறாத ஒருவர் எதிர்கொள்ளும் அனைத்து சவால்களையும் ர‌ஜினியும் எதிர்கொண்டார்.

கலைந்த சிகை, கறுத்த மேனி, அலட்சிய பார்வை, திரையில் அதுவரை பார்த்திராத ஸ்டைல் என ரசிகர்களை சுண்டி இழுத்தார் ர‌ஜினி. சினிமாவின் அழகியல் இலக்கணங்களுக்கு அப்பாற்பட்ட அவரை தங்களின் பிரதிநிதியாக பார்க்க தலைப்பட்டார்கள் சாதாரண ஜனங்கள். .

புகழின் உச்சியிலும் நிலைதடுமாறாத மனம், அவருக்கு கிடைத்த ஆன்மீக ப‌ரிசென்றால் அதில் மிகையில்லை.

பிரபலம் கொடுத்த அதிகாரத்தை அவர் தனது எதி‌‌ரிகளின் மீது ஒருபோதும் பிரயோகித்தது இல்லை.


மனோரமா,மன்சூர்அலிகான்,வேலுபிரபாகரன்,பாரதிராஜா,சத்யராஜ்,போன்றோர் அவரை விமர்சித்த போது ர‌ஜினியின் எதிர்தாக்குதல் அரவணைப்பாகவே இருந்ததை நாடறியும்.அதனால்தான் இன்றும் நிறைகுடமாய், எல்லாம் அறிந்தும் எதுவும் தெரியாத பாவனை காட்டும் ஞானியாய் இருக்கிறார்.


வாழ்க்கையை வெளிப்படையாக வாழ்ந்து பழகிவிட்டவர் ர‌ஜினி.அரசியலுக்கு‌‌ரிய பொறுமையும், சாதுர்யமும் இருந்தும் இன்னும் அதை தொடததில் ஆச்சரியமே!!!





திரையில் வரும் கதாநாயக பிம்பத்தை நிஜத்திலும் பேண வேண்டிய கட்டாயம் ர‌ஜினிக்கு முன்பு அனைவருக்கும் இருந்தது. அந்த அவஸ்தையை உடைத்தெறிந்தவர் ர‌ஜினி. தனது வழுக்கை விழுந்த தலையை பொது இடங்களில் மறைக்க ஒருபோதும் அவர் முயன்றதில்லை.



ஆரம்ப காலத்தில் அவர்மீது படிந்த கலகக்கார சாயல் இன்று இல்லை. இன்று அவர் ஒரு ஆன்மீகவாதி. சிறந்த குடும்பத் தலைவர். சமூக ஒழுக்கங்களை மீறாத நல்ல குடிமகன். மரபான சமூக ஒழுக்கங்களின் நிழலில் பாதுகாப்பை தேடும் அனைத்து தரப்பினருக்கும் அவர் ஆதர்ஷ புருஷன். அவரை விரும்புவதன் மூலம் அந்த பாதுகாப்பு குறித்த நம்பிக்கை இன்னும் அதிகரிக்க தான் செய்கிறது.


ர‌ஜினி என்பது இன்று ஒரு பெயர் மட்டுமல்ல. ர‌ஜினி என்பது ஒரு நபருமல்ல. அதையெல்லாம் தாண்டி அது ஒரு மிகை யதார்த்த பிம்பம். அந்த பிம்பத்திற்கு எதிராக யாராலும் ர‌ஜினியை ஒன்றும் செய்ய இயலாது.
ர‌ஜினிக்கு இன்று எதி‌‌ரிகள் யாருமில்லை. அவர் வெற்றி கொள்ள வேண்டியவர்கள் ஒருவருமில்லை. அவர் எட்ட வேண்டிய உயரங்களும் இல்லை. இன்று அவருக்கிருக்கும் ஒரே சவால், சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் நடிகன்(ர‌ஜினி ) என்ற என்ற பிம்பத்தை கடந்து ,ஒரே அடையாளத்தில் தங்கிப் போகாமல் இருப்பது தான்.இது சாத்தியமா என்றால், நிச்சயம் சாத்தியமே. எத்தனையோ சாதனைகளை செய்த ர‌ஜினியால் இந்த சவாலையும் வெற்றி கொள்ள முடியும்.இதை தான் முன்பே அவர் சொல்லி இருப்பார் இப்படி


"மத்தவங்க நினைக்கிறதை நான் செய்ய மாட்டேன்...
நான் செய்றத மத்தவங்க எதிர்பார்க்கவும் விடமாட்டேன்!"



                                                           வாழ்க ரஜினி !!!

6 கருத்துகள்:

திவ்யாஹரி சொன்னது…

நல்ல பதிவு நண்பா

பெயரில்லா சொன்னது…

ayya ungal karuthu mihavum arumai. but rajini valkai patri sonna neengal ungal valkai patri sirithu sollavum.

eppadikku,

sudhakar.R

பெயரில்லா சொன்னது…

ayya maarasa, ungal karuthu mihavum arumai.

eppadikku,

sudhakar.R

S Maharajan சொன்னது…

திவ்யாஹரி,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி

சுதாகர்,

வருகைக்கு நன்றி

R.Gopi சொன்னது…

நல்லா எழுதி இருக்கீங்க மகராஜன்...

நானும் ரஜினி அவர்களை பற்றி விரிவாக எழுதிய “பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல” என்ற 10 பகுதிகளாக இங்குள்ளது... படித்து விட்டு கருத்து சொல்லவும்...

"பேர கேட்டதுமே சும்மா அதிருதுல்ல" (பகுதி 1)
http://jokkiri.blogspot.com/2009/07/blog-post.html

பெயரில்லா சொன்னது…

iethu rajinikanth in unnmai valki alla... avarin vetri pathaikal mattume.....

கருத்துரையிடுக