செவ்வாய், பிப்ரவரி 16, 2010

துப்பாக்கி தேவை (சிறுகதை )



நீ சொன்னாய் என்பதற்காக உன் அப்பாவிடம் பேசலாம் என்று முடிவு எடுத்தேன்.அலுவலகத்தில் இருக்கிறேன் சாயங்காலம் 'சரவணபவனில்' சந்திக்கலாம் என்று கூறியபோது கடமை தவராதவரின் மகளை தான் காதலித்து இருக்கிறேன் என்று பெருமை கொண்டேன். சொன்னபடி வந்த அவரை பார்த்து "எருமை மாட்டிற்கு மான் குட்டி எப்படி பிறந்தது" என்ற பழமொழி தான் நினைவில் வந்தது."மான் குட்டி" என்பது உனக்கு அதிகம் என்றாலும் எருமை மாடு உன் அப்பனுக்கு குறைவே.

அந்த கடையில் பில் போடுவதற்கான கம்ப்யூட்டர் தவிர மற்ற அனைத்தையும் தின்று தீர்த்து விடும் வெறி அவர் கண்ணில் இருப்பதை பார்க்க தவறிவிட்டேன் நான்.சரி ஏதாவது சாப்பிட்டு விட்டு பேச்சை துவங்கலாம் என்று சர்வரை அழைத்தேன்,அதன் பின் உன் அப்பன் கைங்கரியத்தால் சமையல் கட்டிருக்கும் டேபிளுக்கும் சுமார் அம்பது ஓட்டங்கள் எடுத்தான் சர்வர்.

அரசனிலும்,அன்னபூர்ணாவிலும் நீ புல் கட்டு கட்டுவது ஒரு "ஜெனடிக் பிரச்சனை" என்று கண்டுகொண்டேன்.வேழ முகம் தான் இல்லையே தவிர பேழை வயறு இருக்கிறது உன் பரம்பரைக்கே...

அவரது வேட்டையை ஒரு வழிக்கு கொண்டு வர இயலாதவனாய் இருந்தேன்'தம்பி இபோதெல்லாம் முன்ன மாதிரி சாப்பிட முடியவில்லை என்று திருவாய் வேறு மலர்ந்தார். திடபொருளிலிருந்து "ரோஸ் மில்க்" போன்ற திரவ பொருளுக்கு மாறினார்.அப்பாட முடித்துவிட்டார் என்ற என் என்னத்தை ஒரு "கஸாட" என்ற வார்த்தையில் உடைத்தார்.ஜர்தார் பீடா சாப்பிடவில்லை என்றாலும் நெல்லையப்பர் கோவிலில் உண்ட கட்டிக்கு காத்திருக்கும் கோவில் யானைக்கும் உன் அப்பனுக்கும் ஆறு வித்தியாசங்கள் கூட இல்லை. தம்பி எப்ப சாப்பிட்டாலும் கடைசியா ஒரு ஐஸ்கிரீம் சாப்டருது வழக்கம் என்ற அவரது கூற்றிலிருந்து "கடைசியா" என்ற வார்த்தை தான் எனக்கு வாழ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது.

"சார் உங்க மகளை லவ் பண்ணுகிறேன்"

அவளையே கல்யாணம் செய்து கொள்ள ஆசை படுகிறேன்" என்று சொன்ன போது அப்போ இது விஷயமா போனவாரம் "ஆர்யாஸ் ஹோட்டலில்" பேசினது நீங்கள் இல்லையா?! என்று அவர் ஆச்சரியமாக கேட்ட போது தான் தெரிந்தது,மொத்த குடும்பமும் இரை எடுபதற்கென்றே
எவனயாவது இரையாக்குவதை "ப்ரோபோச்னல் "டச்சோடு செய்வதை உணர்ந்தேன்.

"தம்பி இது பெரிய விஷயம் ஒரு நாளில் பேசி தீர்த்து விடமுடியாது" நீங்க ஒன்னு பண்ணுங்க நாளைக்கு சாயங்காலம் "அன்னபூர்ணா" வந்துடுங்க அப்ப பேசிகொள்ளலாம் என்ற உன் அப்பனை கொல்ல அந்த நேரம் என்னிடம் துப்பாக்கி இல்லாமல் போனது என் துர்பாக்கியமே!







(கடந்த வருடம் நண்பர்(2009) மின்னஞ்சலில் அனுப்பிய கதையை சற்று மாற்றி எழுதி இருக்கிறேன்)

5 கருத்துகள்:

திவ்யாஹரி சொன்னது…

ஐயோ பாவம்ப்பா உங்கள் நண்பர் ரொம்ப நொந்து போயிருப்பார்..

Unknown சொன்னது…

இதே மாதிரி கதை எனக்கும் வந்திடுங்கோ பட் இங்கிலிஸ்ல

தமிழ் நீங்க இன்னும் நல்லா இருக்கு

S Maharajan சொன்னது…

(திவ்யாஹரி)
"ஐயோ பாவம்ப்பா உங்கள் நண்பர் ரொம்ப நொந்து போயிருப்பார்.."

அப்படி தான் நானும் நினைக்கிறன்
வந்து வா(சுவா)சித்தமைக்கு நன்றி தோழி...

S Maharajan சொன்னது…

(V.A.S.SANGAR)

"இதே மாதிரி கதை எனக்கும் வந்திடுங்கோ பட் இங்கிலிஸ்ல"

அதுவும் (இங்கிலிஸ் கதை)என்கிட்டே இருக்கு நண்பா

S Maharajan சொன்னது…

தமிழிஷ்.காம் வோட்டு போட்டு இந்த கதையை பாப்புலர் பக்கதிற்கு கொண்டு சென்ற
balak
mvrs
subam
swasam,
boopathee
chuttiyar
tharun
ashok
msrgopenath

இந்த அத்தனை உள்ளங்களுக்கும்
நன்றி! நன்றி! நன்றி!

கருத்துரையிடுக