ஞாயிறு, பிப்ரவரி 20, 2011

மணிமொழிகள் !


.தேவைப்பட்டாலொழியக் கோபம் கொள்ளாதே.

.நன்மை செய்தவனுக்கு நன்றி காட்டு.

.தீமை செய்தவனை மறந்து விடு.

.எதையும் சாதிக்க நிதானம், அற்புதமான ஆயுதம்.

.வென்றவனுக்கு மலையும் கடுகு. தோற்றவனுக்கு கடுகும் மலை.

.ஆணவமும், அழிவும் இறைட்டைக் குழந்தைகள்.

.அற்ப ஆசைகள் பெரிய வெற்றியைத் தேடித் தருவதில்லை.

.சோம்பி நிற்கும் மனிதனிடம் துன்பங்கள் உற்ப்பத்தியாகின்றன.

.தாய்ப்பால் கொடுக்காத குழந்தைகளுக்கு தாய்ப்பாசம் இருக்காது.

.இலக்கியங்கள் எல்லாம் மனிதர்களுடைய அனுபவத்தில் உதித்தவையே.

.நீயாகவே முடிவு செய். நீயாகவே செயல் படு.

.முடிந்தால் நன்மை செய். தீமை செய்யாதே.

.சினிமா-பயன் படுத்த தெரிந்தவனுக்கு அற்புதமான ஆயுதம்.

.சிறு வயதில் வரவு வையுங்கள். பெரிய வயதில் செலவளிங்கள்.

.நம் மனதளவு எவ்வளவோ அவ்வளவு தான் உலகம்.

.வாழ்வில் நகைச்சுவை வேண்டும். சிரிக்காதவன் மிருகம்.

.அருங்குறள் 1330-ம் கடலளவு. அதன் முன் உலகம் கடுகளவு.

.வாழ்ககையின் ஒவ்வொரு அணுவையும் அனுபவிக்க வேண்டும்.

.எதையும் தெரியாது என்று சொல்லாமல் தெரியுமென சொல்.

.வாழ்வில் துணிவு வேண்டும்.

.விதி என்னும் மூலத்தில் இருந்து முளைத்த கிளையே மதி.

.காற்றுள்ள போதே தூற்றிக்கணும் என்பதை கவனத்தில் வை.

.வாழ்க்கையில் முன்னேற எந்த விமர்சனத்தையும் தாங்கிக்கொள்.

.திறமை உள்ளவனுக்கு வாய்ப்பு தூரமில்லை.

.............கவியரசு கண்ணதாசன்




என்றும் அன்புடன்

10 கருத்துகள்:

Unknown சொன்னது…

//அற்ப ஆசைகள் பெரிய வெற்றியைத் தேடித் தருவதில்லை.//

Unknown சொன்னது…

//இலக்கியங்கள் எல்லாம் மனிதர்களுடைய அனுபவத்தில் உதித்தவையே//.
//வாழ்க்கையில் முன்னேற எந்த விமர்சனத்தையும் தாங்கிக்கொள்.//
Nice Collection..

அன்புடன் மலிக்கா சொன்னது…

நல்ல பொன்மணிகள்
அருமையான தேர்வுகள் மகராஜன்..

மலாக்கா முத்துக்கிருஷ்ணன் சொன்னது…

தங்களின் வலைப் பதிவுகள் நன்றாக இருக்கின்றன. வாழ்த்துகள்.

எல் கே சொன்னது…

நல்ல பொன்மொழிகள் நன்றி

S Maharajan சொன்னது…

@பாரத்... பாரதி...
நன்றி
@அன்புடன் மலிக்கா
நன்றி
@SMuthukrishnan
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@எல் கே
நன்றி

R.Gopi சொன்னது…

மிக மிக அருமையான பொன்மொழிகள்...

வாழ்வில் அனைத்தையும் அனுபவித்து, தெளிவான ஞானம் பெற்று எழுதி இருக்கிறார் கவியரசர் கண்ணதாசன்...

அந்த ஃபோட்டோவும் சூப்பர்....

S Maharajan சொன்னது…

@R.Gopi
நன்றி தலைவா....

TamilTechToday சொன்னது…

No 1 Free Indian Classified Site உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க Free Classified New Website . Just Post Your Post Get Free Traffic ....http://www.classiindia.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.classiindia.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)
நன்றி

காதர் அலி சொன்னது…

மிக மிக அருமையான பொன்மொழிகள்...

கருத்துரையிடுக