திங்கள், செப்டம்பர் 06, 2010

சிந்தனைகள்!



· ஒரு மனிதன் எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று          தீர்மானித்துக் கொள்கிறானோ, அந்த அளவுக்குத்தான் அவன் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.


· எதையும் சிறப்பாகவும், முழுமையாகவும் நாம் செய்ய வேண்டுமானால் அதற்கு ஒரு வழி இருக்கிறது. கற்பனையில் அதைப் பயிற்சி செய்வதுதான் அந்த வழி.

· நமக்கு என்ன கிடைத்திருக்கிறதோ அதைப்பற்றி நாம் அதிகம் எண்ணிப் பார்ப்பதில்லை. எது நம்மிடம் இல்லையோ அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு இருக்கிறோம்.

· நீங்கள் விரும்பாதவர்களைப் பற்றி சிந்தித்து ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்காதீர்கள்.

· மனச் சுமையை இறக்கிவைக்கக் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் மனதைக் குடைவது எதுவானாலும், அதனை உடனுக்குடன் பேசி வெளியேற்றி விடுங்கள்.

· காரியத்தைச் செய்யுங்கள்; சக்தி தானாகவே வரும்.

· மனிதன் எதை நினைத்தாலும், எதை நம்பினாலும், அதை சாதிக்க முடியும். தயக்கமோ அச்சமோ இன்றி வேலையைத் தொடங்குங்கள். செய்யத் தொடங்கிவிட்டால், செய்வதற்குத் தேவையான சக்தி உங்களுக்குத் தானாகவே கிடைத்துவிடும்.

.நான் நீ என்னும் போக்கை தவிர், நாம் என்னும் உணர்வை பெறு

.குடும்பம் என்பது இரு சக்கர வாகனம் போன்றது, கணவன்
மனைவி என்ற இரு சக்கரமும் ஒத்து இருந்தால் தான்
வண்டி ஓடும்.



வாழ்கை ரகசியங்கள் எட்டு

1. அன்பு காட்டு ஆனால் அடிமை ஆகாதே!

2. இரக்கம் காட்டு ஆனால் ஏமாந்து விடாதே

3. பணிவாய் இரு ஆனால் கோழையாய் இராதே!

4. கண்டிப்பா இரு ஆனால் கோவ படாதே!

5. சிக்கனமாய் இரு ஆனால் கஞ்சனாய் இராதே!

6. வீரனாய் இரு ஆனால் போக்கிரியாய் இராதே!

7. சுறுசுறுபாய் இரு ஆனால் பதட்ட படாதே!

8. உழைப்பை நம்பு ஆனால் கடவுளை மறந்து விடாதே !


என்றும் அன்புடன்

10 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

வாழ்கை ரகசியங்கள் எட்டு..ரொம்ப நல்லா இருந்தது ..இதே கடை பிடிப்பது தான் பெரிய விஷயம் ..பகிர்வுக்கு நன்றி

Chitra சொன்னது…

வாழ்கை ரகசியங்கள் எட்டு

1. அன்பு காட்டு ஆனால் அடிமை ஆகாதே!

2. இரக்கம் காட்டு ஆனால் ஏமாந்து விடாதே

3. பணிவாய் இரு ஆனால் கோழையாய் இராதே!

4. கண்டிப்பா இரு ஆனால் கோவ படாதே!

5. சிக்கனமாய் இரு ஆனால் கஞ்சனாய் இராதே!

6. வீரனாய் இரு ஆனால் போக்கிரியாய் இராதே!

7. சுறுசுறுபாய் இரு ஆனால் பதட்ட படாதே!

8. உழைப்பை நம்பு ஆனால் கடவுளை மறந்து விடாதே !


..... 8 gems - treasure!!!! Thank you.

S Maharajan சொன்னது…

நன்றி சந்தியா

நன்றி சித்ரா அக்கா

சசிகுமார் சொன்னது…

அருமை நண்பா எட்டு ரகசியங்கள்

R.Gopi சொன்னது…

மனம் தேடும் சிந்தனைகளை அள்ளி வழங்கிய சிந்தனை சிற்பி மகராஜன் அவர்களே...

சிந்தனை அனைத்தும் முத்து....

எனக்கு பிடித்தது அந்த 6வது சிந்தனை தான்...

அதில் சிறிய மாற்றம் செய்தால், பெரிய டெர்ரரா இருக்கு...

6. போக்கிரியாய் இரு.... ஆனால், தவறிப்போய் கூட விஜய் படம் பார்த்து விடாதே....

S Maharajan சொன்னது…

நன்றி சசிகுமார்
நன்றி R.Gopi

மங்குனி அமைச்சர் சொன்னது…

என்னப்பா இங்க பிரச்சனை , ஒரே தத்துவ மலையா கொட்டுது , அசத்துங்க

S Maharajan சொன்னது…

நன்றி மங்குனி அமைசர்

தாராபுரத்தான் சொன்னது…

வணக்கம்...நல்ல சிந்தனைதானுங்க தம்பி..

S Maharajan சொன்னது…

S Maharajan சொன்னது…
நன்றி தாராபுரத்தான் ayya

கருத்துரையிடுக