சரி இந்த வாரம் எங்கே போகலாம்,கேட்டது
எங்க அர்கைனைசெர் பாஸ்கர் அண்ணன்.நண்பர்கள் அனைவரும் ஒவ்வரு இடம் சொல்ல,
கடைசியாக முடிவானது இந்த கிரீக் பார்க். எபோதாவது இப்படி பார்க் பீச் அப்படினி போறது.இது இங்கே துபாய்லே தான் இருக்கு,கடந்த மூன்று வருடத்தில் நான் இப்போதான் முதல் முறையா போகிறேன்.வெள்ளிகிழமை காலையிலே ஒன்பதரை மணிக்கு பஸ் ஸ்டான்ட் வந்து விடுங்கள் என்றார்.நான் வழக்கபோல லேட் பத்தரை மணிக்கு தான் பஸ் ஸ்டான்ட் போனேன்.பிறகு பஸ் பிடித்து பதினோரு மணிக்கு பார்க்க்கு போயாச்சி
பதினோரு மணிக்கு டால்பின் ஷோ,(ஏற்கனவே எனக்கும் சேர்த்து ரீஸ்ர்வேசன் பண்ணியாச்சு) பதினைந்து நிமிடம் லேட்ஆ தான் உள்ளே போனேன்.உள்ளே போன அந்த பொண்ணு முதலில் நீர் நாய்(அதாங்க கடல் சீல்) வச்சு வித்தை காமிச்சிட்டு இருக்கு.நமக்கு ஒன்னும் புரியல என்னடா இது டால்பின் ஷோ சொன்னார்களே,இதுவா டால்பின் அப்படின்னு ஒரு குழப்பம்,அப்புறமா நண்பர் கிட்டே கேட்ட உடன் தான் புரிந்தது,ஆகா இது சீல் டோய்,அது ஒரு பதினைந்து நிமிடம் போச்சு டால்பின் ஷோ ஆரமிச்சாங்க,ஆறரிவு உள்ள மனிதன் சொல்வதை ஐந்தறிவு ஜீவன் எவ்வளவு அருமையா பாலௌ பண்ணுது,(இங்கே மனிதன் சொல்வதை மனிதன் எங்கே கேக்கிறான்). ஷோ முடிச்சு வெளிய வந்து பார்க்ல கொஞ்சம் நேரம் அரட்டை.அப்புறம் சாப்பாடு
அதன் பிறகு நாங்க போனது கேபிள் கார்(அதாங்க நம்ம ஊருல விஞ்ச் அப்படி சொல்லுவோம்),என்னோட ஆபீஸ் நண்பர்கள் எல்லாரும் அவங்க அவங்க பேமிலியோட, நான் மட்டும் தனியா(நம்ம கஷ்டம் வீட்டுல யாருக்கு புரியுது) என்னடா இது நம்ம மட்டும் தனியா அப்படின்னு யோசிச்சேன் ஆனா ஆண்டவன் என்னை சோதிக்கலை ஒரு பிலிபைன் பிகரு நம்ம பக்கதுல உக்கார்ந்தது, யாரு கண்ணு பட்டதோ உடனே அவ லவர் ஏதோ சொன்னான் அவ எழுந்து எதிர் பக்கம் போய் உக்கார்ந்துவிட்டாள், பிறகு பீலிங்லேயே கேபிள் கார் ரவுண்டு முடிச்சு வந்தேன்.அதன் பிறகு கொஞ்சம் நேரம் பார்கை சுற்றி பார்த்து விட்டவீட்டிற்கு வந்தோம்.
இங்கே (துபாய்) இருக்கின்ற நண்பர்கள் நேரம் கிடைத்தால் ஒரு முறை சென்று வாருங்கள்),குழந்தைகளுடன் சேர்ந்து உங்கள் கவலைகள் அனைத்தும் மறந்து என்ஜாய் பண்ணலாம்.
என்றும் அன்புடன்
11 கருத்துகள்:
வெள்ளிகிழமை காலையிலே ஒன்பதரை மணிக்கு பஸ் ஸ்டான்ட் வந்து விடுங்கள் என்றார்.நான் வழக்கபோல லேட் பத்தரை மணிக்கு தான் பஸ் ஸ்டான்ட் போனேன்.
....... 9.30 a.m. IST means 10.30 a.m. IST (Indian Standard Time) - it is not late. ha,ha,ha,.....
நண்பர் மகராஜன், வணக்கம். நல்ல பதிவு.
துபாயில் பல பதிவர்கள் இருக்கிறோம். தொடர்ந்து எழுதுங்கள்.
//வெள்ளிகிழமை காலையிலே ஒன்பதரை மணிக்கு பஸ் ஸ்டான்ட் வந்து விடுங்கள் என்றார்.நான் வழக்கபோல லேட் பத்தரை மணிக்கு தான் பஸ் ஸ்டான்ட் போனேன்.
....... 9.30 a.m. IST means 10.30 a.m. IST (Indian Standard Time) - it is not late. ha,ha,ha,.....//
அதை தான் அக்கா நான் பாலௌ பண்ணுனேன்
//ச.செந்தில்வேலன் சொன்னது…
நண்பர் மகராஜன், வணக்கம். நல்ல பதிவு.
துபாயில் பல பதிவர்கள் இருக்கிறோம். தொடர்ந்து எழுதுங்கள்//.
முதல் வருகைக்கும்/கருத்துக்கும் நன்றி செந்தில்வேலன்
நண்பா நீங்களும் ஷார்ஜாவா,
அதுவும் இசைஞானி ரசிகரா?
வாங்க , நல்வரவு
www.geethappriyan.blogspot.com
//கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…
நண்பா நீங்களும் ஷார்ஜாவா,
அதுவும் இசைஞானி ரசிகரா?
வாங்க , நல்வரவு//
ஆமாம் நண்பரே!
வருகைக்கு நன்றி .
//ஒரு பிலிபைன் பிகரு நம்ம பக்கதுல உக்கார்ந்தது, யாரு கண்ணு பட்டதோ உடனே அவ லவர் ஏதோ சொன்னான் அவ எழுந்து எதிர் பக்கம் போய் உக்கார்ந்துவிட்டாள்//
நீங்க உங்க கைய கால வச்சிக்கிட்டு சும்மா இருந்திருக்கணும் ஹா ஹா! நல்லா ஊர் சுற்றுகிறீர்கள் நண்பா
சசிகுமார் சொன்னது…
ஒரு பிலிபைன் பிகரு நம்ம பக்கதுல உக்கார்ந்தது, யாரு கண்ணு பட்டதோ உடனே அவ லவர் ஏதோ சொன்னான் அவ எழுந்து எதிர் பக்கம் போய் உக்கார்ந்துவிட்டாள்//
நீங்க உங்க கைய கால வச்சிக்கிட்டு சும்மா இருந்திருக்கணும் ஹா ஹா! நல்லா ஊர் சுற்றுகிறீர்கள் நண்பா//
நான் ஒண்ணுமே செய்யலைங்க
வருகைக்கு நன்றி சசி .
நாங்களும் வரோம்ல...எங்களையும் பீச்சுக்கு அழைச்சுட்டு போவீகளா..! வாழ்க வளமுடன்,வேலன்.
//வேலன். சொன்னது…
நாங்களும் வரோம்ல...எங்களையும் பீச்சுக்கு அழைச்சுட்டு போவீகளா..! வாழ்க வளமுடன்,வேலன்//
வாருங்கள் சார் நிச்சயமாக
அழைத்து செல்கிறேன்
நான் ஏற்கனவே போன பக்ரீத் பண்டிகை விடுமுறையில் சென்றுள்ளேன்...
குழந்தைகளுக்கு நன்கு பொழுது போகும்...
தோழமைகள் அனைவரையும் என் வலைப்பக்கங்களை பார்வையிட அழைக்கிறேன்..
வெற்றியின் விழுதுகள் – (பகுதி-7) http://edakumadaku.blogspot.com/2010/04/7.html ”எந்திரன்” - ஒரு எலெக்ட்ரிக் சந்திப்பு http://jokkiri.blogspot.com/2010/03/blog-post_31.html
கருத்துரையிடுக