ஜென்சி
தமிழ் இசை உலகில் மறக்க முடியாத மந்திர குரலுக்கு சொந்தக்காரர்.தமிழில் இசைஞானியால் அறிமுகபடுதபட்டு தொடர்ந்து அவரது இசையில் மட்டுமே பாடிய இன்னிசைகுயில். குறைவான பாடல்கள் மட்டுமே பாடி இருந்தாலும்,பாடிய அத்தனை பாடல்களும் மகுடத்தில் பதிக்கப்பட்ட வைரங்கள்.அவர் பாடிய பாடல்களில் என் விருப்ப பாடல்களாக இங்கே மூன்று முத்துகள்.
1.முள்ளும் மலரும்: "அடி பெண்ணே"
கன்னி பெண் ஒருத்தி இயற்கை காட்சி, வண்ணங்கள் போன்றவற்றோடு ஒப்பிட்டு தன் இளமையை பாடுவது போல் இருக்கும் இந்த பாடலில்.
2.புதிய வார்ப்புகள் :"இதயம் போகுதே"
போன பாடலில் சந்தோஷ தருணத்தை பாடிய இந்த குரல் இந்த பாடலில் தான் விரும்பிய காதலன்,தன்னை பிரிந்து வேறு ஊருக்கு செல்லும் அந்த நிலையை
"அரும்பான என் காதல் மலராகுமோ"
"அது மலராகி மனம் விசூமோ"
என்று தான் நேசித்த "இதயம் போவதை" சோககீதமாக
சொல்வதை கேளுங்கள்.
3. ஜானி: "ஒரு இனிய மனது"
பாடல் ஆரம்பத்தில் இவர் கொடுக்கின்ற அந்த "லா ல லா ல" என்கின்ற ஹும்பிங்கை தொடர்ந்து இசைஞானி எழுப்புகின்ற அந்த இசையோடு இந்த பாடல் நம்மை வசபடுத்திவிடும். இந்த பாடலில் முதல் சரணத்தில் வருகின்ற
"ஜீவனானது இசை நானமென்பது முடிவில்லாதது
வாழும் நாளெல்லாம் என்னை வாழவைப்பது இசை என்றானது"
என்ற வரிகள் இந்த கலைஞர்களுக்கே உரித்தானது.
என்றும் அன்புடன்
5 கருத்துகள்:
நண்பரே ஜானி பாடல் மிகவும் அருமை, நிறைய முறை கேட்டு இருக்கிறேன் நண்பா
super songs! :-)
Tahanks sasi
Thanks chitra akka
எனக்கும் ஜானி பாடல் மிகவும் பிடிக்கும்..
//அன்புடன் மலிக்கா சொன்னது…
எனக்கும் ஜானி பாடல் மிகவும் பிடிக்கும்..//
Thanks அன்புடன் மலிக்கா
கருத்துரையிடுக