திங்கள், ஏப்ரல் 26, 2010

சாதித்த சென்னை சூப்பர்கிங்க்ஸ்

கிரிக்கெட்
நேற்று நடந்த கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அபார வெற்றி பெற்று கோப்பையைதட்டி சென்றது. முதலில் பாட்டிங் செய்த சென்னை அணி ஆரம்பம் முதலே அடித்து விளையாடியது.நிர்ணயிக்க பட்ட இருபது ஓவர்லில் சென்னை அணி 168 ரன்கள் எடுத்தது.பின்பு ஆடிய மும்பை அணி ஆரம்பத்திலேயே விக்கெட்ஐ பறிகொடுத்தது. எனினும் சச்சினின் நிதானமான துடுப்பாட்டம், (48) அணியை ஓவருக்கு 6 ரன்கள் என்ற நிலையில் கொண்டு சென்றது. எனினும் மறுமுனையில் ஆடிய அனைவரும் குறைவான் ஆட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.

நேற்றைய பைனலில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியதன் மூலம், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதன்முறையாக ஐ.பி.எல்., கோப்பை வென்று சாதித்தது. கடந்த 2008ல் நடந்த பைனலில் சென்னை அணி, ராஜஸ்தான் அணியிடம் தோல்வியடைந்து ஏமாற்றியது. கடந்த 2007ல் இந்திய அணிக்கு
'டுவென்டி-20' உலக கோப்பை பெற்றுத்தந்த தோனி, நேற்று சென்னை அணிக்கு ஐ.பி.எல்., கோப்பை பெற்றுத்தந்து, ரசிகர்களின் பாராட்டை பெற்றார்.

என்றும் அன்புடன்

8 கருத்துகள்:

Chitra சொன்னது…

என்னவோ போங்க.......!!!
World Cup - where are you?

R.Gopi சொன்னது…

மகராஜன்...

நான் மும்பை தான் வெற்றி பெறும் என்று நம்பினேன்... பவுலிங்கின் போது ரைனா கேட்சுகள் கோட்டை விட்டது, இன்ன பிற கூடாதுகள், பேட்டிங்கின் போது கையில் அடிபட்டதால் சேஸிங்கின் போது சச்சின் மெதுவாக ஆடியது, டுமினி இறங்க வேண்டிய இடத்தில் போலார்டு அவர்களை ஆட விடாதது.... இவை எல்லாமே மும்பையின் தோல்விக்கு காரணமாக அமைந்தது...

மிகவும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் ரைனாவின் பேட்டிங், பவுலிங், பீல்டிங் சென்னையின் வெற்றிக்கு சாதகமாகியது...

S Maharajan சொன்னது…

Thanks Chitra akka
Thanks R.Gopi

அன்புடன் மலிக்கா சொன்னது…

வந்தேன் சென்றேன் இதபத்தி ஒன்னும் தெரியாது மகராஜன்..வெற்றிகு வாழ்த்துக்கள்..

S Maharajan சொன்னது…

//அன்புடன் மலிக்கா சொன்னது…
வந்தேன் சென்றேன் இதபத்தி ஒன்னும் தெரியாது மகராஜன்..வெற்றிகு வாழ்த்துக்கள்..//

கொஞ்ச நாள் பார்த்துகிட்டே இருந்திங்க
புரிந்துவிடும்

சசிகுமார் சொன்னது…

ஜெயித்தது சென்னையில்லை நண்பா எல்லாமே ஜெயித்தது பணம் தான். அனைத்தும் சூதாட்டமே

மங்குனி அமைச்சர் சொன்னது…

//சசிகுமார் சொன்னது…

ஜெயித்தது சென்னையில்லை நண்பா எல்லாமே ஜெயித்தது பணம் தான். அனைத்தும் சூதாட்டமே ///\



ரிபீபீபீபீபீபீபீபீபீட்டு.....................

S Maharajan சொன்னது…

Thanks Sasi
Thanks மங்குனி அமைச்சர்..

கருத்துரையிடுக