வியாழன், ஆகஸ்ட் 04, 2011

எனக்கு பிடித்த கமல்

கமல்ஹாசனின் திரை பயணத்தில்
எனக்கு பிடித்த எட்டு படங்கள்-2

மைக்கேல் மதன காமராஜன்

முழுக்க முழுக்க நகைசுவையை மையமாக கொண்டு
எடுக்கப்பட்ட படம்.இதில் கமல்ஹாசன் நான்கு வேடங்களில்
(திருடன்,தொழிலதிபர்,சமையல்காரன் மற்றும் தீயணைப்புவீரர்)நடித்திருப்பார்.இந்த நான்கு வேடத்திலும் நான்கு விதமான
பாடி லாங்குவேஜு உடன் கமல் செய்து இருப்பது தான்
படத்தின் சிறப்பே.கிரேசி மோகன் வசனம் படத்துக்கு கூடுதல் பலம்

இந்தியன்


இன்னொரு சுதந்திரத்துக்குப் போராடும் வீரனாக…
லஞ்சத்துக்குக் கொள்ளிபோடத் துணிந்த வயோதிக தியாகியாக.. , தடுமாறாத உறுதியும் கொண்ட தாத்தாவாக நடித்துஇந்திய ரசிகர்களின் ஒட்டுமொத்த பாராட்டுக்களை கமல் கட்டிக்கொண்ட படமிது.படத்துக்கு வசனம் அமரர் சுஜாதா, படத்தில் இந்த ஒரு வசனம் இவரின் பெருமையை சொல்லும் "'பக்கத்துல இருக்கிற குட்டி குட்டி நாடெல்லாம் எங்கேயோ போயிடுச்சி.ஆனா இந்தியா இன்னும் அப்படியே இருக்கு..ஏன்?ஏன்னா அங்கெல்லாம் கடமையை மீறுவதற்குதான் லஞ்சம். இங்க மட்டும்தான் கடமையைச் செய்வதற்கே லஞ்சம்…” ன்று எழுதியிருப்பார். தமிழ் திரையுலம் இழந்த மாபெரும் சொத்து சுஜாதா அவர்கள்,1996 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதின் பரிந்துரைப்பிற்காக இந்தியா சார்பில் இத்திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது

தேவர் மகன்


இரு குடும்பத்து பங்காளி சண்டை கதை.சிவாஜி கமலின் நடிப்பைவிட இன்னொருவர் நடிப்பு மிக பிரமாதமாய் இருக்கும் அவர் நாசர்.நிறைய பேருக்கு போபம் வரலாம், ஆனால் அதுதான் உண்மை"வாடா என் தேவன் மகனே" என சொல்வதாகட்டும், மூக்கோடு மூக்கு ஒட்டி நிற்கும் அந்த 'தூங்கிக்கிட்ட இருக்கிற மிருகத்தை தட்டி எழுப்புற" சீனாகட்டும்" நாசர் கலக்கி இருப்பார். மாயன் நாசர் இல்லாமல் இந்த படத்தை ரசிக்கவே மனம் இருக்காது.படத்துக்கு படம் ஏதவாது புதுமையை புகுத்தும் கமல்,
இந்த படத்தில் பெரிய மீசையுடன் வேஷ்டி சட்டையில் ஒரு அக்மார்க் கிராமத்தான் ஆகவே வாழ்ந்து இருப்பர்,பரதன் இயகத்தில் இசைஞானி இசை அமைத்த மெகா ஹிட் திரைப்படம்.

புன்னகை மன்னன்

கமல் இரு வேடம் ஏற்ற படம் என்றால் ஒரு வேடம் மிகவும் பிரமாதமாய் பேசப்படும், (ஒரு வேடத்தை அவரே கெடுத்து கொள்வர் அது வேறு கதை ) ஆனால் இந்த படம் அதருக்கு விதி விலக்கு..காதலில் தோல்வியுற்ற நடன கலைஞர் ஆகவும், சார்லி சாப்ளின் ஆகவும் ஏற்ற இரு வேடமும் கனமான் வேடம், அதன் தன்மை உணர்ந்து கமல் தன் நடிப்பை வெளிபடுத்திய அருமையான படம்.இசைஞானி இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை ரகம்.

2 கருத்துகள்:

Chitra சொன்னது…

வணக்கம். நலமா? :-)

அம்பாளடியாள் சொன்னது…

வணக்கம் அருமையான தகவல்களை வெளியிட்டுவரும்
உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .நன்றி பகிர்வுக்கு......

கருத்துரையிடுக