ஞாயிறு, ஜூன் 20, 2010

ராவணன் - விமர்சனம்




திருநெல்வேலி மாவட்டத்திற்கு அருகே உள்ள ஒரு கிராமத்தில் வாழும் விக்ரம், பழங்குடி மக்களுக்கு சகலமுமாக இருப்பவன். ஆனால் சட்டத்தின் பார்வையில் அவன் மோசமானவன். விக்ரமின் கொட்டத்தை அடக்க அந்த ஊருக்கு வரும் காவல்துறை அதிகாரி பிருத்விராஜ், அவருடைய மனைவிதான் ஐஸ்வர்யா ராய்.


விக்ரமின் தங்கைக்கு திருமணம் நடக்கும்போது அதிரடிப் படை அந்த இடத்தில் நுழைந்து விக்ரமை போட்டுத் தள்ளப் பார்க்க, குண்டு காயத்துடன் அவர் தப்பிக்கிறார். உடனே அவர் தங்கை ப்ரியாமணியை தூக்கிப் போகும் அதிரடிப் படையினர், அவளை கற்பழிக்கிறார்கள். வீடு திரும்பும் அவள் விக்ரமிடம் அனைத்தையும் சொல்லிவிட்டு தற்கொலை செய்து கொள்கிறாள்.

இதற்கு பழிவாங்க பிருத்விராஜின் மனைவி ஐஸ்வர்யா ராயை கடத்தி காட்டுக்குள் வைக்கிறார் விக்ரம். கடத்தப்பட்ட மனைவியை மீட்கவும், விக்ரமை கொல்லவும் ஒரு படையுடன் காட்டுக்கு புறப்படுகிறார் பிருத்விராஜ். அப்படி புறப்பட்டவர் காட்டு ராஜாவாக வலம்வரும் விக்ரமை பிடித்தாரா? இல்லையா? என்பதே மீதி கதை!

விக்ரம் நடிப்பில் அக்குவேறு ஆணிவேராக பிரித்து மேய்ந்துள்ளார். கோபம், அமைதி, சிரிப்பு, தவிப்பு, தாபம், வெறி, சோகம் என நடிப்பின் அத்தனை பரிமாணத்திலும் கலக்குகிறார். அதிகமான ரிஸ்க் எடுக்கும் காட்சிகளிலும் சர்வசாதாரணமாக சாகசம் புரிந்திருக்கிறார்.

ஐஸ்வர்யா ராய்க்கு அழகு குறையவே குறையாது போலிருக்கிறது. அப்படியே விக்ரமுக்கு பயப்படாமல் எதிர்த்து நிற்கும் ஐஸ்வர்யா, விக்ரமின் பேச்சில் சலனம் ஏற்பட்டு அதற்கு அவர் கொடுக்கும் முகபாவனை பிரமாதம்

பிருத்விராஜ், பிரபு,கார்த்திக்,ப்ரியாமணி என்று அனைவரும் தத்தம் தங்களுது பங்களிப்பை செவனே செய்து உள்ளனர்.

படத்தின் இன்னுமொரு நாயகன் சந்தோஷ் சிவன் அத்தனை காட்சிகளிலும் ஒளிப்பதிவு சூப்பரோ சூப்பர்! தமிழில் வேறு எந்தப் படத்திலும் இத்தனை அழகான இயற்கைக் காட்சிகளைப் பார்த்திருக்க முடியாது

வசனம் சுஹாசினி (மஹா சொதபல்)திருநெல்வேலித் தமிழ் இத்தனை கொடூரமானதா? என்று திருநெல்வேலிகாரணன எனக்கே சந்தேகத்தையே எழுப்பி விட்டது சுஹாஸினி படத்தில் வைத்திருக்கும் ஸ்லாங்கைப் பார்த்து! ஓர் இரு இடங்களில் அப்படியே சித்தப்பா கமல் தெரிகிறார்.

உங்க சாமி எப்படி இருப்பர் ?

ரொம்ப நல்லவரோ?

படத்துக்கு மற்றொரு பலம் ஆஸ்கார் நாயகனின் இசை

வழக்கமான மணிசார் படம் இல்லை நெறய லாஜிக் சொதபல்.

மொத்தத்தில் ராவணன் பார்க்கலாம் ரகம்.




 என்றும் அன்புடன்

7 கருத்துகள்:

Kousalya Raj சொன்னது…

//வசனம் சுஹாசினி (மஹா சொதபல்)திருநெல்வேலித் தமிழ் இத்தனை கொடூரமானதா? என்று திருநெல்வேலிகாரணன எனக்கே சந்தேகத்தையே எழுப்பி விட்டது//

எப்படி சொதப்பி இருக்காங்கனு கண்டிப்பா போய் பார்க்கணும் நண்பரே! நானும் திருநெல்வேலிதான..!! மற்றபடி உங்க விமர்சனம் அருமை!!

சௌந்தர் சொன்னது…

படம் நல்ல இல்லையே பாஸ்...

சசிகுமார் சொன்னது…

கதை நன்றாக உள்ளது நண்பா , ஆனால் எடுத்த விதம் எப்படி உள்ளது என்பதை படம் பார்த்தால் தெரியும்.

மங்குனி அமைச்சர் சொன்னது…

மொத்தத்தில் ராவணன் பார்க்கலாம் ரகம்.///


ஒரு டவுட்டாவே சொல்ரிகளே ???

S Maharajan சொன்னது…

//Kousalya சொன்னது…
//வசனம் சுஹாசினி (மஹா சொதபல்)திருநெல்வேலித் தமிழ் இத்தனை கொடூரமானதா? என்று திருநெல்வேலிகாரணன எனக்கே சந்தேகத்தையே எழுப்பி விட்டது//

எப்படி சொதப்பி இருக்காங்கனு கண்டிப்பா போய் பார்க்கணும் நண்பரே! நானும் திருநெல்வேலிதான..!! மற்றபடி உங்க விமர்சனம் அருமை!!//

நன்றி Kousalya

//soundar சொன்னது…
படம் நல்ல இல்லையே பாஸ்...//

பார்க்கலாம் soundar
நன்றி

//சசிகுமார் சொன்னது…
கதை நன்றாக உள்ளது நண்பா , ஆனால் எடுத்த விதம் எப்படி உள்ளது என்பதை படம் பார்த்தால்
தெரியும்//

நன்றி சசி

//மங்குனி அமைச்சர் சொன்னது…
மொத்தத்தில் ராவணன் பார்க்கலாம் ரகம்.///
ஒரு டவுட்டாவே சொல்ரிகளே ???//

iTHU DOUBT ILLA AMARICHERE CLEAR
நன்றி

பிரேமா மகள் சொன்னது…

வழக்கமான தமிழ் சினிமா போல மணியும் சொதப்பிட்டாரா?

இந்த படத்தைப் பார்க்க, ஏழு பவுண்ட்ஸ் செலவு பண்ணாமல், ஒரு பவுண்ட்-க்கு சி.டி வாங்கி பார்க்க வேண்டியதுதான்..

S Maharajan சொன்னது…

//வழக்கமான தமிழ் சினிமா போல மணியும் சொதப்பிட்டாரா?

இந்த படத்தைப் பார்க்க, ஏழு பவுண்ட்ஸ் செலவு பண்ணாமல், ஒரு பவுண்ட்-க்கு சி.டி வாங்கி பார்க்க வேண்டியதுதான்..//

ஆன சி.டியில் சரியாய் தெரியாதே
மணி சார் படம்
நன்றி சுபி

கருத்துரையிடுக