ஞாயிறு, மே 16, 2010

இசைஞானியின் இசையில் பெண் பாடகர்கள்-பகுதி-6

"சின்னகுயில்" சித்ரா





இசைஞானியின் இசை மகுடத்தை அலங்கரித்த மற்றொரு
மாணிக்ககல்.முதல் தேசிய விருதே இசைஞானியின்
இசையில்.சின்னகுயில் என்று அன்போடு எல்லோராலும் அழைக்கபட்டவர்.அவர் பாடிய சில பாடல்கள் உங்கள் பார்வைக்கு.இந்த"சின்னகுயில்"யை தமிழில் நமக்கு தந்த அறிமுக பாடல்.




வாசம் வீசும் பூவில் வாசம் செய்ய வேண்டும்
என்னும் சந்தோஷ பாடல்




இந்த பாடல் பதிவுக்கு இசை ஞானி அழைத்த போது சித்ராவுக்கு பட்ட படிப்பு எக்ஸாம் இருந்ததால் அவர் பாடல் பதிவு வர விருப்பம் இல்லை என்று சொன்னாராம்,அப்போது இசைஞானிஇவ்வாறு சொன்னாராம்.நீ பட்ட படிப்பு எக்ஸாம் எழுதினால் உன் பெயர்கு பின்னால்நான்கு எழுத்து வேண்டுமானால் கூடலாம்,ஆனால் இந்த பாடலை நீ பாடினால் உனக்கு கிடைக்கின்ற பெயர் உனக்கு அழியா புகழை பெற்று தரும் எது வேண்டும் என்று நீ முடிவு எடுத்து கொள் என்று கூறிவிட்டாராம்.அரை மனதோடு வந்து பாடி கொடுத்து விட்டு போனாராம் சித்ரா,அந்த தீர்கதரிசி சொன்னது பலித்த பாடல் ஆம் சின்ன குயில்க்கு முதல் தேசிய விருது பெற்று தந்த பாடல்.





சிலகாலம் நான் சிறையில் வாழ்ந்தேன் அபொழுதே நான் இறந்து இருப்பேன்,உன்னை மீண்டும் பார்த்ததால் தான் உயிர் வாழ்கிறேன் என்று தன் காதல் மன்னனை நினைத்து பாடும் பாடல்.



தான் விரும்பியவனை எதிர்பார்த்து கிழக்குவாசல் நோக்கி நின்றவளுக்கு அவன் தந்த குங்குமம் ஏற்படித்திய சந்தோஷ பாடல்.






என்றும் அன்புடன்

7 கருத்துகள்:

தாருகாசினி சொன்னது…

அருமையான பாடல் தொகுப்பு.அதிலயும் "ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்","வந்ததே குங்குமம்" இரண்டும் எண்ட எவர்க்ரீன் ஃபவரிட்.

S Maharajan சொன்னது…

//தாருகாசினி சொன்னது…
அருமையான பாடல் தொகுப்பு.அதிலயும் "ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்","வந்ததே குங்குமம்" இரண்டும் எண்ட எவர்க்ரீன் ஃபவரிட்//

வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி தாருகாசினி

சசிகுமார் சொன்னது…

வழக்கம் போல நல்ல செலேக்ட்சன் நண்பா,உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

S Maharajan சொன்னது…

//சசிகுமார் சொன்னது…
வழக்கம் போல நல்ல செலேக்ட்சன் நண்பா,உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்//

வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி சசி

Cable சங்கர் சொன்னது…

நல்ல தொகுப்பு ந்ண்பரே.. வாழ்த்துக்கள்.

S Maharajan சொன்னது…

//Cable Sankar சொன்னது…
நல்ல தொகுப்பு ந்ண்பரே.. வாழ்த்துக்கள்.//

முதல் வருகைக்கும் பகிர்வுக்கும்
நன்றி ஷங்கர்ஜி

Sva சொன்னது…

நல்ல செலேக்ட்சன்

கருத்துரையிடுக