மழலைப் பருவத்தில்
பார்த்து வியக்க
ஒரு நட்பு...
குழந்தைப் பருவத்தில்
ஓடி விளையாட
ஒரு நட்பு...
காளைப் பருவத்தில்
ஊர் சுற்ற
ஒரு நட்பு...
வாலிபப் பருவத்தில்
பேசி ரசிக்க
ஒரு நட்பு...
முதிர்ந்த பின்
அனுபவங்களைப்
பகிர்ந்து கொள்ள
ஒரு நட்பு...
நட்புகள் ஆயிரம் இருந்தும்
நட்பின் தேவை குறையவில்லை...
தேவையின் போது
தோள்களில் சாய
நட்பு வேண்டும்...
துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க
நட்பு வேண்டும்...
மகிழ்ச்சியின் போது
மனம் மகிழ
நட்பு வேண்டும்...
நானாக நானிருக்க
நட்பே...
நீ எனக்கு
நட்பாக வேண்டும்..
(நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் அனுப்பியது )
1 கருத்து:
அன்பின் மக்ராஜன்
அருமை அருமை - கவிதை அருமை - நட்பின் பல்வேறு நிலைகளை எண்ணி எழுதப்பட்ட கவிதை அருமை - நட்பே நட்பாக வேண்டும் - நான் நானாயிருப்பதற்கு. அருமை அருமை - வரிகள் அருமை.
நல்வாழ்த்துகள் மக்ராஜன்
நட்புஅன் சீனா
கருத்துரையிடுக