வியாழன், நவம்பர் 11, 2010

தலைவருக்கும் எனக்கும் உள்ள பந்தம் - பகுதி 2

ஒரு ரஜினி ரசிகனின் நினைவலைகள் - 2



"தளபதி" படம் வந்த சமயம் எட்டாம் வகுப்பு படித்து கொண்டு இருந்தேன்,முதன் முதலாக நோட்டீஸ் அடித்த நேரம்
அப்போது எல்லாம் இப்போ இருப்பது போல லித்தோ எல்லாம் பேமஸ் இல்லை,நூறு நோட்டீஸ்கே முப்பத்தைந்து ரூபாய் தான் எல்லாம் விதமான கலர்ரிலும் இருக்கும், இரவு முழுவது நானும் நண்பர் சுந்தர்ம் சேர்ந்து எல்லா இடத்திலும் ஒட்டி ஆயிற்று, வீடிந்தால் தீபாவளி, காலையிலே எட்டு மணிக்கே தியேட்டர் போனால் படம் இரண்டாவது ஆட்டம் போய் கொண்டு இருக்கு என்னவென்று கேட்டால் காலையிலே நாலு மணிக்கே படம் போட்டவிட்டர்கள் என்று பதில்,சரி எப்படியும் பார்த்து விட வேண்டுமென்று என்று உக்க்கர்ந்து இருந்தும் பயன் இல்லை,அன்று படம் பார்க்க முடியவில்லை.மறு நாள் பள்ளிக்கு வேறு செல்ல வேண்டும். பள்ளிக்கு மட்டம் போட எண்ண செய்யலாம் என்று தீவர யோசனைக்கு பின் கண்வழி (அப்போ கண் வழி சீசன்)என்று சொல்லிவிட்டு நான் வந்த்துடுறேன் நீயும் வந்துரு என்று சுந்தர்ரிடம் பேசிவிட்டு முடிவு பண்ணியாச்சு.பள்ளிக்கு சென்று வகுப்பு ஆசிரியர் திரு.சூசை மாணிக்கம் அவர்களிடம் போய் சார் கண்ணு வழி என்று அவரோ ஏல உண்மைசொல்லு படம் பார்க்கதானே போறே என்று கேட்டார், பின் எப்படி அவருக்கு தெரியாமல் இருக்கும் அவரோ பக்கா தலைவர் வெறியர்,
 ஆமா சார் நேற்று போனேன் டிக்கெட் கிடைக்கலை,அதான் என்று என்று சொல்ல சரி போயிட்டு வா என்று சொல்லிவிட்டார். பிறகு மெல்ல மெல்ல மாவட்ட தலைவர் பானுசேகர் அவர்களுடன் மற்றும் அண்ணன் தாயயப்பன் ஆகியோருடன் இணைந்து மாவட்ட மன்றத்திலே என்னை இணைத்து கொண்டேன். அதன் பின் வரிசையாக மன்ற பணி,ரத்ததான கழகம் என்று எங்கள் பணி தொடர்ந்து வருகிறது.





வாழ்வில் மறக்க முடியாத நாள் (ஏப்ரல் 18,2007 )

அப்போது சென்னையில் வேலை பார்த்து கொண்டு இருந்த சமயம் ஏப்ரல் 18,2007 காலையில் அண்ணன் பானுசேகர்ரிடம்,அண்ணன் தாயயப்பன்னிடம் இருந்து போன் தம்பி காலையில் நேராக மண்டபத்துக்கு போய் சக்தி சாரை பாரு அங்கே ஸ்டிக்கர் கொடுபங்க,வாங்கி கொரியர் அனுப்பிடு அப்படின்னு சொன்னாரு,நானும்,தம்பி சிவாவும் நேரே ராகவேந்திரா மண்டபத்துக்கு சென்று சக்தி சாரை பார்த்து பேசிகிட்டு இருந்தோம். அவரும் மன்ற பணிகள் எப்படி இருக்கு அப்படி கேட்டாரு,நல்ல இருக்கு சார் அப்படி பதில் சொல்லிக்கிட்டு இருக்கும் போது, அங்கே தலைவர் வந்துட்டாருன்னு நியூஸ்..


இன்னும் வரும்

என்றும் அன்புடன்

7 கருத்துகள்:

Chitra சொன்னது…

ரஜினி கூட போட்டோ அப்போதான் எடுத்தீங்களா? கொடுத்து வச்ச ஆளுப்பா, நீங்க!

S Maharajan சொன்னது…

nandri chitra akka

எல் கே சொன்னது…

தலைவர் கூட போட்டோ எடுத்து இருக்கீங்க.. அருமை நல்ல பகிர்வு நண்பா

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

ஆஹா.. இது உங்களுக்கே சரியா இருக்கா??

தலைவர் வரும் போது பாத்து தொடரும்.... போட்டீங்களே..??

ஓகே ஓகே.. வெயிட் பண்றேன்.. நினைவலைகள் தொடரட்டும்..!

மங்குனி அமைச்சர் சொன்னது…

வாழ்த்துக்கள்

S Maharajan சொன்னது…

Nandri Thiru L.k

Nandri Ananthi

Nandri மங்குனி அமைச்சர்

R.Gopi சொன்னது…

அட...அட...அடடா...

சத்திய பார்த்தாச்சு.... ஸ்டிக்கர் வாங்கியாச்சு... அங்கே பரபரபரபர....

அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்..... தலைவர் வந்தாச்சு.........

பட்டைய கெளப்புதே தொடர்.... அடுத்த பாகம் எப்போ?

கருத்துரையிடுக