திங்கள், நவம்பர் 15, 2010

தலைவருக்கும் எனக்கும் உள்ள பந்தம் - பகுதி 3

ஒரு ரஜினி ரசிகனின் நினைவலைகள்..............


தலைவர் வந்துட்டாருன்னு நியூஸ் வந்த உடனே நான் சக்தி சார் கிட்டே கேட்டேன் சார் இன்னைக்கு எப்படியாச்சும் தலைவர பார்த்துறலாம? அப்படின்னு உடனே அவரு இல்லப்பா ரெண்டு மூணு நாளா "சிவாஜி" விநியோகம் பத்தி பேசிகிட்டு இருகாங்க அதனால முடியாது
 அப்படின்னு சொல்ல உடனே நாங்க தூரத்துல இருந்தாச்சும் பார்த்துட்டு போறோமுன்னு சொல்ல அவரு டென்ஷன் ஆக, நான் உடனே சரி சார் நாங்க ஸ்டிக்கர் எடுத்துட்டு கிளம்புறோம்,அப்புறம் சக்தி சார் சொன்னாரு இன்னொரு நாளிக்கு ப்ரீயா இருப்பாரு அப்போ சொல்லி விடுறேன் வாங்க அப்படின்னு சொல்ல,நான் கிளம்பும் போது அங்கே நாகர்கோயில் மன்ற தலைவர் அமலன் அண்ணன் வந்தாரு,உடனே நான் அவர்கிட்டே அண்ணே தலைவர் இருக்காறு பாக்குறதுக்கு பெர்மீசன் கேளுங்க நாம இப்போ விட்ட திரும்ப வாய்ப்பு கிடைக்காதுன்னு அப்படின்னு சொல்லிட்டேன் .அவரும் சக்திசார் கிட்டே போய் சார்
ஏதாச்சும் வாய்ப்பு இருக்கா சார் அப்படின்னு கேட்டாரு, இரு நான் கேட்டு பாக்குறேன் அப்படின்னு சொல்லிட்டு போய்ட்டாரு ,ஒரு பத்து நிமிசத்துல வந்து சொன்னாரு  வெயிட் பண்ணுங்க அப்படி சொல்ல,எங்களுக்கு ஒரே சந்தோசம் நம்ம மூணு பேறு தான் இருக்கோம் எப்படி கொஞ்ச நேரம் பேசலாம் அப்படினு நினைத்து கிட்டே இருக்கும் போது கரூர் பகுதி மன்ற மக்கள் ஒரு பத்து பேர் வர எனக்கு ஒரே டென்ஷன் என்னடா இது கூட்டம் ஜாஸ்தி ஆன ரெண்டு நிமிஷம் கூட பேசமுடியாதே,அப்படின்னு டென்ஷன்,நான் ப்ரெண்ட்ஸ் சில பேர கூபிடலாமுனு போன் எடுக்குறேன் சக்தி சார் வந்தாரு,

நான் போன் பேசுவதை பார்த்துட்டு எப்பா நெல்லை தொல்லை கொடுக்க கூடாது. மொபைல் போனுல போட்டோ எடுகாதே, அவரா சொன்ன எடுத்துக்கோ அப்படின்னு சொல்லிடாரு ,சரி நாம்  பார்த்தா போதும் அப்படின்னு வெயிட் பண்ணுறோம், மேல ரூம்லில் இருந்து அழைப்பு வாங்க வந்து பார்க்கலாம் அப்படின்னு,மேல போய்  பார்த்தா எளிமையின் உருவாய், ஒரு பெரிய ஸ்டார் என்கின்ற பந்தா இல்லாமல் வந்த அனைவரையும் சிரித்த முகத்தோடு வரவேற்கிறார் என் தலைவர். திரையில் மட்டுமே பார்த்த அந்த உருவம் எங்கள் கண் எதிரே (ஒரு முறை படபிடிப்பு தளத்தில் பார்த்து இருக்கின்றேன்) அமைதியின் உருவாய் வரவேற்கிறார்.சக்தி இவங்க எல்லாம் சாப்பிட்டாச்சா? எந்த நடிகனும் தன் ரசிகனை பார்த்து கேட்காத கேள்வி (சற்று மிகை படுத்தி கூறுவதாக இருந்தாலும் இது தான் உண்மை). அப்புறம் சக்தி சார் அறிமுகபடுத்தி வைக்கிறார்,  இவங்க நெல்லை மாவட்டம் ரத்ததான கழகம் என்று எங்களை அறிமுகம் செய்யும் போது தலைவர் சொன்ன வார்த்தை "குட்". ஏதோ ஏதோ கேள்வி எல்லாம் கேட்க வேண்டும் என்று எண்ணி இருந்தோம் அவரை பார்த்த தருணம் ஒன்றுமே தோன்றவில்லை.சார் போட்டோ என்று ஒரு நண்பர் இழுக்க "SURE" என்றவாறு சக்தி  என்றார்.

அடுத்த நிமிடம் மண்டபத்துக்கு எதிரே உள்ள போட்டோகிராபர் அங்கே ஆஜர்,ஒவ்வருவரும் தனி தனியாக அவருடன் நின்று போட்டோ எடுத்து கொண்டோம்.


அந்த தருணத்தை வார்த்தைகளால் சொல்ல இயலாது.எல்லாம் முடிந்து தலைவர் செல்லும் வரை நாங்களும் இருந்து விட்டு பிறகு சக்தி சார்ருக்கு நன்றி தெரிவித்து கொண்டு வந்தோம்.

போட்டோ கடையில் வெயிட் செய்த தருணம்



இன்னும் வரும்

என்றும் அன்புடன்

8 கருத்துகள்:

விக்னேஷ்வரி சொன்னது…

:)

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

பிக்சர் ரொம்ப நல்லா இருக்குங்க.. உங்க அனுபவ பகிர்வுக்கு நன்றி.. :-)

kicha சொன்னது…

Neenga Lucky!

siva சொன்னது…

fanastic...

S Maharajan சொன்னது…

Nandri விக்னேஷ்வர
Nandri Ananthi
Nandri kicha
Nandri sivagnanam

அன்புடன் மலிக்கா சொன்னது…

வாழ்த்துக்கள் மகராஜன்.

அதுசரி தற்போதுதான் திருமண அழைப்பிதழ் பார்த்தேன் அதற்குள் காணோம்..

வாழ்க பல்லாண்டு வளங்கள் அனைத்தும்பெற்று மனநிறைவோடு..

12 12-2010 அன்றுதான் என் மகளின் பிறந்தநாளும்..

S Maharajan சொன்னது…

Nandri அன்புடன் மலிக்கா
உங்கள் மகளுக்கு என் அட்வான்ஸ் வாழ்த்துகளை சொல்லி விடுங்கள்

R.Gopi சொன்னது…

எப்போதும், பெரியவர்கள் சிறியவர்களை பார்த்து எல்லா குடும்பங்களிலும் சொல்லும் வார்த்தை, இங்கே உங்களுக்கு ரொம்ப பொருந்துகிறது...

கொடுத்து வைத்த மகராஜன் நீங்கள்....

தலைவரோட ஃபோட்டோ எடுத்ததை தான் சொன்னேன்..

கருத்துரையிடுக