செவ்வாய், ஜூலை 12, 2011

தலைவா வருக! வருக!

.வாழ்க்கையை வெளிப்படையாக வாழ்ந்து பழகிய வள்ளலே வருக

.இறைவன் அருளால் நோயை வென்று தாயகம்
திரும்பும் அன்புதலைவா வருக வருக..

.தன்னடக்கத்தின் தலைமகனே வருக வருக..

.உடல் நலம் குன்றிப் போய் நா தழு தழுத்து பேசும் வேளையிலும் கூட நான் காசு வாங்கிக் கொண்டுதான் நடிக்கிறேன் என்னை ஏன் இவ்வளவு சீராட்டுகிறீர்கள் என்று மனசாட்சிப்படி பேசிய மனித தெய்வமே வருக வருக.


இந்திய சினிமாவின் முடிசூடா மன்னனாகத் திகழ்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினி. இந்தியாவைத் தாண்டி உலகம் எங்கும் அவருக்கு ரசிகர்கள் பல கோடி. ஆசிய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் அவர்தான் வரும் புதன்கிழமை இரவு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார். இரு மாதங்களுக்கு முன் ராணா படத்தின் துவக்க விழாவன்றுதான் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. மூச்சுத் திணறல், செரிமானக் கோளாறு என்று ஆரம்பித்தது பிரச்சனை. அவருக்கு
சிறுநீரகக் கோளாறும், நுரையீரலில் நீர்க்கோர்ப்பும் இருப்பது தெரிய வந்தது. நுரையீரலில் இருந்த நீரை வெளியேற்றினர்.
சென்னையில் மட்டும் தொடர்ந்து 5 முறை டயாலிஸிஸ் செய்யப்பட்ட பிறகு, அவர் ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பினார். ஆனாலும், அவரது சிறுநீரகங்கள் இயங்கவில்லை.எனவே சிங்கப்பூரில் உள்ள மவுன்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  அங்கு படிப்படியாக அவரது உடல்நிலை சீரடையத் தொடங்கியது.சிங்கப்பூர் மருத்துவமனையில் ரஜினி பூரண நலமடைந்தார், கடந்த ஜூன் 14ம் தேதியே அவர் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார். ஆனாலும் தொடர்ந்து அவரது உடல்நிலையைக் கண்காணிக்க, சிங்கப்பூர் மருத்துவமனைக்கு அருகாமையில் உள்ள குடியிருப்பில் வாடகை வீட்டில் ஒரு மாத காலம் தங்கி மருத்துவ ஆலோசனை பெற்றார். பூரண ஓய்வெடுத்து வந்தார்

சில தினங்களுக்கு முன் அவரை சோதித்த மருத்துவர்கள், இனி அவர் சென்னை திரும்பலாம். படங்களில் முன்புபோல நடிக்கலாம் என்று கூறினர்.இதனை தொடர்ந்து அவர் நாளை சென்னை வருகிறார்.....


என்றும் அன்புடன்

6 கருத்துகள்:

RAMA RAVI (RAMVI) சொன்னது…

தலைவரை அழகான கவிதையில் வரவேற்று இருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.. சிறந்த நடிகர் என்பதைவிட ஒரு நல்ல மனிதன் என்பதால் எனக்கு அவரை பிடிக்கும்...

S Maharajan சொன்னது…

முதல் வருகைக்கும் முத்தான கருத்துக்கும்
நன்றி தோழி....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

நலமுடன் திரும்புவார்

S Maharajan சொன்னது…

நன்றி தோழி....

R.Gopi சொன்னது…

சிங்கம் நலமுடன் திரும்பி விட்டது...

தலைவர் புதுப்பொலிவுடன் மீண்டும் திரையில் தோன்றி அதகளப்படுத்தும் நாளை உங்களுடன் இணைந்து நானும் எதிர் நோக்கியுள்ளேன்...

S Maharajan சொன்னது…

நன்றி R.Gopi

கருத்துரையிடுக