திங்கள், பிப்ரவரி 21, 2011

மறைந்தும் மறையாத மலேசியா வாசுதேவன்.

                                                    
மலேசியா வாசுதேவன்.தமிழ் சினிமா உலகின் அருமையான குரலுக்கு சொந்தக்காரர் எவ்வளவு கடினமாக பாடலையும் அழகாகப் பாடி அசத்திய திறமைசாலி.  இசைஞானி இளையராஜாதான் மலேசியா வாசுதேவனுக்கு மிகப் பெரிய வாய்ப்பை வழங்கினார், பின்னாளில் நடிகர் திலகம் சிவாஜிக்கும்,தலைவர் ரஜினிக்கு அற்புதமாக பொருந்தி போனது இவரது குரல். எங்கள் ஊருக்கு அருகில் உள்ள வள்ளியூர் என்ற இடத்தில் உள்ள பன்னிருஅடி அம்மன் கோவில் கொடை விழாவிற்கு வந்த போது
இவரை நேரில் பார்க்கும் வாய்பு எனக்கு கிட்டியது,அவர் பாடிய பாடல்களில் சில உங்கள் பார்வைக்கு.

ராஜரிஷி.


இந்த பாடலை படத்தில் நாம் பார்க்கும் போது படத்தில்
உள்ள சிவன் வேடத்தில் உள்ளவர் சற்று உடலை சிலிர்ப்பது
போலபடமாக்கி இருப்பார்கள். பாடலை கேட்டால் நமக்கும் நிச்சயம் உடல்சிலிர்க்கும்.அந்த சங்கரனை வேண்டி பாடும் பாடல்..




மாவீரன்

தலைவர் ரஜினி அவர்கள் கட்சி ஆரமித்தால் இந்த
பாடல்தான் நம் கட்சியின் முதல் மாநாடுக்கு ஏற்ற பாடல்
என்று பலமுறை ரசிக மன்ற நண்பர்களோடு நாங்கள் பேசி கொள்வதுஉண்டு. எனக்கு மிகவும் பிடித்த சூப்பர்ஸ்டார்ன் 
புரட்சிகரமான பாடல்.




சின்ன வீடு

மனைவியின் அன்பால் தன் தவறை உணர்ந்த ஒரு கணவனின் குரலாக "'சுனந்தாவுடன்" மலேசியா வாசுதேவன் பாடும் வெள்ளை மனம் உள்ள மச்சான்..



ரஜினி அஞ்சலி…

மலேசியா வாசுதேவன் உடலுக்கு இன்று (21-02-11)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொன்னார்.


நீங்கள் மறைந்தாலும் நீங்கள் பாடிய பாடல்கள் என்றும்
உங்களை நினைவுபடுத்தி கொண்டே இருக்கும் .


என்றும் அன்புடன்

13 கருத்துகள்:

எல் கே சொன்னது…

எனது அஞ்சலிகள்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

மலேசியா வாசுதேவன் அவர்களுக்கு நமது அஞ்சலிகளும்.
"அவர் மறைந்தும் மறையாது
அவரின் இனிய குரலில் ஒலிக்கும்
அருமையான பாடல்கள்"

Chitra சொன்னது…

அவரது பாடல்களில்: "அள்ளித் தந்த வானம் - அன்னை அல்லவா!" மற்றும், "கோடை கால காற்றே...." "ஒரு தங்க ரதத்தில்....." " பூங்காற்று திரும்புமா?" என்று எனக்கு பிடித்த பாடல்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகும்...



May his soul rest in peace.

S Maharajan சொன்னது…

@நன்றி எல்.கே
@நன்றி தோழி பிரஷா
@நன்றி சித்ரா அக்கா

ம.தி.சுதா சொன்னது…

அவர் போனதிலிருந்த ஒரே ஒரு பாடலைத் தான் அடிக்கடி கேட்கிறேன் “தங்கரதத்தில் மஞ்சள் நிலவு ”...

ம.தி.சுதா சொன்னது…

நேரமிருந்தால் நம்ம ஓடைக்கும் குளிக்க வாங்க..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தமிழுக்காக ஒரு தமிழனால் முடிந்த உதவி (இலகு தட்டச்சு உதவி)

S Maharajan சொன்னது…

@ம.தி.சுதா
நன்றி ம.தி.சுதா

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) சொன்னது…

அவரது ஆத்மா சாந்தியடைய இறைவன் அருளட்டும்..

S Maharajan சொன்னது…

@Ananthi
நன்றி அன்புடன் ஆனந்தி

Sriakila சொன்னது…

அவர் பாடிய பாடல்கள் எத்தனை எத்தனை? மென்மையானக் குரலுக்கும், கிண்டலானக் குரலுக்கும் சொந்தக்காரர். அவர் பாடிய பாடல்கள் என்றும் மறையாதவை.

அவர் ஆத்மா சாந்தியடையட்டும்!

S Maharajan சொன்னது…

@Sriakila

நன்றி Sriakila

பெயரில்லா சொன்னது…

உண்மையிலேயே...
ஒரு ஏக்கம்...
ஒரு தாக்கம் இருக்கத்தான் செய்கிறது.

S Maharajan சொன்னது…

நன்றி புலி

கருத்துரையிடுக