ஞாயிறு, பிப்ரவரி 13, 2011

வாழ்க்கை சிறப்பாக அமைய

படித்ததில் பிடித்தது..........

ஒரு நிகழ்ச்சியில் வேதாத்திரி மகிரிஷி பேசிக் கொண்டிருந்தார்.
அதாவது இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய விட்டுக் கொடுப்பது, அனுசரித்துப் போவது, பொறுத்துப் போவது ஆகிய மூன்று பண்புகளை பின்பற்ற வேண்டும் என்றார்.

அப்போது ஒரு பெண் எழுந்து, விட்டுக் கொடுப்பது என்று பொதுவாக சொல்கிறீர்கள். யார் விட்டுக் கொடுப்பது? கணவனா? மனைவியா? பிரச்சினை அங்குதானே ஆரம்பிக்கிறது.. என்று கேட்டார்.

அதற்கு வேதாத்திரி மகிரிஷி பதிலளிக்கையில், யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ, யார் அறிவாளியோ அவர்கள்தான் முதலில் விட்டுக்கொடுப்பார்கள். அவர்கள்தான் அனுசரித்துச் செல்வார்கள். அவர்கள்தான் பொறுத்துப் போவார்கள் என்றார்.




வாழ்க்கையைத் தேடு!

பறவைகள் பறப்பது விடியலைத் தேடி
பறவையாய்ப் பறந்திடு வாழ்க்கையைத் தேடி
சிறகுகள் முளைப்பது பறந்திடத் தானே
சிறகினை வளர்த்திடு விண்ணிலே பறந்திடு

யாரும் சொல்லாத வார்த்தைகள் தேடு
யாரும் செல்லாத வழியினை நாடு
நேரம் தவறாமல் உழைத்திடப் பழகு
பாரம் இல்லாத வாழ்க்கையே உனது

சிலையாய் இருந்தால் அழகாய் இருப்பாய்
சிற்பியா யிருந்தால் சிலையை வடிப்பாய்
சிலையா யிருந்து ஜொலிப்பதைக் காட்டிலும்
சிற்பியா யிருந்து சிலையினைப் படைத்திடு

கனவுகள் என்பது துக்கத்தில் இல்லை
கனவுகள் இருப்பின் தூக்கமும் தொல்லை
கனவுகள் கண்டிடு தூக்கத்தை வென்றிடு
கனவுகள் தானே வாழ்க்கையின் பூஞ்செடி

ஜனனமும் மரணமும் நொடியினில் நிகழ்ந்திடும்
ரணங்களும் பிணங்களும் கடைசியில் அடங்கிடும்
தயக்கமும் மயக்கமும் தினம்தினம் வந்திடும்
எழுச்சியும் மலர்ச்சியும் வாழ்க்கையைத் தந்திடும்

- காகிதன்




5 கருத்துகள்:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

நண்பா மன்னிக்கணும்! அவசரமாக செல்வதால் வாக்குகள் மட்டும் போட்டுவிட்டு கிளம்புகிறேன்! ( ஆமாங்க இது டெம்ப்ளேட் கமெண்டுதான்! ஒத்துக்கறேன் - இன்னிக்கு மட்டும் மன்னிச்சிடுங்க )

S Maharajan சொன்னது…

@மாத்தி யோசி

நன்றி நண்பா

அன்புடன் மலிக்கா சொன்னது…

//ஜனனமும் மரணமும் நொடியினில் நிகழ்ந்திடும்
ரணங்களும் பிணங்களும் கடைசியில் அடங்கிடும்
தயக்கமும் மயக்கமும் தினம்தினம் வந்திடும்
எழுச்சியும் மலர்ச்சியும் வாழ்க்கையைத் தந்திடும்//


உண்மையான உண்மை. அருமையான வரிகள் மகா..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

ஜனனமும் மரணமும் நொடியினில் நிகழ்ந்திடும்
ரணங்களும் பிணங்களும் கடைசியில் அடங்கிடும்
தயக்கமும் மயக்கமும் தினம்தினம் வந்திடும்
எழுச்சியும் மலர்ச்சியும் வாழ்க்கையைத் தந்திடும்

அருமை.... ரசித்து படித்தேன்...

S Maharajan சொன்னது…

@அன்புடன் மலிக்கா//
நன்றி அன்புடன் மலிக்கா

@தோழி பிரஷா//
நன்றி தோழி பிரஷா

@Gayathri//
நன்றி Gayathri

கருத்துரையிடுக