திங்கள், நவம்பர் 29, 2010

தாய்நாடு பயணம்........

நண்பர்களே! வணக்கம்!

எனது திருமணம் வருகின்ற டிசம்பர் மாதம் (12-12-10)
நான் நாளை ஊருக்கு போகின்றேன்,ஒரு மாத காலம் வலையுலகிற்கு என்னால் வர இயலாது

(நேரம் கிடைத்தால் வந்து பார்க்கின்றேன்).

உங்கள் அனைவரையும் அன்புடன் அழைகின்றேன்

நாள் : 12-12-2010

இடம்: ஸ்ரீ லக்ஷ்மி மஹால்

K.T.C நகர்,

V.M சத்திரம்.

பாளையம்கோட்டை 

திருநெல்வேலி.

தொடர்புக்கு : செல் : 91 98406 29565

திரும்ப உங்கள் அனைவரயும் ஜனவரி  06-01-2011 திகதி சந்திகின்றேன்.உங்கள் அனைவர்க்கும் எனது
இனிய கிறிஸ்துமஸ் & புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

ஒரு புதிய உறவினை என்னுடைய திருமணத்தின் மூலம், என் வாழ்வின் சரிப்பாதியை என்னவளுடன் இணைத்துக்கொள்ளும் இந்த அற்புதமான நேரத்திற்கு உங்கள் அனைவரின் வாழ்த்துகளையும்,வரவையும் எதிர் நோக்கி.....

உங்கள் வாழ்த்துகளோடு..................


என்றும் அன்புடன்

திங்கள், நவம்பர் 22, 2010

தலைவருக்கும் எனக்கும் உள்ள பந்தம்-பகுதி 4 + என் திருமணம்

ஒரு ரஜினி ரசிகனின் நினைவலைகள்..............           

போட்டோ கடையில் போய் நின்னா அவரு அப்போ தான் பிகு பண்ணுறாரு,சரிப்பா நீங்க போட்டோ நாளைக்கு வந்து வாங்கி கொள்ளுங்கள் அப்படின்னு சொல்ல ஒரே களேபரம்! என்னது நாளைக்கா,அண்ணே இப்போவே வேணும்,அப்படின்னு ஒரே சண்டை,சரி ஒரு மணி நேரம் கழிச்சு வாங்க அப்படின்னு சொல்ல இல்லை நாங்க வெயிட் பண்ணுறோம் நீ கொடு அப்படின்னு சொல்லியாச்சு,இதுக்கு இடையில் தலைவருடன் போட்டோ எடுத்ததை உள்ளூர் வெளியூர் அப்படின்னு ப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் போன் பண்ணி அன்னைக்கு இருந்த காசை எல்லாம் போனுகே செலவு பண்ணியாச்சு, அண்ணே எப்படியும் இன்னைக்கு பார்ட்டி கொண்டனுமுனு தம்பி சிவா சொல்ல,கடன வாங்கி நைட் பார்ட்டி வேறே.

என் திருமணம்

ஒவ்வரு மனிதனுக்கும் வாழ்வின் திருப்பு முனையான தருணம் அவனது திருமணம். அதருக்கு உண்டான ஏற்பாடு வீட்டில் எனக்கும் நடக்க,பெண் பார்த்து என் பெற்றோர்கள் முடிவு செய்ய நாளும் குறிச்சாச்சு.அந்த நாள் DEC 12,2010  ஆமா நான் நேசித்து கொண்டு இருக்கும் என் தலைவனின் பிறந்த நாள் என் திருமணநாளாக என் பெற்றோர்களாலும் ,இறைவனாலும் முடிவு செய்யபட்டது. ஒரு ரசிகனாக என் பந்தம் தலைவர் ரஜினியுடன் தொடருகிறது இனியும் தொடரும்!
































இத்துடன் என் திருமண அழைப்பிதழும் இணைத்து உள்ளேன். வலையுலக நண்பர்கள் அனைவர்க்கும் நேரில் வந்து கொடுக்கவேண்டும் என்று தான் ஆசை.ஆனால் அதற்கான சாத்தியம் இல்லாதது வருத்தமே! இதையே என்நேர்முக அழைப்பாக ஏற்று எங்களை வாழ்த்துமாறு வேண்டி கொள்கிறேன்.


என்றும் அன்புடன்

திங்கள், நவம்பர் 15, 2010

தலைவருக்கும் எனக்கும் உள்ள பந்தம் - பகுதி 3

ஒரு ரஜினி ரசிகனின் நினைவலைகள்..............


தலைவர் வந்துட்டாருன்னு நியூஸ் வந்த உடனே நான் சக்தி சார் கிட்டே கேட்டேன் சார் இன்னைக்கு எப்படியாச்சும் தலைவர பார்த்துறலாம? அப்படின்னு உடனே அவரு இல்லப்பா ரெண்டு மூணு நாளா "சிவாஜி" விநியோகம் பத்தி பேசிகிட்டு இருகாங்க அதனால முடியாது
 அப்படின்னு சொல்ல உடனே நாங்க தூரத்துல இருந்தாச்சும் பார்த்துட்டு போறோமுன்னு சொல்ல அவரு டென்ஷன் ஆக, நான் உடனே சரி சார் நாங்க ஸ்டிக்கர் எடுத்துட்டு கிளம்புறோம்,அப்புறம் சக்தி சார் சொன்னாரு இன்னொரு நாளிக்கு ப்ரீயா இருப்பாரு அப்போ சொல்லி விடுறேன் வாங்க அப்படின்னு சொல்ல,நான் கிளம்பும் போது அங்கே நாகர்கோயில் மன்ற தலைவர் அமலன் அண்ணன் வந்தாரு,உடனே நான் அவர்கிட்டே அண்ணே தலைவர் இருக்காறு பாக்குறதுக்கு பெர்மீசன் கேளுங்க நாம இப்போ விட்ட திரும்ப வாய்ப்பு கிடைக்காதுன்னு அப்படின்னு சொல்லிட்டேன் .அவரும் சக்திசார் கிட்டே போய் சார்
ஏதாச்சும் வாய்ப்பு இருக்கா சார் அப்படின்னு கேட்டாரு, இரு நான் கேட்டு பாக்குறேன் அப்படின்னு சொல்லிட்டு போய்ட்டாரு ,ஒரு பத்து நிமிசத்துல வந்து சொன்னாரு  வெயிட் பண்ணுங்க அப்படி சொல்ல,எங்களுக்கு ஒரே சந்தோசம் நம்ம மூணு பேறு தான் இருக்கோம் எப்படி கொஞ்ச நேரம் பேசலாம் அப்படினு நினைத்து கிட்டே இருக்கும் போது கரூர் பகுதி மன்ற மக்கள் ஒரு பத்து பேர் வர எனக்கு ஒரே டென்ஷன் என்னடா இது கூட்டம் ஜாஸ்தி ஆன ரெண்டு நிமிஷம் கூட பேசமுடியாதே,அப்படின்னு டென்ஷன்,நான் ப்ரெண்ட்ஸ் சில பேர கூபிடலாமுனு போன் எடுக்குறேன் சக்தி சார் வந்தாரு,

நான் போன் பேசுவதை பார்த்துட்டு எப்பா நெல்லை தொல்லை கொடுக்க கூடாது. மொபைல் போனுல போட்டோ எடுகாதே, அவரா சொன்ன எடுத்துக்கோ அப்படின்னு சொல்லிடாரு ,சரி நாம்  பார்த்தா போதும் அப்படின்னு வெயிட் பண்ணுறோம், மேல ரூம்லில் இருந்து அழைப்பு வாங்க வந்து பார்க்கலாம் அப்படின்னு,மேல போய்  பார்த்தா எளிமையின் உருவாய், ஒரு பெரிய ஸ்டார் என்கின்ற பந்தா இல்லாமல் வந்த அனைவரையும் சிரித்த முகத்தோடு வரவேற்கிறார் என் தலைவர். திரையில் மட்டுமே பார்த்த அந்த உருவம் எங்கள் கண் எதிரே (ஒரு முறை படபிடிப்பு தளத்தில் பார்த்து இருக்கின்றேன்) அமைதியின் உருவாய் வரவேற்கிறார்.சக்தி இவங்க எல்லாம் சாப்பிட்டாச்சா? எந்த நடிகனும் தன் ரசிகனை பார்த்து கேட்காத கேள்வி (சற்று மிகை படுத்தி கூறுவதாக இருந்தாலும் இது தான் உண்மை). அப்புறம் சக்தி சார் அறிமுகபடுத்தி வைக்கிறார்,  இவங்க நெல்லை மாவட்டம் ரத்ததான கழகம் என்று எங்களை அறிமுகம் செய்யும் போது தலைவர் சொன்ன வார்த்தை "குட்". ஏதோ ஏதோ கேள்வி எல்லாம் கேட்க வேண்டும் என்று எண்ணி இருந்தோம் அவரை பார்த்த தருணம் ஒன்றுமே தோன்றவில்லை.சார் போட்டோ என்று ஒரு நண்பர் இழுக்க "SURE" என்றவாறு சக்தி  என்றார்.

அடுத்த நிமிடம் மண்டபத்துக்கு எதிரே உள்ள போட்டோகிராபர் அங்கே ஆஜர்,ஒவ்வருவரும் தனி தனியாக அவருடன் நின்று போட்டோ எடுத்து கொண்டோம்.


அந்த தருணத்தை வார்த்தைகளால் சொல்ல இயலாது.எல்லாம் முடிந்து தலைவர் செல்லும் வரை நாங்களும் இருந்து விட்டு பிறகு சக்தி சார்ருக்கு நன்றி தெரிவித்து கொண்டு வந்தோம்.

போட்டோ கடையில் வெயிட் செய்த தருணம்



இன்னும் வரும்

என்றும் அன்புடன்

வியாழன், நவம்பர் 11, 2010

தலைவருக்கும் எனக்கும் உள்ள பந்தம் - பகுதி 2

ஒரு ரஜினி ரசிகனின் நினைவலைகள் - 2



"தளபதி" படம் வந்த சமயம் எட்டாம் வகுப்பு படித்து கொண்டு இருந்தேன்,முதன் முதலாக நோட்டீஸ் அடித்த நேரம்
அப்போது எல்லாம் இப்போ இருப்பது போல லித்தோ எல்லாம் பேமஸ் இல்லை,நூறு நோட்டீஸ்கே முப்பத்தைந்து ரூபாய் தான் எல்லாம் விதமான கலர்ரிலும் இருக்கும், இரவு முழுவது நானும் நண்பர் சுந்தர்ம் சேர்ந்து எல்லா இடத்திலும் ஒட்டி ஆயிற்று, வீடிந்தால் தீபாவளி, காலையிலே எட்டு மணிக்கே தியேட்டர் போனால் படம் இரண்டாவது ஆட்டம் போய் கொண்டு இருக்கு என்னவென்று கேட்டால் காலையிலே நாலு மணிக்கே படம் போட்டவிட்டர்கள் என்று பதில்,சரி எப்படியும் பார்த்து விட வேண்டுமென்று என்று உக்க்கர்ந்து இருந்தும் பயன் இல்லை,அன்று படம் பார்க்க முடியவில்லை.மறு நாள் பள்ளிக்கு வேறு செல்ல வேண்டும். பள்ளிக்கு மட்டம் போட எண்ண செய்யலாம் என்று தீவர யோசனைக்கு பின் கண்வழி (அப்போ கண் வழி சீசன்)என்று சொல்லிவிட்டு நான் வந்த்துடுறேன் நீயும் வந்துரு என்று சுந்தர்ரிடம் பேசிவிட்டு முடிவு பண்ணியாச்சு.பள்ளிக்கு சென்று வகுப்பு ஆசிரியர் திரு.சூசை மாணிக்கம் அவர்களிடம் போய் சார் கண்ணு வழி என்று அவரோ ஏல உண்மைசொல்லு படம் பார்க்கதானே போறே என்று கேட்டார், பின் எப்படி அவருக்கு தெரியாமல் இருக்கும் அவரோ பக்கா தலைவர் வெறியர்,
 ஆமா சார் நேற்று போனேன் டிக்கெட் கிடைக்கலை,அதான் என்று என்று சொல்ல சரி போயிட்டு வா என்று சொல்லிவிட்டார். பிறகு மெல்ல மெல்ல மாவட்ட தலைவர் பானுசேகர் அவர்களுடன் மற்றும் அண்ணன் தாயயப்பன் ஆகியோருடன் இணைந்து மாவட்ட மன்றத்திலே என்னை இணைத்து கொண்டேன். அதன் பின் வரிசையாக மன்ற பணி,ரத்ததான கழகம் என்று எங்கள் பணி தொடர்ந்து வருகிறது.





வாழ்வில் மறக்க முடியாத நாள் (ஏப்ரல் 18,2007 )

அப்போது சென்னையில் வேலை பார்த்து கொண்டு இருந்த சமயம் ஏப்ரல் 18,2007 காலையில் அண்ணன் பானுசேகர்ரிடம்,அண்ணன் தாயயப்பன்னிடம் இருந்து போன் தம்பி காலையில் நேராக மண்டபத்துக்கு போய் சக்தி சாரை பாரு அங்கே ஸ்டிக்கர் கொடுபங்க,வாங்கி கொரியர் அனுப்பிடு அப்படின்னு சொன்னாரு,நானும்,தம்பி சிவாவும் நேரே ராகவேந்திரா மண்டபத்துக்கு சென்று சக்தி சாரை பார்த்து பேசிகிட்டு இருந்தோம். அவரும் மன்ற பணிகள் எப்படி இருக்கு அப்படி கேட்டாரு,நல்ல இருக்கு சார் அப்படி பதில் சொல்லிக்கிட்டு இருக்கும் போது, அங்கே தலைவர் வந்துட்டாருன்னு நியூஸ்..


இன்னும் வரும்

என்றும் அன்புடன்

ஞாயிறு, நவம்பர் 07, 2010

தலைவருக்கும் எனக்கும் உள்ள பந்தம்

ஒரு ரஜினி ரசிகனின் நினைவலைகள்..............





ரஜினி இந்த ஒரு மந்திர சொல் கட்டி போட்டு இருக்கும் இதயங்கள் தான் எத்தனை!எத்தனை! ரஜினி என்ற உணர்வு அதை வார்த்தைகளால் சொல்ல இயலாது! 1985 வருடம் முதல் இன்று வரை அவருடன் எனக்கான ரசிகன் பந்தம் பற்றி தான் இந்த நினைவலைகள்


எப்போது ரசிகன் ஆனேன்!


1985 படிக்காதவன் படம் வெளியான வருடம்,எங்கள் பாளையம்கோட்டை அசோக் தியட்டரில் என் அண்ணன் முலமாக நான் பார்த்த முதல் ரஜினி படம்,சினிமாவை பற்றி அதிகம் நான் அறியாத வயதிலேயே என்னை ஈர்த்த என் தலைவன்! அதன் பின் அவருடைய படம் பேப்பர்லில் வந்தால் அதை வெட்டி வைத்து கொள்ளும் பழக்கம்,அதிசிய பிறவி படத்திற்கு காசு இல்லாமல் வீட்டில் இருந்து எடுத்துபோக அப்போது அப்பா அடித்த வலியை விட தலைவர் படத்தில் அடித்த காமெடி இனித்தது. மெல்ல மெல்ல என்னை ஆக்கிரமித்தார் ரஜினி என்கின்ற அந்த வசீகரன்.



இன்னும் வரும்............


என்றும் அன்புடன்