புதன், செப்டம்பர் 22, 2010

நான் எந்திரன் பார்பேன்

எந்திரன்

இது நாள் வரை பதிவுலக நண்பர்கள் பலர் "தலைவர் ரஜினியை"விமர்சித்தி எழுதிய எந்த பதிவுக்கும் நான் கோவமாக பின்னுட்டம் கூட இட்டது கிடையாது. நேற்று நண்பர் ஒருவர் பதிவை பார்த்த போது அதில் எந்திரன் படத்துக்கு கேவலமாக வாழ்த்து தெரிவித்து இருந்த ஒருவருக்கு காட்டமாக பதில் சொல்லி இருந்தார்.வாழ்த்து சொன்ன அந்த நபர் தன் "பக்கங்களில்" எவ்வாறு குறிப்பிட்டு இருந்தார் என்றால் "சீக்கிரம் அந்த ’சனியன்’ வந்து தொலையட்டும் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்ளலாம்." அதன் பின் அவர் பக்கங்களில் (பதிவுகளில்௦௦௦) சென்று நான் படித்த போது தான் தெரிந்தது அவரருடைய கேவலமான பேச்சு (பதிவு) எப்படி இருந்தது என்று.

150 கோடியில் சன் நிறுவனம் படம் தயாரிப்பது குற்றமாம்?

அதில் ரஜினி நடிப்பது மாபெரும் குற்றமாம்?

வளரும் படைபாளிகளை எந்திரன் நசுக்கி விடுமாம்.



எந்திரன் என்ன ரஜினி நடிக்க இயலாத படமா? என்னவோ தமிழ்நாட்டை சன்டிவியும்,ரஜினியும் சேர்ந்து கொள்ளை அடிப்பதாக இவர்களின் புலம்பல்கள். இவர்களுக்கு ரஜினி என்றால் ஏன் பிடிக்கவில்லை என்று தெரியவில்லை எவ்வளவு தரம் தாழ்த்தி முடியுமோ அவ்வளவு பேசவும் ஏசவும் செய்து விட்டு,ஹைலைட்டாக காமெடி வேறே செய்வர்கள் முன்பு இவர்கள் எல்லாருமே ரஜினி ரசிகர்களாம்.ஆனால் இப்போது தான் இவர்களுக்கு ரஜினியை பிடிக்காதாம்.



அவர் முன்பு இருப்பது போல இருந்தால் இன்று அவரை பற்றி இவ்வளவு பேசவும்,எழுதவும் முடியுமா? பல வருடங்களுக்கு முன்பு ஒரு முறை கமல் ஏதோ சொல்லி விட்டார் என்று அவரை அடிக்க பாய்ந்தவர் ரஜினி என்று இங்கே எத்தனை பேருக்கு தெரியும்?  அதன் பின் தன் தவறை உணர்ந்து இன்று வரை கமலிடம் நட்பு பாராட்டி வருகிறார்,பிறகு பிரபலம் கொடுத்த அதிகாரத்தை அவர் தனது எதி‌‌ரிகளின் மீது ஒருபோதும் பிரயோகித்தது இல்லை. இருபத்தைந்து வருடங்களா தன்னை நம்பி பணம் போட்ட தயாரிபாளர்களை அவர் என்றுமே ஏமாற்றவில்லை.தமிழ் சினிமாவை உலக வர்த்தகத்துக்கு கொண்டு சென்ற ஒரே நடிகர் ரஜினி மட்டுமே!  சிவாஜி,எம்ஜிஆரை விடக்கூட ரஜினி ஒரு படி மேலேதான் நிற்கிறார்.அவரை விமர்சிபவர்களை கேலவமாக என்னாலும் எழுதமுடியும் ஆனால் நான் அதை செய்ய விரும்பவில்லை

நான் ரஜினி வெறியன்

ஆரம்பத்தில் இருந்தே உண்மை ரஜினி ரசிகர்கள் இன்று வரை அவரது உண்மை ரசிகர்களே. அடிக்கடி நிறம் மாற நாங்கள் பச்சோந்திகள் அல்ல.! இவர்களுக்கெல்லாம் ஒன்று சொல்லுகிறோம்

ரஜினி தனி மனிதன் அல்ல....

நான் எந்திரன் னை 100 முறை பார்பேன்

இந்தத் பதிவு எழுதகாரணமாகஇருந்த "பாகீரதி" கார்த்திக்க்கு என் நன்றிகள்



என்றும் அன்புடன்
 

13 கருத்துகள்:

சசிகுமார் சொன்னது…

சாட்டியடி நண்பா, நான் கூட நினைத்தேன் ரஜினி என்ன தவறு செய்தார் ஏன் இப்படி எழுது கிறார்கள் என்று. சினிமா வரலாற்றிலேயே தன் சொந்த காசை தயாரிப்பவர்களுக்கு கொடுத்தவர் இவர் ஒருவர் மட்டுமே. இன்னும் கொஞ்சம் காட்டமாக எழுதி இருக்கலாம் நண்பா.

S Maharajan சொன்னது…

எழுதி இருக்கலாம் சசி அது நாகரிகமாக
இருக்காது என்பதால் விட்டுவிட்டேன்
தவறாமல் தரும் ஊக்கத்திற்கு நன்றி நண்பா

Chitra சொன்னது…

ரஜினி ரஜினி தான்..... இகழ்ந்தாலும், புகழ்ந்தாலும் ....ரஜினி ரஜினிதான். :-)

Dhinesh சொன்னது…

Thank you.

Intha mathiri alungalukkaka kavalai padathinga. Suriyanaip pathu nay kolaikka than seyyum. Athukkaka suriyan naayap pathu thirumba kolaikkalaamA?

S Maharajan சொன்னது…

//Chitra சொன்னது…
ரஜினி ரஜினி தான்..... இகழ்ந்தாலும், புகழ்ந்தாலும் ....ரஜினி ரஜினிதான். :-)//

உண்மை தான் சித்ரா அக்கா
4 comments:
சசிகுமார் சொன்னது…
சாட்டியடி நண்பா, நான் கூட நினைத்தேன் ரஜினி என்ன தவறு செய்தார் ஏன் இப்படி எழுது கிறார்கள் என்று. சினிமா வரலாற்றிலேயே தன் சொந்த காசை தயாரிப்பவர்களுக்கு கொடுத்தவர் இவர் ஒருவர் மட்டுமே. இன்னும் கொஞ்சம் காட்டமாக எழுதி இருக்கலாம் நண்பா.

22 செப்டெம்ப்ர், 2010 3:22 pm
S Maharajan சொன்னது…
எழுதி இருக்கலாம் சசி அது நாகரிகமாக
இருக்காது என்பதால் விட்டுவிட்டேன்
தவறாமல் தரும் ஊக்கத்திற்கு நன்றி நண்பா

22 செப்டெம்ப்ர், 2010 4:53 pm
Chitra சொன்னது…
ரஜினி ரஜினி தான்..... இகழ்ந்தாலும், புகழ்ந்தாலும் ....ரஜினி ரஜினிதான். :-)


//Dhinesh சொன்னது…
Thank you.

Intha mathiri alungalukkaka kavalai padathinga. Suriyanaip pathu nay kolaikka than seyyum. Athukkaka suriyan naayap pathu thirumba kolaikkalaamA?//

தங்கள் பகிர்வுக்கு நன்றி தினேஷ்

மங்குனி அமைச்சர் சொன்னது…

உள்ளேன் அய்யா

S Maharajan சொன்னது…

நன்றி மங்குனிஅமைசர் அய்யா

Umapathy சொன்னது…

//ஆரம்பத்தில் இருந்தே உண்மை ரஜினி ரசிகர்கள் இன்று வரை அவரது உண்மை ரசிகர்களே. அடிக்கடி நிறம் மாற நாங்கள் பச்சோந்திகள் அல்ல.!//

என்றும் சூப்பர் ஸ்டார் என் தலைவன்

ஸ்ரீ.... சொன்னது…

நண்பா,

நானும் 100 முறை பார்ப்பேன். நமக்குப் பிடிக்காத விஷயத்தை நாம் பார்க்க, கேட்க, படிக்க மாட்டோம். ஆனால், பிடிக்காது என்று எழுதியே பிழைப்பு நடத்தும் அறிவாளிகளை என்னவென்று சொல்வது? இன்றைக்கும் தலைவர் வலைப்பூ தொடங்கினால் குறைந்தது ஒரு லட்சம் Followers இருப்பார்கள், ஒரு வாரத்துக்குள்! அந்தப் பெருமையும், புகழும், பிரபலமும் கிடைக்க வாய்ப்பில்லாமல் ஏங்குபவர்கள் எந்திரன் பார்க்க மாட்டோம் என்கிறார்கள். தீக்குச்சிகளால் சூரியனை (சூப்பர்ஸ்டாரை) அழிக்க இயலாது. உங்கள் இடுகையை மிகவும் ரசித்தேன்.

ஸ்ரீ....

S Maharajan சொன்னது…

நன்றி உமாபதி

நன்றி ஸ்ரீ....

சகாதேவன் சொன்னது…

ரஜினிகாந்த் படத்தில் ஒரு உருப்படியான விஷயமும் இருக்காது. அந்த ஒண்ணும் இல்லாத படத்துக்கு இவ்வளுவு ஆர்ப்பாட்டமா? நீங்களே சொல்லுங்க , ஏன்தான் இப்படி எல்லாம் படம் எடுக்குறாங்களோ? இவங்க எல்லாம் ஹிந்தி படம் எல்லாம் பாக்கவே மாட்டாங்களா ? தமிழ் ல கூட நெறைய நல்ல படம் எல்லாம் வருது . ரஜினி க்கு இது எல்லாம் ஏன் தான் புரியவே மாட்டேன்குதோ? கொஞ்சம் மாத்தி நடிச்சாலும் இமேஜ் போயிரும் னு பயம் .. அதான் !
இப்படி குரைத்துக் கொண்டிருந்த சில கூட்டங்களுக்கு தலைவர் தூக்கி போட்டிருக்கும் எலும்பு துண்டு தான் எந்திரன்! தலைவர் தன் தனித்தன்மையை வெளிப்படுத்தாமலே அவரால் வெற்றியின் அடுத்த கட்டத்திற்கு போக முடியும் என்பதை உணர்த்தி விட்டார் !

தம்பி நாநா !

S Maharajan சொன்னது…

நன்றி நாநா

R.Gopi சொன்னது…

பேசுறவங்க எல்லாருக்கும் கொடுக்கணும்னா, நமக்கு கோடி காதுகள் இருந்தாலும் பத்தாது...

அனைத்து பொறாமை பிடித்த ஜென்மங்களையும் புறம் தள்ளுங்கள்....

நான் இது வரை 3 முறை பார்த்து விட்டேன்....

கருத்துரையிடுக