செவ்வாய், செப்டம்பர் 14, 2010

சிந்தனைகள்-2


நவ ரத்தினங்கள்

1.புத்தகத்தை வாங்கலாம் ஆனால் அறிவை வாங்க முடியாது!

2.உணவை வாங்கலாம் ஆனால் பசியை வாங்க முடியாது!

3.பகட்டை வாங்கலாம் ஆனால் பண்பாட்டை வாங்க முடியாது!

4.கட்டிலை வாங்கலாம் ஆனால் உறக்கத்தை வாங்க முடியாது!

5.கேளிக்கைகளில் கலந்து கொள்ளலாம் ஆனால் மகிழ்ச்சியை வாங்க  முடியாது!

6.ஆயுதங்களை வாங்கலாம் ஆனால் வீரத்தை வாங்க முடியாது!

7.ஊழியர்களை அமர்த்தலாம் ஆனால் சேவை மனப்பான்மையை வாங்க முடியாது!

8.அமைதியான இடம் வாங்கலாம் ஆனால் மன நிம்மதியை வாங்க முடியாது!

9.சிலையை வாங்கலாம் ஆனால் ரசிக்கும் திறனை வாங்க முடியாது!

உயரிய பத்து வெகுமதிகள்

1.மிக மிக நல்ல நாள்     : இன்று

2.மிக பெரிய வெகுமதி : மன்னிப்பு

3.உயர்வுக்கு வழி             : உழைப்பு

4.நழுவவிட கூடாதது   : வாய்ப்பு

5.விலக்கவேண்டியது   : விவாதம்

6.கொடிய நோய்              : பொறமை

7.மிக பெரிய தேவை    : சமயோசித புத்தி

8.செய்யவேண்டியது     : உதவி

9.தவிர்க்க வேண்டியது   : வெறுப்பு

10.நம்பகூடாதது                 : வதந்தி

வாழ்க்கை

வாழ்க்கை ஒரு விளையாட்டு  அதனை விளையாடுங்கள்

வாழ்க்கை ஒரு வினோதம்  அதனை கண்டறியுங்கள்

வாழ்க்கை ஒரு பாடல் அதனை பாடுங்கள்

வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம்  அதனை பயன்படுத்திகொள்ளுங்கள்

வாழ்க்கை ஒரு உறுதிமொழி  அதனை நிறைவேற்றுங்கள்

வாழ்க்கை ஒரு அன்பு  அதனை நேசியுங்கள்

வாழ்க்கை ஒரு அழகு   அதனை ஆராதியுங்கள்

வாழ்க்கை ஒரு இலக்கு   அதனை எட்டிபிடியுங்கள்

வாழ்க்கை ஒரு துயரம்   அதனை தாங்கிகொள்ளுங்கள்

வாழ்க்கை ஒரு உணர்வு    அதனை உணர்ந்துகொள்ளுங்கள்

வாழ்க்கை ஒரு போராட்டம் அதனை எதிர் கொள்ளுங்கள்

வாழ்க்கை ஒரு குழப்பம் அதற்கு விடை காணுங்கள்

வாழ்க்கை ஒரு ஞானம்  அதனை அறிந்து கொள்ளுங்கள்


அனுதின‌மும் ஆனந்தமாய் வாழ்ந்திட‌ வாழ்த்துக்க‌ளோடு!

12 கருத்துகள்:

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

அத்தனையும் அருமையான விசயங்கள்... ஒவ்வொருவருடைய வாழ்க்கைக்கும் தேவையான ஓன்று ...

S Maharajan சொன்னது…

nandri nanbare(வெறும்பய)

Kousalya Raj சொன்னது…

வாழ்க்கையை பற்றிய இலக்கணங்கள் மிக அருமை .

Chitra சொன்னது…

அசத்தல் பொன்மொழிகள்! தொகுப்பு நல்லா இருக்குது, மகா!

சௌந்தர் சொன்னது…

அமைதியான இடம் வாங்கலாம் ஆனால் மன நிம்மதியை வாங்க முடியாது!////

இது தான் டாப்பு

S Maharajan சொன்னது…

நன்றி சௌந்தர்
நன்றி கௌசல்யா
நன்றி சித்ரா அக்கா

சசிகுமார் சொன்னது…

என்ன நண்பா அலுவலில் ஆணி அதிகம் என் நினைக்கிறேன் அடிக்கடி பதிவு வருவதில்லையே இருந்தாலும் அனைத்தும் சூப்பர்

S Maharajan சொன்னது…

//சசிகுமார் சொன்னது…
என்ன நண்பா அலுவலில் ஆணி அதிகம் என் நினைக்கிறேன் அடிக்கடி பதிவு வருவதில்லையே இருந்தாலும் அனைத்தும் சூப்பர்//

ஆமாம் நண்பா நன்றி!

Pavi சொன்னது…

அமைதியான இடம் வாங்கலாம் ஆனால் மன நிம்மதியை வாங்க முடியாது
உண்மைதான்

S Maharajan சொன்னது…

நன்றி Pavi!

R.Gopi சொன்னது…

அட...

நல்ல பழமொழிகள் தொகுப்பா இருக்கே....

இன்னும் நிறைய இது மாதிரி எடுத்து போடுங்க....

S Maharajan சொன்னது…

நன்றி R.Gopi

கருத்துரையிடுக