புதன், ஜனவரி 19, 2011

பொன் மொழிகள்


1. கட்டுப்பாடு இல்லாமல் வாழ்கிறவன் கௌரவம்
    இல்லாமல் செத்து போவான்

2. பாராட்டுக்கு நாவின் ஈரம் மட்டும் போதாது,
    மனதில் ஈரமும் வேண்டும்

3. அணைய போகிற தீபத்திற்கு ஓளி அதிகம்

4. வறுமையில் நிறை காண்பவனே சிறந்த பணக்காரன்

5. வாழ்வில் நம்பிக்கை நல்லது தான். ஆனால
   அதற்கும் எல்லை உண்டு

6. கடன் இல்லாதவனே பணக்காரன்,
    உடல் ஆரோக்கியம் உள்ளவனே செல்வந்தன்

7. புத்திசாலிகள் எப்போதுமே எண்ணிக்கையில் குறைவு தான்

8. நேர் வழியில் அடைய முடியாததை
    ஒருபோதும் குறுக்கு வழியில்  அடைய முடியாது

9.  வாக்குறுதி என்பதும் ஒரு வகை கடன் தான்

10. தெரியாது என்று உணருவது அறிவை
      அடைவதற்கு ஒரு வழி

11. நமக்கு தீமை செய்பவர்களுக்கும் நாம் நன்மையே செய்யவேண்டும்

12. இறைவனை அண்டியவர்களுக்கு பிறவி துன்பம் என்றும் இல்லை.

எப்போதும் மகிழ்ந்திருக்க

1.   அமைதி, ஆனந்தம், துணிவு,ஊக்கம், நம்பிக்கை, நல்வாழ்வு,
      இவை பற்றியே நினைவுகள் உள்ளத்தில் இருக்கட்டும்

2.   நம் நிறைவன்புகளை நினைத்து மகிழ்வோம்
      இல்லாமையை எண்ணி வருந்தவேண்டாம்

3.  மற்றவர்களை போல் ஆக ஆசைபடுவது ஆபத்து நம்மை
     நாமே அடையாளம் கண்டு திருப்தி அடைவோம்

4.  நம் கையில் உள்ளவற்றை கொண்டு நல்லது செய்ய பழகுவோம் .

5.  நாம் விரும்பாத மனிதர்களை பற்றிய நினைவில்
     ஒரு விநாடி கூட  வீணாக்க வேண்டாம்

6.  மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை தரும் முயற்சியில்
     நாம் நம் துயரத்தை மறப்போம்




அனுதின‌மும் ஆனந்தமாய் வாழ்ந்திட‌

வாழ்த்துக்க‌ளோடு!


29 கருத்துகள்:

Chitra சொன்னது…

மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை தரும் முயற்சியில்
நாம் நம் துயரத்தை மறப்போம்

...One of my life's principles.
..........Good ones. :-)

சிவகுமாரன் சொன்னது…

\\நாம் விரும்பாத மனிதர்களை பற்றிய நினைவில்
ஒரு விநாடி கூட வீணாக்க வேண்டாம்///

இன்று நான் தெரிந்து கொண்ட புதிய பாடம்.

S Maharajan சொன்னது…

@Chitra //

நன்றி சித்ரா அக்கா

@சிவகுமாரன்//

முதல் வருகைக்கும் /கருத்துக்கும்
நன்றி சிவகுமாரன்

Unknown சொன்னது…

பொன் மொழிகளில் 2, 6 ஆகியவை தலைச்சிறந்தவைகள்..

Unknown சொன்னது…

எப்போதும் மகிழ்ந்திருக்க என்பதில் 5 மற்றும் 3 மிகவும் கவர்ந்தது..

S Maharajan சொன்னது…

//@பாரத்... பாரதி...//

நன்றி பாரதி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

பொன்மொழிகள் அருமை.. நண்பர்களுக்கும் அனுப்பிட்டன்.. பொன்மொழிகளை தேடித்தேடி படிக்கும் ஆர்வம் எனக்கு.. பகிர்ந்தமைக்கு நன்றி

S Maharajan சொன்னது…

நன்றி தோழி பிரஷா

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) சொன்னது…

பொன் மொழிகளும், எப்போதும் மகிழ்ந்திருக்க...பகுதியும் நல்லா இருக்குங்க..

// நாம் விரும்பாத மனிதர்களை பற்றிய நினைவில்
ஒரு விநாடி கூட வீணாக்க வேண்டாம் //

இது உண்மை தான்.. பகிர்வுக்கு நன்றிங்க :)

Sriakila சொன்னது…

பொன்மொழிகள் அருமை. ஒவ்வொன்றும் அர்த்தம் பொதிந்தவை.

S Maharajan சொன்னது…

நன்றி Ananthi (அன்புடன் ஆனந்தி)

நன்றி Sriakila

Unknown சொன்னது…

Next ?

Unknown சொன்னது…

//@பாரத்... பாரதி...//

நன்றி பாரதி

நன்றி சொன்னதற்கு நன்றி... எப்பூடி...

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

அட.. நல்லா இருக்கே!!!!!

மனோ சாமிநாதன் சொன்னது…

"பாராட்டுக்கு நாவின் ஈரம் மட்டும் போதாது,
மனதில் ஈரமும் வேண்டும்"
"வாழ்வில் நம்பிக்கை நல்லது தான். ஆனால
அதற்கும் எல்லை உண்டு"
அருமையான பொன்மொழிகள்! தொகுப்பும் அருமை!

S Maharajan சொன்னது…

//@பாரத்... பாரதி...//

அந்த"'பாரதியின்"'குறும்பு உங்களிடம் உள்ளது

//@ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி //

கருத்துக்கு நன்றி ராமமூர்த்தி

//@மனோ சாமிநாதன் சொன்னது…//

முதல் வருகைக்கும்/முத்தான கருத்துக்கும்
நன்றி அம்மா

சுந்தரா சொன்னது…

அத்தனையும் அருமையான பொன்மொழிகள்...

பகிர்வுக்கு நன்றிங்க.

S Maharajan சொன்னது…

நன்றி சுந்தரா

goma சொன்னது…

5. நாம் விரும்பாத மனிதர்களை பற்றிய நினைவில்
ஒரு விநாடி கூட வீணாக்க வேண்டாம்

5a -நம்மை விரும்பாதவர்கள் பற்றிய நினைவில் அரை நொடி கூட பாழாக்க வேண்டாம்
இதுவும் சரிதானே?

goma சொன்னது…

நாம் விரும்பாத மனிதர்களை பற்றிய நினைவில்
ஒரு விநாடி கூட வீணாக்க வேண்டாம்
அதேபோல்
நம்மை விரும்பாத மனிதர்களைப் பற்றிய நினைவில் அரை நொடி கூட பாழாக்க வேண்டாம்.
இதுவும் சரிதானே?

S Maharajan சொன்னது…

@goma//

அப்படியும் சொல்லலாம்!!
வருகைக்கு நன்றி goma அவர்களே

அன்புடன் மலிக்கா சொன்னது…

மிக அருமையான பொன்மொழிகள் மகராஜன்.


அதுசரி திருமண ட்ரீட் எங்கே?

S Maharajan சொன்னது…

//@அன்புடன் மலிக்கா//

கண்டிப்பா வச்சுடுறேன்
நன்றி அன்புடன் மலிக்கா

arasan சொன்னது…

நல்ல விஷயம் .. நண்பரே ...

உங்கள் தளத்தில் நிறைய விடயங்கள் உள்ளன ....

வாழ்த்துக்கள்

S Maharajan சொன்னது…

@அரசன்

நன்றி நண்பரே உங்கள் அன்பான கருத்துக்கு!!

Unknown சொன்னது…

மீனவர் பிரச்சனை பற்றிய விஷயத்தில் வலையுலத்தின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும் நீங்களும் குரல் கொடுங்கள் மகாராஜன் அவர்களே..
வேள்வி தீயாய் எங்கும் தீ பரவட்டும், ஆனால் நிரந்தர தீர்வை கொண்டு வந்து சேர்க்கவேண்டும். ஏனெனில் தேர்தலுக்காக கண்துடைப்பு நாடகம் நடத்தப்படக்கூடும்..

மாணவன் சொன்னது…

பொன்மொழிகள் அனைத்துமே அருமை சூப்பர்

பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நண்பரே

மாணவன் சொன்னது…

//அமைதி, ஆனந்தம், துணிவு,ஊக்கம், நம்பிக்கை, நல்வாழ்வு,
இவை பற்றியே நினைவுகள் உள்ளத்தில் இருக்கட்டும்

2. நம் நிறைவன்புகளை நினைத்து மகிழ்வோம்
இல்லாமையை எண்ணி வருந்தவேண்டாம் ///

சிறப்பான வரிகள் நாம் கடைபிடிக்க வேண்டியவையும்கூட...

S Maharajan சொன்னது…

@மாணவன்//

நன்றி நண்பரே

கருத்துரையிடுக