ஒரு ரஜினி ரசிகனின் நினைவலைகள்..............
போட்டோ கடையில் போய் நின்னா அவரு அப்போ தான் பிகு பண்ணுறாரு,சரிப்பா நீங்க போட்டோ நாளைக்கு வந்து வாங்கி கொள்ளுங்கள் அப்படின்னு சொல்ல ஒரே களேபரம்! என்னது நாளைக்கா,அண்ணே இப்போவே வேணும்,அப்படின்னு ஒரே சண்டை,சரி ஒரு மணி நேரம் கழிச்சு வாங்க அப்படின்னு சொல்ல இல்லை நாங்க வெயிட் பண்ணுறோம் நீ கொடு அப்படின்னு சொல்லியாச்சு,இதுக்கு இடையில் தலைவருடன் போட்டோ எடுத்ததை உள்ளூர் வெளியூர் அப்படின்னு ப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் போன் பண்ணி அன்னைக்கு இருந்த காசை எல்லாம் போனுகே செலவு பண்ணியாச்சு, அண்ணே எப்படியும் இன்னைக்கு பார்ட்டி கொண்டனுமுனு தம்பி சிவா சொல்ல,கடன வாங்கி நைட் பார்ட்டி வேறே.
என் திருமணம்
ஒவ்வரு மனிதனுக்கும் வாழ்வின் திருப்பு முனையான தருணம் அவனது திருமணம். அதருக்கு உண்டான ஏற்பாடு வீட்டில் எனக்கும் நடக்க,பெண் பார்த்து என் பெற்றோர்கள் முடிவு செய்ய நாளும் குறிச்சாச்சு.அந்த நாள் DEC 12,2010 ஆமா நான் நேசித்து கொண்டு இருக்கும் என் தலைவனின் பிறந்த நாள் என் திருமணநாளாக என் பெற்றோர்களாலும் ,இறைவனாலும் முடிவு செய்யபட்டது. ஒரு ரசிகனாக என் பந்தம் தலைவர் ரஜினியுடன் தொடருகிறது இனியும் தொடரும்!
இத்துடன் என் திருமண அழைப்பிதழும் இணைத்து உள்ளேன். வலையுலக நண்பர்கள் அனைவர்க்கும் நேரில் வந்து கொடுக்கவேண்டும் என்று தான் ஆசை.ஆனால் அதற்கான சாத்தியம் இல்லாதது வருத்தமே! இதையே என்நேர்முக அழைப்பாக ஏற்று எங்களை வாழ்த்துமாறு வேண்டி கொள்கிறேன்.
என்றும் அன்புடன்
19 கருத்துகள்:
//அன்புடன் மலிக்கா சொன்னது…
வாழ்த்துக்கள் மகராஜன்.
அதுசரி தற்போதுதான் திருமண அழைப்பிதழ் பார்த்தேன் அதற்குள் காணோம்..
வாழ்க பல்லாண்டு வளங்கள் அனைத்தும்பெற்று மனநிறைவோடு..
12 12-2010 அன்றுதான் என் மகளின் பிறந்தநாளும்..//
நன்றி அன்புடன் மலிக்கா
உங்கள் மகளுக்கு என் அட்வான்ஸ்
வாழ்த்துகளை சொல்லி விடுங்கள்
வாழ்த்துக்கள் மகாராஜன்...
வாழ்த்துக்கள்...
நன்றி மதுரை சரவணன்
Congratulations!!! May God bless you both!
I wish I were in India to attend your wedding. I send my thoughts and wishes, your way. :-)
நன்றி Chitra அக்கா
வாழ்த்துகள் மகராஜன்.. இனி உங்கள் திருமண நாளும் மறக்காது.. :))))
நன்றி முகிலன்
சூப்பர் தருணம்.... அதுவும் உங்களின் ஆசைப்படியே தலைவரின் பிறந்த நாளின் போது....
அன்புடன் மலிக்கா அவர்களின் மகள் அவர்களுக்கு என் அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள்....
என் திருமண ரிசப்ஷன் கூட 12 டிசம்பர் தான் நடந்தது... 13 டிசம்பர் கல்யாணம்...
உங்களுக்கு அட்வான்ஸ் திருமண வாழ்த்துக்கள்...
தோழி சித்ராவின் வாழ்த்து நன்றாக இருந்தது...
நன்றி நன்றி நன்றி R.Gopi
மகாராஜாவுக்கு மகாராணி கிடைத்துவிட்டார்...வாழ்த்துக்கள்!
நன்றி Priya
திருமண வாழ்த்துக்கள்:)!
நன்றி ராமலக்ஷ்மி
என்கிருந்தாலும் வாழ்க!!
அன்புடன்,
ஆர்.ஆர்.ஆர்.
நன்றி ஆர்.ஆர்.ஆர்.
வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் வாழ இனிமையான சந்தோஷங்களுடன் குடும்பத்தேரில் எந்நாளும் பவனி வர, கடல் தாண்டி இருப்பதனால் மடல் மூலம் வாழ்த்துக்கிறேன்...
நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்...
நன்றி
என்றும் நட்புடன்
மாணவன்
நன்றி மாணவன்
கருத்துரையிடுக