செவ்வாய், ஏப்ரல் 13, 2010

அப்பா...


எப்படி எப்படி
எல்லாமோ
தன் பாசம்
உணர்த்துவாள் அம்மா
ஒரேயொரு
கைஅழுத்தத்தில்
எல்லாமே
உணர்த்துவார்
அப்பா...
முன்னால்
சொன்னதில்லை
பிறர் சொல்லித்தான்
கேட்டிருக்கிறேன்
என்னைப்
பற்றி பெருமையாக
அப்பா
பேசிக்கொண்டிருந்ததை.

 நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை...
இருந்தும் காட்டிக்
கொடுத்த கண்ணீரைத்
துடைக்க இன்று
அப்பாவும் இல்லை..


லேசாக என் கால்
தடுமாறினாலும்
பதறும் அப்பா
இன்று நான்
தடுமாறிய போது
பதறாமல் இருக்கிறார்
மீளா துயிலில்...

என்றும் அன்புடன்

16 கருத்துகள்:

சசிகுமார் சொன்னது…

சூப்பர் நண்பா, உங்களுடைய கவிதை நன்றாக உள்ளது. உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

பனித்துளி சங்கர் சொன்னது…

அருமை . மிகவும் அழகாக சொல்லி இருக்கீங்க .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .

S Maharajan சொன்னது…

//சசிகுமார் சொன்னது…
சூப்பர் நண்பா, உங்களுடைய கவிதை நன்றாக உள்ளது. உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்//

நன்றி சசி

S Maharajan சொன்னது…

//பனித்துளி சங்கர் சொன்னது…
அருமை . மிகவும் அழகாக சொல்லி இருக்கீங்க .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன்//

நன்றி பனித்துளி சங்கர்

Pavi சொன்னது…

அப்பாவுக்காக ம்ம்மம்மம்ம்ம்ம்
நல்ல கவிதை .

Chitra சொன்னது…

சரியா போச்சு..... என்னுடைய அப்பாவின் நினைவின் அழுத்தத்தை குறைத்து கொள்ள, பதிவுலகம் பக்கம் வந்தால் ...... கண்ணீருடன் உங்கள் கவிதை அஞ்சலியை படித்தேன்.

S Maharajan சொன்னது…

//Pavi சொன்னது…
அப்பாவுக்காக ம்ம்மம்மம்ம்ம்ம்
நல்ல கவிதை//

நன்றி பவி
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

S Maharajan சொன்னது…

//Chitra சொன்னது…
சரியா போச்சு..... என்னுடைய அப்பாவின் நினைவின் அழுத்தத்தை குறைத்து கொள்ள, பதிவுலகம் பக்கம் வந்தால் ...... கண்ணீருடன் உங்கள் கவிதை அஞ்சலியை படித்தேன்.//

கண்ணீரில் உங்கள் அழுத்தம் குறைந்துவிடும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
அக்கா

சசிகுமார் சொன்னது…

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

goma சொன்னது…

அருமையான எண்ண ஓவியம், அப்பாவைப்பற்றிய உங்கள் கவிதை

S Maharajan சொன்னது…

//goma சொன்னது…
அருமையான எண்ண ஓவியம், அப்பாவைப்பற்றிய உங்கள் கவிதை//

நன்றி! நன்றி! நன்றி!

தமிழ் சொன்னது…

விழிகள் குளமாக விட்டன.

வார்த்தை இல்லை நண்பரே

S Maharajan சொன்னது…

//திகழ் சொன்னது…
விழிகள் குளமாக விட்டன.
வார்த்தை இல்லை நண்பரே//

நன்றி திகழ்

alagan07 சொன்னது…

நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை...

.........

S Maharajan சொன்னது…

//alagan07 சொன்னது…
நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை...
//

நன்றி alagan07

cheena (சீனா) சொன்னது…

அன்பின் மக்ராஜன்

இவ்விடுகை நான் ஏற்கனவே படித்ததாக ஒரு நினைவு. தெரியவில்லை மறு மொஇ இல்லாத காரணத்தினல் மறுபடியும் மறுமொழி இடுகிறேன்.

அப்பாவினைப் பற்றிய நினைவுக் கவிதை அருமை. கண்ணில் நீரோட, கவிதை மழை பொழிய், அப்பாவின் அருங்குணங்கள் எளிய சொற்களில் - நன்று நன்று

நாமே தடுமாறும் போது பதறாமல் இருக்க இயலாது அப்பாவால் - அவரது பதற்றமே நம்மைக் காக்கும் கவசம் மகராஜன்.

நல்வாழ்த்துகள் மக்ராஜன்
நட்புடன் சீனா

கருத்துரையிடுக