இது நாள் வரை பதிவுலக நண்பர்கள் பலர் "தலைவர் ரஜினியை"விமர்சித்தி எழுதிய எந்த பதிவுக்கும் நான் கோவமாக பின்னுட்டம் கூட இட்டது கிடையாது. நேற்று நண்பர் ஒருவர் பதிவை பார்த்த போது அதில் எந்திரன் படத்துக்கு கேவலமாக வாழ்த்து தெரிவித்து இருந்த ஒருவருக்கு காட்டமாக பதில் சொல்லி இருந்தார்.வாழ்த்து சொன்ன அந்த நபர் தன் "பக்கங்களில்" எவ்வாறு குறிப்பிட்டு இருந்தார் என்றால் "சீக்கிரம் அந்த ’சனியன்’ வந்து தொலையட்டும் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்ளலாம்." அதன் பின் அவர் பக்கங்களில் (பதிவுகளில்௦௦௦) சென்று நான் படித்த போது தான் தெரிந்தது அவரருடைய கேவலமான பேச்சு (பதிவு) எப்படி இருந்தது என்று.
150 கோடியில் சன் நிறுவனம் படம் தயாரிப்பது குற்றமாம்?
அதில் ரஜினி நடிப்பது மாபெரும் குற்றமாம்?
வளரும் படைபாளிகளை எந்திரன் நசுக்கி விடுமாம்.
எந்திரன் என்ன ரஜினி நடிக்க இயலாத படமா? என்னவோ தமிழ்நாட்டை சன்டிவியும்,ரஜினியும் சேர்ந்து கொள்ளை அடிப்பதாக இவர்களின் புலம்பல்கள். இவர்களுக்கு ரஜினி என்றால் ஏன் பிடிக்கவில்லை என்று தெரியவில்லை எவ்வளவு தரம் தாழ்த்தி முடியுமோ அவ்வளவு பேசவும் ஏசவும் செய்து விட்டு,ஹைலைட்டாக காமெடி வேறே செய்வர்கள் முன்பு இவர்கள் எல்லாருமே ரஜினி ரசிகர்களாம்.ஆனால் இப்போது தான் இவர்களுக்கு ரஜினியை பிடிக்காதாம்.
அவர் முன்பு இருப்பது போல இருந்தால் இன்று அவரை பற்றி இவ்வளவு பேசவும்,எழுதவும் முடியுமா? பல வருடங்களுக்கு முன்பு ஒரு முறை கமல் ஏதோ சொல்லி விட்டார் என்று அவரை அடிக்க பாய்ந்தவர் ரஜினி என்று இங்கே எத்தனை பேருக்கு தெரியும்? அதன் பின் தன் தவறை உணர்ந்து இன்று வரை கமலிடம் நட்பு பாராட்டி வருகிறார்,பிறகு பிரபலம் கொடுத்த அதிகாரத்தை அவர் தனது எதிரிகளின் மீது ஒருபோதும் பிரயோகித்தது இல்லை. இருபத்தைந்து வருடங்களா தன்னை நம்பி பணம் போட்ட தயாரிபாளர்களை அவர் என்றுமே ஏமாற்றவில்லை.தமிழ் சினிமாவை உலக வர்த்தகத்துக்கு கொண்டு சென்ற ஒரே நடிகர் ரஜினி மட்டுமே! சிவாஜி,எம்ஜிஆரை விடக்கூட ரஜினி ஒரு படி மேலேதான் நிற்கிறார்.அவரை விமர்சிபவர்களை கேலவமாக என்னாலும் எழுதமுடியும் ஆனால் நான் அதை செய்ய விரும்பவில்லை
நான் ரஜினி வெறியன்
ஆரம்பத்தில் இருந்தே உண்மை ரஜினி ரசிகர்கள் இன்று வரை அவரது உண்மை ரசிகர்களே. அடிக்கடி நிறம் மாற நாங்கள் பச்சோந்திகள் அல்ல.! இவர்களுக்கெல்லாம் ஒன்று சொல்லுகிறோம்
ரஜினி தனி மனிதன் அல்ல....
நான் எந்திரன் னை 100 முறை பார்பேன்
இந்தத் பதிவு எழுதகாரணமாகஇருந்த "பாகீரதி" கார்த்திக்க்கு என் நன்றிகள்
என்றும் அன்புடன்