வெள்ளி, ஜூன் 25, 2010
திருமணநாள் நல்வாழ்த்துக்கள்
என் சுக துக்கங்களில் பங்குஎடுத்து கஷ்டபட்ட நேரத்தில் கை கொடுத்து உதவி என்னை ஆசுவசபடுத்திய நண்பன்.எல்லாரும் உன்னை தவறா சொல்லுகின்ற தருணத்தில் கோவபடதே!உனக்கு என்ன இல்லை சொல்லு உன்னை கேவலமாக நினைத்தவர்கள் முன்னால் நீ வாழ்ந்து காமி உன்னாலே முடியும் என்று நம்பிக்கை ஊட்டிய தோழன் கிருபானந்தன்.இன்னும் அதிகமாக சொல்லலாம் ஆனால் அவன் அதை விரும்ப போவதில்லை. புகழ்வதால் மட்டுமே தொடருவதில்லை எங்கள் நட்பு!
மனித உறவுகளில் எல்லாம்
மகத்தானது நட்பு..!
என்னோடு சேர்ந்து நீங்களும் வாழ்த்துங்கள் அவனுக்கான
இந்த திருமண நாள் (25-06-10) தினத்தில்.....!
என்றும் அன்புடன்
Labels:
வாழ்த்து
திங்கள், ஜூன் 21, 2010
வருந்துகிறேன்
தெரிவித்து கொள்கிறேன்.
அலுவல் பணி அதிகமாக இருபதாலும்,அலுவலகத்தில் தமிளீஷ் சரியாக வராத காரணத்தினாலும் நண்பர்களின் வலைதளதிற்கு என்னால் சரியான நேரத்துக்கு வர இயலவில்லை என்பதனை (வருத்ததோடு) தெரிவித்து கொள்கிறேன்.
காலையில் பைசல் செய்ய முடியாதை மாலையில் வீட்டிற்கு சென்று பைசல் (வோட்டு) செய்து விடுவேன் என்பதனையும் உறுதியோடு கூறி கொள்கிறேன்

தெரிந்து கொள்ளுங்கள்
ஞாயிறு, ஜூன் 20, 2010
ராவணன் - விமர்சனம்
திருநெல்வேலி மாவட்டத்திற்கு அருகே உள்ள ஒரு கிராமத்தில் வாழும் விக்ரம், பழங்குடி மக்களுக்கு சகலமுமாக இருப்பவன். ஆனால் சட்டத்தின் பார்வையில் அவன் மோசமானவன். விக்ரமின் கொட்டத்தை அடக்க அந்த ஊருக்கு வரும் காவல்துறை அதிகாரி பிருத்விராஜ், அவருடைய மனைவிதான் ஐஸ்வர்யா ராய்.
விக்ரமின் தங்கைக்கு திருமணம் நடக்கும்போது அதிரடிப் படை அந்த இடத்தில் நுழைந்து விக்ரமை போட்டுத் தள்ளப் பார்க்க, குண்டு காயத்துடன் அவர் தப்பிக்கிறார். உடனே அவர் தங்கை ப்ரியாமணியை தூக்கிப் போகும் அதிரடிப் படையினர், அவளை கற்பழிக்கிறார்கள். வீடு திரும்பும் அவள் விக்ரமிடம் அனைத்தையும் சொல்லிவிட்டு தற்கொலை செய்து கொள்கிறாள்.
இதற்கு பழிவாங்க பிருத்விராஜின் மனைவி ஐஸ்வர்யா ராயை கடத்தி காட்டுக்குள் வைக்கிறார் விக்ரம். கடத்தப்பட்ட மனைவியை மீட்கவும், விக்ரமை கொல்லவும் ஒரு படையுடன் காட்டுக்கு புறப்படுகிறார் பிருத்விராஜ். அப்படி புறப்பட்டவர் காட்டு ராஜாவாக வலம்வரும் விக்ரமை பிடித்தாரா? இல்லையா? என்பதே மீதி கதை!
விக்ரம் நடிப்பில் அக்குவேறு ஆணிவேராக பிரித்து மேய்ந்துள்ளார். கோபம், அமைதி, சிரிப்பு, தவிப்பு, தாபம், வெறி, சோகம் என நடிப்பின் அத்தனை பரிமாணத்திலும் கலக்குகிறார். அதிகமான ரிஸ்க் எடுக்கும் காட்சிகளிலும் சர்வசாதாரணமாக சாகசம் புரிந்திருக்கிறார்.
ஐஸ்வர்யா ராய்க்கு அழகு குறையவே குறையாது போலிருக்கிறது. அப்படியே விக்ரமுக்கு பயப்படாமல் எதிர்த்து நிற்கும் ஐஸ்வர்யா, விக்ரமின் பேச்சில் சலனம் ஏற்பட்டு அதற்கு அவர் கொடுக்கும் முகபாவனை பிரமாதம்
பிருத்விராஜ், பிரபு,கார்த்திக்,ப்ரியாமணி என்று அனைவரும் தத்தம் தங்களுது பங்களிப்பை செவனே செய்து உள்ளனர்.
படத்தின் இன்னுமொரு நாயகன் சந்தோஷ் சிவன் அத்தனை காட்சிகளிலும் ஒளிப்பதிவு சூப்பரோ சூப்பர்! தமிழில் வேறு எந்தப் படத்திலும் இத்தனை அழகான இயற்கைக் காட்சிகளைப் பார்த்திருக்க முடியாது
வசனம் சுஹாசினி (மஹா சொதபல்)திருநெல்வேலித் தமிழ் இத்தனை கொடூரமானதா? என்று திருநெல்வேலிகாரணன எனக்கே சந்தேகத்தையே எழுப்பி விட்டது சுஹாஸினி படத்தில் வைத்திருக்கும் ஸ்லாங்கைப் பார்த்து! ஓர் இரு இடங்களில் அப்படியே சித்தப்பா கமல் தெரிகிறார்.
உங்க சாமி எப்படி இருப்பர் ?
ரொம்ப நல்லவரோ?
படத்துக்கு மற்றொரு பலம் ஆஸ்கார் நாயகனின் இசை
வழக்கமான மணிசார் படம் இல்லை நெறய லாஜிக் சொதபல்.
மொத்தத்தில் ராவணன் பார்க்கலாம் ரகம்.
என்றும் அன்புடன்
Labels:
சினிமா விமர்சனம்
செவ்வாய், ஜூன் 15, 2010
திங்கள், ஜூன் 07, 2010
"50" வது பதிவு! நன்றி பதிவு!
நன்றி பதிவு!
ப்ளாக் எழுத் போகிறேன் என்றதும் அதருக்கு உர்துனையாக இருந்த சுரேஷ் அண்ணாவிற்கு முதல் நன்றி.முதலில் என்னை பின் தொடர்ந்த "முகிலனுக்கு" நன்றி,முதல் விருதை கொடுத்தஎன்னை பெருமை படித்திய தோழி "திவ்யா ஹரி"க்கு நன்றி.(இவங்களை இப்போ கொஞ்ச நாளாகவே பிளாக் பக்கம் காணோம்),தொலைந்த நட்பை பிளாக் முலம் மீட்டு எடுத்து கொடுத்ததும் மட்டுமல்லாது,தவறாமல் வந்து பின்னுட்டம் அளித்து உற்சாகபடுத்தும் "சித்ரா அக்கா"வுக்கு நன்றி.இரண்டாவது விருது கொடுத்ததோடு அல்லாமல் பிளாக்இல் எனக்கு ஏற்படுகின்ற சந்தேகத்தை மினஅஞ்சல் முலம் தெளிவுபடுத்துகின்ற தோழர் "சசி"க்கு நன்றி. "வேலன்" சார்க்கு நன்றி,ஜோக்கிரி "கோபி"க்கு நன்றி
வலைசரத்தில் என்னை அறிமுகபடுத்தி பெருமை கொடுத்த நண்பர் "ஸ்டார்ஜன்" க்கு நன்றி. கவிதையோடு வந்து வாழ்த்து சொல்லுகின்ற கவிதாயனி "அன்புடன் மலிக்கா"க்கு நன்றி. வாழ்த்து சொல்லி வாழ்த்துகின்ற என் நெல்லை மண்ணின் வேங்கைகள் "கோமா,அன்புடன் ஆனந்தி,கௌசல்யா" ஆகியோருக்கும் நன்றி
தோழி "பவி"க்கும் ,தோழி "தாருஹசினி"க்கும் நன்றி.தவறாமல் வந்து ஆலோசனை வழங்கும் "மங்குனி அமைச்சருக்கு" நன்றி.தோழர் தேவா வுக்கு நன்றி,தோழி சுபிவன்யா (பிரேமா மகள்),தமிழ் அமுதன்,விஜய்,முனைவர் குணா,குரு,என் இனிய இல்லம் சிநேகிதி,செல்ல குரு அடிகடி என் தளத்தை குளிருடுகின்ற பனிதுளி ஷங்கர்,ஒரே முறை மட்டும் என் குடிலுக்கு வந்து வெளிச்சம் தந்த நிலாமதி,இந்த நெல்லை எக்ஸ்பிரஸ்லயும் பயணம் செய்த நாஞ்சில் எக்ஸ்பிரஸ், ரியாஸ்,முஹம்மத்,சௌந்தர் ,ரமேஷ் ரொம்ப நல்லவன்,
பின்னுட்டங்களில் காட்சி தராவிட்டாலும் தமிழிஷ் ஒட்டு வங்கியில் தொடர்ந்து காட்சி தந்து கொண்டு இருக்கின்ற "அண்ணாமலையாருக்கும் (எப்படி எல்லாம் உங்களை பின்னுட்டம் போடா கூப்பிட வேண்டி இருக்கு வாங்க சார் வாங்க) கும்மாஞ்சி,நாடோடி.பாஸ்கர் அண்ணன்,சுதாகர் ( வேறு யார் பெயராவது விட்டு போகி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்) என்னை(யும்) நம்பி என்னுள் கலக்க போகின்ற "அமுத" மாணவளுகும் நன்றி.
பதிவுலகத்திற்கு வந்து இந்த நான்கு மாதத்தில் நான் தொடும் 50 வது பதிவு இது.ஆரம்பத்தில் எழுத நினைக்கும் போது நாம் எனன எழுத்போகிறோம்,யார் நம்மை பின் தொடருவார்கள் என்றெல்லாம் எண்ணியது உண்டு.ஆனாலும் என்னை தொடருகின்ற இந்த 30
பாலோவேர்ஸ் மற்றும் என் தளத்திற்கு வந்து சென்ற வர போகின்ற எல்லோருக்கும் நன்றியாக இந்த பதிவை சமர்பிக்கிறேன்.
நன்றி! நன்றி! நன்றி!

நன்றி
செவ்வாய், ஜூன் 01, 2010
இசைக்கு 67வது பிறந்தநாள்
இசைக்கு அகவை 67"
தமிழ் இசை உலகை தரணி எங்கும் மனம் கமழ வைத்த இசை பிதாமகன்.இந்தநூற்றாண்டின் கலைஞன் ராகதேவன். தாய்ப்பாலைப் போல சுரக்கும் ராஜாவின் இசையே தமிழனின் கண்ணீரும் புன்னகையும். இயற்கையின் மௌனத்தையும் இறைவனின் தரிசனத்தையும் இசையாக்கியவர் இளையராஜா... அந்த இசைமேதையின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் குரலில் சில பாடல்கள் உங்கள் செவிக்கு.
ஒரு நிமிடம் கண்மூடி இந்த பாடலை கேளுங்கள்,ஆரம்பத்தில்
ஒலிக்கின்ற மந்திரத்தோடு தெய்வீக மனம் கமழும் பாடல்
சென்னைநேருஉள்விளையாட்டரங்கிலஇளையராஜாவின்இசைக்கச்சேரிநடந்துகொண்டிருந்தது. அப்போது நிகழ்ச்சி நடத்துனராகப் பொறுப்பேற்ற இயக்குநர் ஆர்பார்த்திபன் இப்படிச் சொன்னார்:‘இந்தப் பாடல் ஆரம்பத்துல ராஜா சார் ஒரு லாலா பாடுவார். அதைக் கேட்டு முடிச்சதும் அந்த இனிமையோடவேசெத்துரலாம் போல இருக்கும். அவரோட பாடலுக்காக நான் உண்மையிலேயே உயிரைக்கூட தருவேன்’, என்று உணர்ச்சி வசப்பட்டது நினைவிருக்கலாம். .நீங்க மட்டுமா பார்த்திபன் சார் நாங்களும்தான்..
ஆரம்ப காலத்தில் ராஜா அவர்கள்கிராமத்து மண் வாசனை இசை யை மட்டுமே கொடுத்து கொண்டு இருந்தார் அப்போது சில அதி மேதாவிகள் சொன்னார்களாம்,இவர்ற்கு கர்நாடக இசையே வராது என்று,அவர்கள் முகத்தில் கரியை"சிந்துபைரவி" படத்தின் முலம் தன் இசையால் பூசியவர் நம் இசைஞானி அவர்கள்
இந்த உலகத்தில் சுத்தம் உள்ள மனிதர் யாருமே இல்ல
என்று ராகதேவன் சொல்லும் தத்துவ பாடல்.
இது இந்த கலைஞன்னுக்கே உரித்தான பாடல் நேற்றல்ல
இன்றல்ல என்றுமேஇசைக்கு நான் மட்டுமே
வாழ்க எங்கள் இசையே நீவிர் பல்லாண்டு!

நான் பேசுவதை விட என் ரசிகர்களோடு என் இசை மூலம்தான் பேசகிறேன் - இளையராஜா
வாழ்க எங்கள் இசையே நீவிர் பல்லாண்டு!
Labels:
இளையராஜா
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)